மெகா போட்டிக்கு, சின்னதா ஒண்ணே ஒண்ணு

சுத்தமா எனக்கு ஒத்து வராத சப்ஜக்ட். பேசாம சைலண்ட்டா இருந்துடலாம்ன்னு பாத்தா இதுக்கு முன்னாடியே பல பேருக்கு போட்டில கலந்துக்கறது பத்தி ஓவர் அட்வைஸ் பண்ணிட்டேன். அவங்கள்ளாம் திருப்பி அட்வைசினா தாங்க மாட்டேன்.ஜீவ்ஸ் வேற மானம், மரியாதைன்னு ஒரு லெக்சர் கொடுத்தார்.

ஓகே கடைசில ஒரே ஒரு படம் மட்டும். இதுவும் பொன்னு வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல. ஒப்பேத்தல்தான்



எனக்கென்னமோ இந்த மாதிரி ஆள் இல்லாத சின்னகோவில்கள்தான் கடவுள்ன கான்செப்ட்டுக்கு பக்கத்துல வர மாதிரி தெரியும். நாமளா போய் கும்பிட்டுட்டு நெத்தில நாமளே திருநீர் அள்ளி அப்பிகிட்டு அக்கடான்னு அரை மணி நேரம் உக்காந்துட்டு வந்தா ஒரு திருப்தி கிடைக்கும்.

கூட்டமான கூட்டம் நெரியும் இடத்துல எப்படி கடவுள்தண்மையை உணர்ராங்கன்னுதான் தெரியல.

சரி அதெல்லாம் அவங்கவங்க நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாத எனக்கெதுக்கு இந்த கவலை.

படத்த பாத்து நாலு திட்டு திட்டனும்னா திட்டிட்டு போங்க. படத்துல பல தப்பு இருக்கு :(

காற்றில் கரைபவர்கள்

ஒரு மனிதன் காற்றில் கரைவது என்பது சினிமாவில் ஸ்டாப்ப்ளாக்கில் மறையும் காமெடி சீன்களில் மட்டுமே சாத்தியம். நிஜத்திலா? எனக்கு தலையை சுற்றியதுடன் அதை என்னிடம் சொன்ன "ரா" உயரதிகாரியின் மனநிலையை சந்தேகப்படவும் வைத்தது.

நேர்மையும் திறமையும் மிக்க அரசாங்க ஊழியர்களில் பொறுக்கி எடுத்த சிலர் வேலையிலிருந்து விடுவிக்கப்படுவர். அவர்களுக்கு சில சிறப்பு பயிற்சிகளுக்குப் பின் அவ்வப்போது சில வேலைகள் கொடுக்கப்படும்.யார் வேலை கொடுப்பதென்பது தெரியாது. ஆனால் அவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும். அதில் நானொருவன்.

குடகுமலைப்ரதேசத்தில் பைதுளா எனும் 1000 குடும்பங்கள் வசிக்கும் ஊரில்தான் இந்த வினோதம். மிக நேர்மையான சுதந்திர உணர்வும் வீரமும் மிக்க அமைதியான மக்கள். வேட்டையில் ஆர்வம்மிக்கவர்கள். நமது சட்டங்களை மதிக்காதவர்கள்.ஊர் கட்டுப்பாடு மிக்க அவர்களால் எந்த ஒரு சிக்கலும் வராது.அவர்களுக்கு துப்பாக்கிக்கான உரிமம் மட்டுமல்ல தோட்டாக்களுக்கும் கணக்கு தேவையில்லை. சுதந்திரத்திற்கு முன்பிருந்து அரசாங்கம் கொடுத்திருக்கும் சலுகை அது. அங்குதான் 15 நாட்களுக்கு ஒரு முறை நடை பெறும் கோயில் பூஜையில் பூஜைக்கு ஒருவர் என்ற முறையில் காணாமல் போக ஆரம்பித்தனர்.

இது "ரா" வரையில் போக காரணம். சுதந்திர உணர்வும் வீரமும் கணக்கு தெரியாத அளவு ஆயுதங்களும் கொண்ட மனிதர்களை யாரேனும் தவறாக வழி நடத்துகிறார்களா என்பதே.

இந்த ப்ரச்சனையை கண்டறிவதுதான் மகா நேர்மையாளன் என்று மற்றவர்களால் இகழப்படும் எனக்கான அசைன்மெண்ட்.

என்னளவில் கடவுளோ அவரால் நிகழ்த்தப்படும் அற்புதங்களோ இவையெல்லாம் ஏமாற்று வேலை அல்லது அறியாமைதான்.
ஆனால் எப்பொழுதும் ஒரு சம்பவத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராயவேண்டும். முதலில் ப்ரொபசர் சாம்பசிவத்திடம் இதைப் பற்றி கூறினேன்.

"ஹாஹா வினோதம்தான். இது வரை தானாக தீப்பிடித்து எரிந்த கேஸ் சில மருத்துவ வரலாற்றில் இருக்கு. காற்றில் மறைந்து போவது என்பது சான்ஸ்லெஸ்" என்றார்.

அடுத்து அவர்கள் மறைந்ததாக நீ சொல்லும் தேதிகள் பவுர்னமிக்கும் அம்மாவாசைக்கும் மிகச்சரியாக இடையில் வரும் அஷ்டமி அன்று. அன்று நிலவின் ஈர்ப்பு விசை நமது பூமி மீது மிகக்குறைவாக இருக்கும். பவுர்னமி அல்லது அம்மாவாசையில் மிக அதிகமாக இருக்கும். அந்த ஈர்ப்புவிசை பொதுவாக ஊர்வனவற்றின் மீது கொஞ்சம் அதிகமாக ஆளுமை செய்யும் இந்த சமயங்களில் அவை molting process எனப்படும் தோலுறிக்கும் நிகழ்வு நடக்கும். கடலலைகளின் சீற்றத்தில் வித்தியாசம் தெரியும் . ஆனால் மனிதனின் மீது நிலவின் ஈர்ப்பு விசையின் தாக்கம் சொற்பமே என்றாலும் மாறுதல்கள் ஏற்படும். அம்மாவாசையில் பைத்தியங்கள் கொஞ்சம் அதிகமாக ரகளை செய்வது போல். இதைதவிர இதில் எதுவும் இல்லை என்றார்

ஓகே ப்ரொபசர், உங்கள் ப்ராக்டிக்கல் அனுபவத்தை அப்படியே தூக்கி வைத்துவிடுங்கள். இந்த சம்பவத்தில் உள்ள சாத்தியமில்லாத சாத்தியங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். என்றேன். என்னை ரசித்து கொஞ்சநேரம் புன்னைகையுடன் பார்த்தவர் "ஓகே மை பாய், நொடிக்கும் குறைவான நேரத்தில் அந்த இடத்தை விட்டு அகலுவது எனில்,
ஒளி வேகத்தைவிட வேகமாக சேல்லும் ஒன்றின் மீது அவர்கள் பயனித்திருக்கலாம். கால இயந்திரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? இது வேண்டுமென்றால் உன் சாத்தியமில்லாத சாத்தியங்களுக்குள் வரலாம். கடவுள் ஒருவனை அப்படியே ஏற்றுக்கொண்டார் எனும் உளரலைவிட கால இயந்திரம் சற்று சாத்தியமே". ம்ஹூம் நான் இப்படி சொல்வதை யாராவது கேட்டால் எனக்கு உடனடி கீழ்பாக்கத்தில் அட்மிசன்தான் என்று சிரித்தார்.

இன்னுமொரு கோணத்தில் இதை விசாரிக்க தோன்றியது. பைதுளா சென்று சேர்ந்தேன். பைதுளாவில் இருந்து 60 கிமீயில் சித்தர்கள் பூமி எனப்படும் பைதுளா மக்கள் வணங்கும் ஒரு இடம் பற்றியும் அங்குள்ள குகையில் இருக்கும் ஒரு சாமியார் பற்றியும் அறிந்து அவரை காணசென்றேன்.

குகை வாசலில் இருந்த அவர் என்னைக்கண்டதும் என் கண்களையே உற்றுப்பார்த்தார். பெரும்ப்ரயத்தனதிற்கிடையில் என் எடை போடும் சந்தேக கண்களை அமைதிப்படுத்தினேன்.சாமியார்கள் முதலில் தங்களிடம் வருபவர்களை கண்களால் யூகித்து அதை வைத்துத்தான் அள்ளி விடுவார்கள். எத்தனை பார்த்திருக்கிறேன்.

சாமியார் ஒரு குறுஞ்சிரிப்பு சிரித்தார்.குறுகுறுப்புடன் பார்த்தார்."உன் எடையில் எத்தனை பங்கு நீரென்று தெரியுமா?மேலும் கீழுமாக தலையசைத்தேன். இந்த குகைக்குள் இருக்கும் காற்றில் எந்த அளவு நீரென்று தெரியுமா? அதற்கும் மேலும் கீழுமாக...இரண்டும் ஒன்றென்றால் காற்றில் மறைவது ஒரு விஷயமா?"

நான் கேட்காமலே எப்படி?ம்ம்ம் யூகித்திருக்க வேண்டும். பக்கத்து ஊர் பிரச்சனையல்லவா? சாமர்த்தியத்தை இங்கே காட்ட கூடாது. நடிடா மகனே நடி. அருகில் சென்று பக்தியுடன் தலை குனிந்து "சாமி அப்போ மறைந்து போகிறவர்கள் எங்கேதான் போறாங்க. எதுக்கு போறாங்க? எப்படி போறாங்க?" என்றேன்.

குனிந்த என் பின்தலையில் கை வைத்து நிமிர்த்தியவர் என் கண்களை உற்றுபார்த்தார்.கிட்டத்தட்ட இரண்டு நிமிடம்.பின்தலையில் இருந்த கை உச்சந்தலைக்கு வந்தது. கனிவாகச் சிரித்தார். அதே வேகத்திள் குகைக்குள் போய்விட்டார்.குகைக்குள் மற்ற மனிதர்கள் போகவே கூடாதென்று முன்னமே எச்சரிக்கப்பட்டிருந்தேன்.
இவனுங்களைப்புடிச்சு முதலில் உள்ளே போடவேண்டுமென்று எரிச்சலுடன் முனகியவாறே பைதுளா திரும்பினேன்.

ஆக நேரடி ஆக்சன்தான் இனி. இதில் அசைன்மெண்ட்டில் சொல்லப்பட்டது ஒரு சின்ன ப்ரச்சனைக்கூட என்னால் வரக்கூடாது என்பது.வெளி ஆட்கள் பைதுளாவில் தங்கக்கூடாது என்பது அவர்களின் விதி.

சிறு வயதில் காணாமல் போன அந்த ஊர் பையனின் பெயரை சொல்லி அது நான்தான் என் நம்பவைத்தேன். சங்கிலி என்பவனை சிநேகமாக்கினேன் .அதன் பின் சமூகத்திற்கான சடங்குகள் எனக்கு செய்யப்பட்டன. பின்கழுத்தில் குத்தப்பட்ட பச்சை உட்பட. ம்ஹூம் இந்த கேஸ் முடிந்ததும் ப்ளாஸ்டிக் சர்ஜரியெல்லாம் செய்ய வேண்டி வரும் போல.

அதன்பின் அடுத்த ஒரு மாததில் நான் கண்டுபிடித்தவை.

கோவில் ஊரில் இருந்து ஒரு கிலோமீட்டரில் ஒரு பாறைக்கு அடியில் விசாலமாக குகை குகையாக இருந்தது.அதில் எந்தவித ரகசிய வழிகளும் இல்லை.
அஷ்டமி அன்று நடைபெறும் பூஜையில் பூஜை முடிந்தவுடன் தீப்பந்தங்களை அணைத்து இருட்டில் மிகப்பெரிய முரசு மூன்று தடவை அடிக்கப் படுகிறது. திரும்ப பந்தங்களை பற்ற வைத்துப்பார்கையில் ஒருவன் மாயமாகியிருக்கிறான்.

அந்த பூஜைக்கு முன்பு ஒருவாரத்துக்கு சில பூஜைகள் நடக்கிறது. அதன் பின்பான ப்ரதான பூஜையில் ஐந்து நபர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
ப்ரதான பூஜையில் கலந்து கொள்ளுபவர்களில் ஒருவர்தான் மாயமாவது நடக்கிறது. அதிலும் அதன்முன் ஒரு வாரகால பூஜைகளிலும் கலந்து கொண்ட ஆள்தான் மாயமாகிறான்.

அதிலும் மறைந்து போனவர்கள் அனைவருமே மிக நல்ல மனிதர்கள். அதனாலேயே ஊரில் கடவுள் செயலாக அது மதிக்கப்பட்டது.
எங்கே எப்படி மறைகிறார்கள் என்பதில் ஒரு சின்ன உறுத்தலைத்தவிற மற்றவைகளில் ஒரு தெளிவு வந்தாகிவிட்டது.
கோவில் உள்ளே சுத்தபடுத்தும் பொறுப்பினுள் புகுந்ததாலே எல்லா இடங்களிலும் பல சென்சர்கள் பதிக்கப்படுவது எளிதாயிற்று.

அதன் பின் அந்த ஒரு வார பூஜைகளிலும் சங்கிலியுடனே இருந்து அதேசமயம் சங்கிலியை தவிற மற்றவர்கள் ஏதாவது ஒரு பூஜையையாவது தவற விடும்படி செய்தேன் .

இப்போது அடுத்து மாயமாகும் ஆள் சங்கிலி என்பது தெளிவாகிவிட்டது.பூஜையன்று சங்கிலி அறியாதவாறு சங்கிலியின் ஆடைகள்,ஆபரணங்கள் வழியாக சில GPS உபகரணங்கள் சேர்க்கப்பட்டது.இனி சங்கிலி உலகத்தில் எங்கு போனாலும் கண்டுபிடித்துவிட முடியும்.

எனக்கு லேசாக உறுத்திக்கொண்டிருந்த விஷயம் ஒரு மர வளையம். ப்ரதான பூஜையில் மாயமாவதற்கு முன்பு ஒரு வளையம் போண்ற ஒரு மரத்திணுள் நின்றுதான் ஐவரும் வணங்குவர். அந்த மரவளையத்தை ஒரு கால இயந்திரமென்ற அளவுக்கு இல்லையென்றாலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மர்மத்தின் மைய புள்ளியாக சந்தேகித்தேன். இந்த தடவை அதையும் விடக்கூடாது.

அனைத்து சடங்குகளிலும் சங்கிலியின் உடனேயே இருந்தேன். கடைசி ப்ரதான பூஜை சங்கிலியை ஒட்டி உரசியவாரே நின்றுகொண்டேன்.

பந்தம் அணைக்கப்பட்டது.

டம்ம்ம்ம்ம்ம்ம்...
மர வளையத்தில் ஒரு கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன்.

டம்ம்ம்ம்ம்ம்ம்...
சங்கிலியோடு இன்னும் நன்றாக ஒட்டிக்கொண்டேன்.

டம்ம்ம்ம்ம்ம்ம்





சிரில் அலெக்ஸின் போட்டிக்காக

இரவு நேர படங்கள்.

வந்துட்டோம்ல. அஞ்சு படம் இருக்குங்க. இதுல புளி போட்டு விளக்க ஒண்ணும் இருக்க மாதிரி தெரியல. அப்புறம் எதுக்கு ஜல்லிஅடிக்கனும். எதாச்சும் டவுட்டுன்னா சொல்லுங்க. முதல் படம் போட்டிக்கு

நிலாவுடன் அளாவும் கொடி
செடிகள் தூங்குமா?
பெங்களூர்
Banglor
எங்க வீட்டு நிலா
நிலாவுக்கே மெழுகுவர்த்தி வெளிச்சமா?

வானத்து நிலா
Half moon
குடிசை விளக்கு
Night light

அவ்ளோதாங்க.

ஃப்ளிக்கர் படங்கள் தெரியாதவங்க.எல்லா படத்தையும் பெரியதா பார்க்க வழக்கம் போல இங்கே

நாங்கள்ளாம் பிஸி... இப்படிக்கு பட்டாம்பூச்சி

நம்ம PIT டீம் ஆளுங்க எல்லாம் ஸ்ட்ரீட் போட்டோகிராபில அநியாயத்துக்கு ஆர்வமாயிட்டாங்க. இந்த மாச போட்டித்தலைப்புக்கு கூட அதான் காரணமா இருக்கும்.

ஆனா எனக்கு என்னமோ இந்த மனுசப்பயல படம் எடுக்க புடிக்க மாட்டேங்குது. அதுவுமில்லாம ஸ்ட்ரீட் போட்டோகிராபின்னு போனாலே சந்தோஷமான முகங்களை விட துயரத்தை காட்டும் படங்கள் தான் எடுபடுது.

சிலது எடுத்துப்பாத்தேன் எனக்கு அது ஒத்துவரதா தெரியல.

நான் இதுல நம்ம மோகன்தாஸ் மாதிரி "நம்ம நாட்ட ரிச்சா காட்டமுடிஞ்சா காட்டுங்க,இல்லன்னா படமே எடுக்காதீங்க" ன்னு சொல்ற ஆளு இல்லைதான். இருந்தாலும் துயரம் சோகம் லாம் இல்லாத படம்தான் எனக்கு பிடிக்குது.


அதுக்கு நம்ம புழு பூச்சி செடி கொடிதான் ஒத்துவரும்.

நல்ல வேளை உயிரினங்கள்ன்னும் தலைப்புல கொடுத்துட்டாங்க. மனுசனுக்கு மட்டும்தான் வேலையா?

1.மறுபடியும் பட்டாம்பூச்சிதான் :)

On duty


வாழ்க்கை முழுசும் வேலைதான். எத்தனை பூ தேடனும்? வெயில்லாம் பாக்க முடியாது.தேன் தேடி தினமும் சுத்தலன்னா புவ்வாக்கு லாட்டரிதான். எந்த பறவை எந்த நேரத்துல வேணாலும் புடிச்சு திண்ணுடலாம்.இப்படில்லாம் பாத்தா சோகம்தான்

ஆனா பட்டாம்பூச்சி படத்த பாத்தா நமக்கு சோகமாவா தெரியுது. ஆனா ஒரு மனுசப்பய மூட்டை தூக்கற படத்த பாத்தா மட்டும் ஏன் உச்சு கொட்றோம்?

2. இது போட்டி அறிவிப்புக்கு முன்னாடியே எடுத்தது.

Busy bee

தேனீக்கும் விளக்கம் கொடுத்தா அடிக்க வந்துடுவீங்க. வேலைக்கார தேனீக்கள் மட்டுமே தேன் சேகரிக்கும்ன்னு உங்களுக்கு தெரிந்திருக்கும். தலைப்புக்கு செம மேட்ச் தானே? :P

3. எரும்பு...



இந்த குட்டியூண்டு எரும்பு எதையாச்சும் தூக்கிட்டு போகும்போது எடுத்தா செம மேட்சிங்கா இருக்கும்னு நெனச்சேன். ஆனா படாத பாடு பட்டும் இவ்வளவுதான் கிடைச்சது. கொஞ்சம் பெரிய எறும்புகள புடிச்சிருந்தா தெளிவா வந்திருக்கலாம் ( யோவ் சித்தெரும்பையா எடுக்க ட்ரை பண்ணுன? இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலயா... இது ஜீவ்ஸ் சொன்னது :P )

முடிந்த அளவு புதிதாக எடுக்கும் படத்தையே போட்டிக்கு கொடுக்க நினைப்பதால் முதல் படத்தை கொடுக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க நீங்களாம்?

Flickr படம் தெரியாத ஊர்காரவுகளுக்கு இங்க

ஜோடி போட்டிக்கு.... கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு.. இந்த படம் பாத்தா

இந்த தடவைதாங்க போட்டித்தலைப்புக்கு நிறயபடம் ஏற்கெனவே எடுத்து வெச்சதுலயே தேறுச்சு.இருந்தாலும் புதுசா எடுத்து போடுவோமேன்னு முயற்சி பண்ணதுல தேறுனது இரண்டுபடம்.

1.கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு.அடுத்தவங்க அந்தரங்கத்த எட்டிப்பாத்ததுல.ஆனா இவங்கள நான் டிஸ்டர்ப் பண்ணவே இல்ல இல்ல இல்ல.

The Stolen Privacy

2.எனக்கு புடிச்சதுன்னா இந்த நாய்குட்டி படம்தான் ஆனா இத விட பட்டாம் பூச்சி க்ளாரிட்டி நல்லா இருந்ததால அது தான் போட்டிக்கு.
"puppy love"???

இதுக்கு அடுத்து வருவதெல்லாம் ஒரு மாசம் முன்னாடியே எடுத்தது.உங்களின் பார்வைக்கு

3.மறைந்து முகம்காட்டுவது பெண்ணா?


4.தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சுக்கனும்.

தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சுக்கனும்.

5.நிலாவும் புது கொலுசும்
ஜல் ஜல்

ஏப்ரல் மாதத்து தனிமை

இந்த மாதத்தில் இருந்து ஒரு போட்டோதான் அலவ்டாம். ஜட்ஜஸும் கலந்துக்கலாமாம். இதுக்கப்புறமும் இந்த ஏழை படம்லாம் அம்பலத்தில் ஏறுமா?

சரி அதுக்காக கலந்துக்காம இருக்கவா முடியும்? வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு "ஜகஜம்".

நாமள்ளாம் வீரனாச்சே ( யார்பா சிரிக்கறது?)

1. எதிர் வீட்டு பாட்டி. அவங்களுக்கு தெரியாம எடுத்தது. தெரிஞ்சா அவ்ளோதான்



2. இது போட்டிக்கு முன்னாடி எடுத்த படம். எனக்கு புடிச்சது.ஏன்னா வேகாத நடுவெய்யில்ல அரைமணிநேரம் கஷ்டப்பட்டேன் இதுக்கு. ஹ்ம்ம் ஒரு SLR கேமராவும் நல்ல லென்சும் இருந்தா இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டி இருந்திருக்காதோ?





3. இதும் அந்த பாட்டிதான்.



4.ராத்திரில புல்லுல பொரண்டு பொரண்டு எடுத்தேங்க.என் டப்பா கேமராவுல இவ்ளோதான் வந்துச்சு :(



5.இது சும்மா லுலுவாக்கு.தனிமை டைட்டிலுக்கு ரொம்ப பொருத்தமா இருந்துச்சு. இத பாத்துட்டு எனக்கு அட்வைஸ் பண்ண வரக்கூடாது ஆமா சொல்லிட்டேன் :P




படங்கள பாத்து தேறுமான்னு சொல்லுங்க

PIT March ப்ரதிபலிப்பாமே?

ஏற்கனவே சும்மா எடுத்து வெச்சதுல ரெண்டு படம் தேறிச்சு( 2,4) பாக்கி போட்டோஸ் இப்ப எடுத்தது

1. இந்த படம் எடுக்கும் போது மேல ஒரு கொக்கு பறந்து போச்சு. க்ளிக் பண்றதுகுள்ள போயேபோச்சு. அதும் ப்ரேம்ல வந்திருந்தா இது சூப்பர் படம்



2. கூலிங்க்ளாஸ்ல தெரியும் படமும் ப்ரதிபலிக்குது.



3. இந்த படத்துல இருப்பதாச்சும் Leading lines ஆ?



4.இதும் சும்மா முன்னாடி எடுத்து வெச்சது



5. கார் சீட் கவர் வேற கலர்ல இருந்திருந்தா நல்லா வந்திருக்கலாம்



6.இந்த படத்துல என் தப்பு எதுவும் இல்லை. க்ரானைட் பதிச்சது சரி இல்லை :P. நான் என்ன பண்ணட்டும்



வழக்கம் போல் எல்லா படத்தையும் ஒண்ணா பெரியதாக்கி பாக்க இங்கே க்ளிக் பண்ணுங்க. ஆனா இங்கயே கமெண்டுங்க.