ஏப்ரல் மாதத்து தனிமை

இந்த மாதத்தில் இருந்து ஒரு போட்டோதான் அலவ்டாம். ஜட்ஜஸும் கலந்துக்கலாமாம். இதுக்கப்புறமும் இந்த ஏழை படம்லாம் அம்பலத்தில் ஏறுமா?

சரி அதுக்காக கலந்துக்காம இருக்கவா முடியும்? வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு "ஜகஜம்".

நாமள்ளாம் வீரனாச்சே ( யார்பா சிரிக்கறது?)

1. எதிர் வீட்டு பாட்டி. அவங்களுக்கு தெரியாம எடுத்தது. தெரிஞ்சா அவ்ளோதான்2. இது போட்டிக்கு முன்னாடி எடுத்த படம். எனக்கு புடிச்சது.ஏன்னா வேகாத நடுவெய்யில்ல அரைமணிநேரம் கஷ்டப்பட்டேன் இதுக்கு. ஹ்ம்ம் ஒரு SLR கேமராவும் நல்ல லென்சும் இருந்தா இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டி இருந்திருக்காதோ?

3. இதும் அந்த பாட்டிதான்.4.ராத்திரில புல்லுல பொரண்டு பொரண்டு எடுத்தேங்க.என் டப்பா கேமராவுல இவ்ளோதான் வந்துச்சு :(5.இது சும்மா லுலுவாக்கு.தனிமை டைட்டிலுக்கு ரொம்ப பொருத்தமா இருந்துச்சு. இத பாத்துட்டு எனக்கு அட்வைஸ் பண்ண வரக்கூடாது ஆமா சொல்லிட்டேன் :P
படங்கள பாத்து தேறுமான்னு சொல்லுங்க