ஒரே பந்தில் இரண்டு விக்கெட் Part2

முதல் பகுதி ரொம்ப இழுத்துட்ட மாதிரி தெரியுது.அதனால இத முடிஞ்ச அளவு சுருக்கமா

மொதல்ல கிரவுண்டா ஒரு ஆடு மாடு மேயும் காடு,அதும் காட்டுகார அய்யன் வந்தா சொந்தபலத்துல ஓடி தப்பிச்சுக்கனுமாம்.

டாஸ்ல அவங்க டீம் வின்பண்ணி பேட்டிங் எடுத்தாங்க(லோக்கல் கிரிக்கெட்ல டாஸ் வின் பண்ணா யாராயிருந்தாலும் பேட்டிங்தான்,)ரொம்ப சுமாரா பேட்டிங் பண்ணி பத்தோ, பதினைத்தோ ரன் எடுந்தானுங்க.
அடுத்து எங்க பேட்டிங், நானும் பழனிகுமாரும்(என்கூட படிச்சதுல படிச்சு உருப்பட்ட ஒரே ஆத்மா) ஓப்பனிங்.முதல் பால்ல ஒரு ரன் எடுத்துட்டு என்கிட்ட பேட்ட கொடுத்துகிட்டு இருந்தப்பதான் டீம்கேப்டன்(செம குண்டன்)பவுலிங் சைடு ஸ்டெம்ப்கிட்ட வந்து "ஏண்டா பீஜிஸ் சொண்ணீங்களாடா" ன்னு ஸ்டெம்ப்ப ஆவேசமா தட்டிட்டு குமார பாத்து நீ அவுட்டுடான்னான். அதே வேகத்துல எங்கள தாண்டி குடுகுடுன்னு ஓடி என்சைடுல இருந்த ஸ்டெம்பயும் தட்டீட்டு என்ன பாத்து "நீயும் அவுட்டுடா"ன்னுட்டான்

நானும் குமாரும் கேனையாட்டம் நடு கிரவுண்டுல நிக்கறோம்.பெரிய ரகளையாயிடுச்சு.பேட்ட மாத்தரப்போ பீஜிஸ் சொல்லனுமாம், கருமம் அப்படீன்னா என்னன்னு அவனுங்களுக்கு சொல்லவும் தெரியல .

அந்த பக்கமா எலெக்ட்ரீசியன் வேலைக்கு போண சீனியர் கிரிக்கெட் அண்ணனை பஞ்சாயத்துக்கு கூப்டாச்சு.அவரும் அந்த ஊரு டீமுக்கான சொந்த ஊரு பலம், அந்த ஊரில் தன் எலக்ட்ரீசியன் வேலைக்கு உண்டாகும் பாதிப்பு போறவற்றின் அனைத்து சாத்தியக்கூறையும் ஆராய்ந்தார்.

சொந்த ஊரில் சொறி நாய்தான் சிங்கமாம்.ரெண்டு பேரும் அவுட்,இதில் மாற்றமில்லையென்றானது.

கடைசியில் பரிதாபமாக ஒரே பந்தில் ரெண்டு பேர் எப்படி அவுட்டாகமுடியும்னும் ஈனஸ்வரக்குரலில் கேட்டும்பாத்தாச்சு. ரன் அவுட்ல எந்த பக்கம் அடிச்சாலும் அவுட்தானே? நான் ரெண்டு பக்கமும் அடிச்சுட்டேன் என்று லாஜிக்கலாக(?)பேசிவிட்டான் குண்டன்.


அப்போ இருந்து இப்போ வரைக்கும் இந்த சந்தேகம் முழுசா க்ளியர் ஆகவே இல்லை.

யாராச்சும் சொல்லுங்க ரெண்டு விக்கெட் ஒரே நேரத்துல எடுக்க முடியுமா?


மேட்ச் முடிவா? எங்க டீம் டெயில் எண்டர் குட்டி பசங்களே விளாயாடி ஜெயிச்சுட்டாங்க.

பீஜீஸ்னா என்னவா? அது BC- bat change.(இதயும் குன்சா நாங்களே யூகிச்சது)

ஒரே பாலில் எத்தனை விக்கெட் எடுக்கலாம்?

மொக்கைல்லாம் இல்லைங்க. நிஜமாவே என்னோட ரொம்ப நாள் சந்தேகம் இது. என்னடா இது பைத்தியக்காரத்தனமான கேள்வின்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு ஒரு ப்ளாஷ்பேக்க சொல்லியே ஆகனும்.

அப்போ ஆறாவதுபடிச்சுகிட்டு இருந்தேன்.ஏண்டா கடைசிவரைக்கும் அதானேடா படிச்சன்னு விவேக் மாதிரி கேக்கப்படாது. ஒரு நாளுக்கு ஒரே ஒருதடவை வரும் பஸ்ஸை ஸ்கூல் பசங்கல்லாம் ஓடிவந்து வேடிக்கை பாப்போம். அந்த ரேஞ்ச் ஊரு குரும்பபட்டி. என் ஸ்கூல் இருந்த ஊரு.கிட்டதட்ட பனிஷ்மெண்ட் ஏரியா. ஆனா கிரிக்கெட் ஆர்வத்துல சிட்டியவிட பெரிய ஊரு. ஒரு டெஸ்ட்மேட்ச் நடந்தா ஊருல 15 பசங்களாச்சும் காதவிட்டு எடுக்காத ரேடியோ ப்ளஸ் கைல ஒரு பேப்பர் பென்சிலோட தான் எங்க பாத்தாலும் சுத்துவாங்க. பேப்பர் பென்சில் எதுக்குன்னா ஸ்கோர் குறிச்சுக்க.அதான் ரேடியோவிலேயே ஸ்கோர் சொல்வானேடாங்கறீங்களா?. பயபுள்ளைங்க கிரிக்கெட் விஷயத்துல எவனையும் நம்ப தயாரில்லைங்க. இதுல ஸ்கோர் குறிக்கும் ரெண்டு மூணு பேருக்கு நடுவில ஸ்கோர் சம்பந்தமா சண்டை வரது தனிக்கதை.

அந்த பணிஷ்மெண்ட் ஏரியாவில வந்து மாட்டிகிட்ட ரெண்டு மூணு வாத்தியாருங்க அப்புறம் அந்த ஊருல இருந்த ஒரு ஹோமியோபதி டாக்டர் இப்படி அப்படி நல்லா கிரிக்கெட் தெரிஞ்ச க்ரூப் நல்லா பார்ம் ஆயிடுச்சு. அதுல சின்னபசங்களைல்லாம் சேத்துக்க மாட்டாங்க. என்னய மட்டும் விக்கெட் கீப்பர் பின்ன்ன்னாடி நின்னு கீப்பர் மிஸ் பண்ற பால தூக்கி போட விடுவாங்க.அதும் வாத்தியார் பையன்ன தகுதில(அதே ஸ்கூல்ல எங்கப்பாவும் அம்மாவும் வேலை பாத்தாங்க). அந்த பந்து பொறுக்கும் வேலையவே விம்பிள்டன்ல பந்து பொறுக்கிப்போடும் பசங்களோட அர்ப்பணிப்பு உணர்வு போல செய்வேன்.

எப்போ தான் நாமளும் சீனியர் ஆவறது. அப்பத்தான் செல்லிவலசு பெரியசாமி சொன்னான் டேய் நாம மொண்டியூத்தாங்கரை( இது 6 km தூரத்தில் இருக்கும் ஊரு.) பசங்களோட டோர்ணமெண்ட் போலாம். அங்க ஜெயிச்சா நாமளும் சீனியர்டான்னு.ஒரே ஒரு மேட்சல்லாம் டோர்ணமெண்ட்டுன்னு சொல்லகூடதுன்னுலாம் தெரியாது. இத கேட்ட உடனே ஏழையின் வியர்வை, குழந்தையின் சிரிப்பு,அதிகாலை பனித்துளி,காதலியின் முத்தம் ரேஞ்சுக்கு மனசு பரவசமாயிடுச்சு. ஆனாலும் டோர்னமெண்ட் ஆடற அளவுக்கு நாம தகுதியான்னு ஒரு பயம். சரி தகுதிப்படுத்திக்குவோம்ன்னு அன்னைல இருந்து பயங்கர ப்ராக்டீஸ்.

சீனியர்ஸ்க்கும் ரொம்ப சந்தோஷம். பசங்கள தயார் படுத்துவோம்ன்னு அப்பப்போ வந்து பால் போடறது டிப்ஸ் கொடுக்கறதுன்னு பரபரப்பாயிடுச்சு ஊரு.கட்டாந்தரையிலேயே ஜாண்டி ரோட்ஸ் ரேஞ்சுக்கு டைவ்லாம் அடிச்சு ப்ராக்டீஸ்லயே அங்கங்க காயம் வேற.மேட்ச்க்கு போறன்னிக்கு நான் கொஞ்சம் நொண்டி நொண்டி போற அளவுக்கு கடுமையான ப்ராக்டீஸ் பண்ணீயாச்சு.

அடுத்து மேட்ச்சுக்கு பால் பேட்லாம் வேணுமே. என் சித்தி வாங்கி கொடுத்திருக்கும் கார்க் பால் ரெண்டு இருந்துச்சு((கல்லு மாதிரி பந்த பச்சபுள்ளைங்களுக்கு வாங்கி கொடுத்திருக்கா பாருன்னு ஊருல திட்டு). அப்புறம் பேட்.எங்களுக்கு கடைல வாங்கும் பேட்லாம் கனவுதான். நாங்க எப்பவும் சொந்ததயாரிப்பு பேட்லதான் விளையாடுவோம். அந்த பேட் தயாரிப்ப எழுத தனி பதிவு வேணும்.சுருக்கமா சொல்லனும்னா 10kmல இருக்க கரட்டுல(மலைல) போயி பாலமரத்த வெட்டி(அந்த மரம் கொஞ்சம் ப்ளெக்சிபிளா இருக்கும்) அதுல நாங்களே மரத்த அருவா, கொடுவா, இன்னபிற வஸ்துக்களால செதுக்கி(அப்பப்போ கையயும்) பேட் செய்வோம். ஆனா சீனியர்ஸ் நாங்களே எதிர்பாக்காதவகையில ஒரு வரலாற்று நிகழ்வுக்கான போட்டியா அதை கருதி அவங்க பேட்ட கொடுத்து விட்டுட்டாங்க.

எல்லாம் ரெடி. ஆனாலும் மேட்ச்சுக்கு நொண்டிகிட்டே போறப்பொ எனக்கு ஒழுங்கா படிக்காம எக்சாம் ஹாலுக்குள்ள போறப்போ ஒரு பதட்டமும் விரக்தியும் கலந்த உணர்வு வருமே அப்படித்தான் இருந்துச்சு. பழனிக்குமார்கிட்ட ப்ராக்டீஸ் பத்தாதுடா குமாரு.அவனுங்க பள்ளபட்டில படிக்கறானுங்க.செமயா விளையாடுவானுங்கடான்னு சொன்னேன். அவன் பாத்துக்கலாம்டான்னு ஆறுதல் சொன்னான்.ஆனாலும் ஒரு தாழ்வு மனப்பாண்மையோடதான் மொண்டியூத்தாங்கரை போய்சேர்ந்தேன்

கொஞ்சம் நீளமா போவுது, அதுனால செகண்ட் பார்ட்ல மிச்சம் ப்ளீஸ்

கூகிள் பேஜ்ரேங்க் எத வெச்சு கொடுக்கறாங்க?

கூகிள் பேஜ் ரேங்க் எத வெச்சு கொடுக்கறாங்க? ஏன்னா நிலா ப்ளாக்ல இப்போ பேஜ் ரேங்க் 4 . நானும் நம்ம தமிழ்வலைப்பதிவில் இருக்கும் மற்ற பிளாக் பேஜ்ரேங்க் பார்த்தேன். தினமும் 200,300 பேர் வரும் பதிவில்கூட3 என்ற அளவில்தான் இருக்கிறது. அவ்வளவு விசிட்டரும் இதற்கு இல்லைஅப்புறம் எப்படி?.ஒருவேளை குட்டிபாப்பாதானேன்னு ரெண்டு ரேங்க் அதிகமா போட்டுட்டாங்களா? ஒண்ணும் புரியல, யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்க