PIT Feb போட்டிக்கு வளையலும் பென்ஸ்டாண்டும்

கடைசி நேரம், வேற ஒண்ணும் இங்க சொல்ல நேரம் இல்லை.
நெகிழ வைக்கும் முடிவெடுத்த பதிவர் இம்சை. அவர் நண்பன் என்பதில் பெருமைப்படுகிறேன்

தயவு செய்து முழுவதுமாக படிக்கவும் இது மொக்கை அல்ல

இது இம்சையிடமிருந்து எனக்கு வந்த மெயில். பொறுமையாக முழுவதுமாக படிக்கவும்

Dear Friends

Good Evening, Thank you all for your support and guidance for an important decision in my life.
I have now made up my mind to quit my professional career in IBM and start my own project for supporting students from economically challenged background and move into social services full time.

It is a very hard decision for which I have been asking advice to almost everyone for past 2 months and now my mentor and all friends have finally agreed for my decision after getting the permission from my wife in person.

My mentor told me that she will provide me a most challenging work in social field so that I will runaway back to my family in Pune in a Year. I have accepted it.

I thank my wife whole heartedly for supporting my decision bcos she is now going to support me and my family for rest of her life.

I will keep you all updated. As of now I would be involved in setting up few training schools for training students who do their degree (BA, BCOM, BSC & Diploma) in Regional language. These students would be trained and placed in diferent companies.

Initially this plan would be implemented in Karnataka and in 5 years planning to expand to Tamilnadu, Kerala, Andra and Maharastra. Later on all over India.

It is going to be a very big and most challenging project. I have not yet thought how to implement it but I am now ready for the challenge. I would be officially moving into this role from April.

Planning to say good bye to IBM next week. I am not there in the pictures but Pavan's mother/ my wife is there.

Thanks
Venky


இது நம் சக பதிவர் இம்சையிடம் இருந்து வந்த மெயில்.இம்சை (அ) வெங்கியை ஒரு மொக்கை பதிவராக, ஜாலியாக கும்மிகளில் கலந்து கொள்பவராகத்தான் தமிழ்மணத்தில் தெரியும்.

இன்னும் கொஞ்சம் நெருங்கிய பதிவர் வட்டாரங்களில் அவரின் சமூக சேவைகளின்பால் ஈடுபாடு கொண்டரென்பதும் சில சேவைகள் செய்துகொண்டிருக்கிறார் என்றும் தெரியும்

ஆனால் இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவை பாருங்கள்.IBM ல் ஒரு நல்ல பொறுப்பில் இருக்கும் போது அதை விட்டுவிட்டு முழுநேர சேவையில் ஈடுபடவேண்டுமானால் எந்த அளவுக்கு இளகிய மனமும் சமூக அக்கறையும் வேண்டும்

அது சொந்த ஊரோ சொந்த மாநிலமோ கூட கிடையாது.அந்த குழந்தைகளின் எதிர்காலத்துக்கு தன்னுடைய எதிர்காலத்தை தள்ளிவைத்துவிட்டு உழைக்கப்போகிறார்.

அதுவும் தன் குடும்பத்தைவிட்டு பிரிந்துவந்து தனியாக( அவர் தன் குட்டிப்பையனின் மேல் வைத்துள்ள பாசம் இங்கு அனைவருக்கும் தெரியும்)

அந்த மெயிலை படித்தாலே அவரை பற்றியும் அவரின் முடிவு பற்றியும் எல்லாமே புரிந்துவிடும்.சில விஷயங்களை விளக்க வார்த்தைகளை தேடி போட்டு ஜல்லியடிக்க வேண்டியதில்லை.

ஆனால் அதைப்படித்தவுடன் எனக்கு வந்த குற்ற உணர்வில் இருந்து மீள வெகு நேரம் ஆனது.என்னுடைய இளவயதில் இருந்து எத்தனை லட்சியங்கள் மனதில், ஒன்றொன்ராக பிழைப்பின் பொருட்டு என்று சொல்லி பின்னால் செய்யவேண்டும் என்று நினைத்து நினைத்து....

ம்ஹூம்... கடைசியில் ஒன்றைக்கூட செய்யவில்லை. எல்லா சமூக சம்பந்தமான லட்சியங்களும் செத்துப்போய்விட்டது. பணத்தை துரத்தும் ஒரு முழு வியாபாரியாகத்தான் மாறிவிட நேர்ந்தது.
அப்படியே செய்யும் ஏதாவது உதவிகளும் ஏதாவது ஒரு விதத்தில் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கிறது.

ஆனால் திரு. இம்சை? ஏதாவது ஒரு சதவீத சுயநலம் இருக்கிறதா அவர் முடிவில்?அவரை விட இந்த முடிவுக்கு ஆதரவளிக்கும் அவர் மனைவியை பாருங்கள். இதில் இம்சைக்கு தோள் கொடுத்து குடும்பத்தை தான் சுமக்க தயாராகிறார். யார் இதில் உயர்ந்தவர் என்று சொல்ல?

ஆனால் இம்சை நீங்கள் கடக்க வேண்டிய பாதை கண்டிப்பாக கரடுமுரடாகத்தான் இருக்கும்.அதையெல்லாம் எதிர்கொள்ளும் துணிவோடுதான் இந்த முடிவை எடுத்திருப்பீர்கள்

நான், என் மனைவி, என் பெண் என்ற குறுகிய வட்டத்தை தாண்டிவரும் மனநிலையை எப்போதோ இழந்துவிட்ட என்னால் ஒரு அணில் அளவுக்காவது உங்களுக்கு உதவமுடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது வெங்கி.

நான் உங்கள் நண்பன் என்பதில் பெருமைப்படுகிறேன் வெங்கி

வவ்வால் போட்டோ

வவ்வால தேட வேண்டிய அவசியம்லாம் இல்லாம போச்சு. அவரே நேத்து வீட்டுக்கு வந்தாரு. போட்டோ எடுக்க அந்த மறுப்பும் சொல்லவே இல்ல. அதும் விதவிதமான போஸ் கொடுத்து அசத்திப்புட்டாரு. கொஞ்சம் கூட அசரவே இல்ல.

இதுல ஒரு போட்டோ நம்ம PIT போட்டி வட்டத்துக்கு அனுப்பலாம்ன்னு ஐடியா முதல் போட்டோவ தவிர மத்ததுல எதுல வவ்வாலும் அதோட கண்ணும் நல்லா இருக்குன்னு சொல்லுங்க.

அதுக்கப்புறம் அந்த படத்துக்கு சீவி சிங்காரிச்சு(போஸ்ட் ப்ரொடக்சன்) போட்டிக்கு அனுப்பலாம்.

முதல் படத்த தவிர எல்லாமே க்ராப் பண்ணீத்தான் இருக்கு