நாங்கள்ளாம் பிஸி... இப்படிக்கு பட்டாம்பூச்சி

நம்ம PIT டீம் ஆளுங்க எல்லாம் ஸ்ட்ரீட் போட்டோகிராபில அநியாயத்துக்கு ஆர்வமாயிட்டாங்க. இந்த மாச போட்டித்தலைப்புக்கு கூட அதான் காரணமா இருக்கும்.

ஆனா எனக்கு என்னமோ இந்த மனுசப்பயல படம் எடுக்க புடிக்க மாட்டேங்குது. அதுவுமில்லாம ஸ்ட்ரீட் போட்டோகிராபின்னு போனாலே சந்தோஷமான முகங்களை விட துயரத்தை காட்டும் படங்கள் தான் எடுபடுது.

சிலது எடுத்துப்பாத்தேன் எனக்கு அது ஒத்துவரதா தெரியல.

நான் இதுல நம்ம மோகன்தாஸ் மாதிரி "நம்ம நாட்ட ரிச்சா காட்டமுடிஞ்சா காட்டுங்க,இல்லன்னா படமே எடுக்காதீங்க" ன்னு சொல்ற ஆளு இல்லைதான். இருந்தாலும் துயரம் சோகம் லாம் இல்லாத படம்தான் எனக்கு பிடிக்குது.


அதுக்கு நம்ம புழு பூச்சி செடி கொடிதான் ஒத்துவரும்.

நல்ல வேளை உயிரினங்கள்ன்னும் தலைப்புல கொடுத்துட்டாங்க. மனுசனுக்கு மட்டும்தான் வேலையா?

1.மறுபடியும் பட்டாம்பூச்சிதான் :)

On duty


வாழ்க்கை முழுசும் வேலைதான். எத்தனை பூ தேடனும்? வெயில்லாம் பாக்க முடியாது.தேன் தேடி தினமும் சுத்தலன்னா புவ்வாக்கு லாட்டரிதான். எந்த பறவை எந்த நேரத்துல வேணாலும் புடிச்சு திண்ணுடலாம்.இப்படில்லாம் பாத்தா சோகம்தான்

ஆனா பட்டாம்பூச்சி படத்த பாத்தா நமக்கு சோகமாவா தெரியுது. ஆனா ஒரு மனுசப்பய மூட்டை தூக்கற படத்த பாத்தா மட்டும் ஏன் உச்சு கொட்றோம்?

2. இது போட்டி அறிவிப்புக்கு முன்னாடியே எடுத்தது.

Busy bee

தேனீக்கும் விளக்கம் கொடுத்தா அடிக்க வந்துடுவீங்க. வேலைக்கார தேனீக்கள் மட்டுமே தேன் சேகரிக்கும்ன்னு உங்களுக்கு தெரிந்திருக்கும். தலைப்புக்கு செம மேட்ச் தானே? :P

3. எரும்பு...இந்த குட்டியூண்டு எரும்பு எதையாச்சும் தூக்கிட்டு போகும்போது எடுத்தா செம மேட்சிங்கா இருக்கும்னு நெனச்சேன். ஆனா படாத பாடு பட்டும் இவ்வளவுதான் கிடைச்சது. கொஞ்சம் பெரிய எறும்புகள புடிச்சிருந்தா தெளிவா வந்திருக்கலாம் ( யோவ் சித்தெரும்பையா எடுக்க ட்ரை பண்ணுன? இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலயா... இது ஜீவ்ஸ் சொன்னது :P )

முடிந்த அளவு புதிதாக எடுக்கும் படத்தையே போட்டிக்கு கொடுக்க நினைப்பதால் முதல் படத்தை கொடுக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க நீங்களாம்?

Flickr படம் தெரியாத ஊர்காரவுகளுக்கு இங்க