இரவு நேர படங்கள்.

வந்துட்டோம்ல. அஞ்சு படம் இருக்குங்க. இதுல புளி போட்டு விளக்க ஒண்ணும் இருக்க மாதிரி தெரியல. அப்புறம் எதுக்கு ஜல்லிஅடிக்கனும். எதாச்சும் டவுட்டுன்னா சொல்லுங்க. முதல் படம் போட்டிக்கு

நிலாவுடன் அளாவும் கொடி
செடிகள் தூங்குமா?
பெங்களூர்
Banglor
எங்க வீட்டு நிலா
நிலாவுக்கே மெழுகுவர்த்தி வெளிச்சமா?

வானத்து நிலா
Half moon
குடிசை விளக்கு
Night light

அவ்ளோதாங்க.

ஃப்ளிக்கர் படங்கள் தெரியாதவங்க.எல்லா படத்தையும் பெரியதா பார்க்க வழக்கம் போல இங்கே

31 comments:

said...

எல்லாமே டக்கரா இருக்கு!

அதுலயும் அந்த வானத்து நிலா செம சூப்பரூ :))))))))

said...

ராத்திரியில் நடக்கிற விஷய்ங்கள எடுப்பதில் ஒங்க திறமை 'பளிச' னு தெரியுது்

said...

எங்க வீட்டு நிலா அருமை.

said...

ஜூப்பரு......

எப்படி இப்படி எல்லாம். முதல் இரண்டும் அருமை.

எங்க வீட்டு நிலாவுக்கு சுத்திப்போடுங்க :)

மத்த படம் நான் ஏற்கனவே பாத்தது தான்.ஆனா இப்பவும் நல்ல்ல்ல்ல்லாஆஆ இருக்கு.:)

வாழ்த்துகள்!!! :)

இந்த மாதப் போட்டிக்கு நான் காமிரா தூக்கல :(.இப்பல்லாம் இங்க இரவு 9:15 வரை சூரியன் முழிச்சு இருக்கார்.

said...

No tamil font here. I'll comment later.

1st & First are Great!

I drop my idea to send photo to the contest after saw urs!

said...

நன்றி ஆயில்யன்

-------------------------------
ஓவர் குசும்பு உங்களுக்கு லதானந்த் சார்

-----------------------------------
நன்றி வருண்

-----------------------------------

newbee என்ன இப்படி சொல்லிட்டீங்க.வீட்டுக்குள்ள கம்மியான வெளிச்சத்துல ட்ரை பண்ணுங்க. நைட் போட்டோஸ் எடுக்க ட்ரை பண்ணும்போதுதான் நிறைய செட்டிங்க்ஸ் முக்கியத்துவம் பத்தி தெரிந்து கொள்ளமுடியும். சும்மா ட்ரை பண்ணுங்க.

-----------------------------------
நீங்களே இப்படி சொல்லலாமா க்ருஷ்ணா. அருமையான போட்டோகிராபிக் சென்ஸ் உள்ள ஆளு நீங்க. அதுவுமில்லாம போட்டில ஜெயிக்கறதுல்லாம் ஒரு விஷயமா?. நம்ம ஃப்ரண்ட்ஸ்குள்ளார நடத்தும் போட்டிதான் இது. எல்லாரும் ஒண்ணுமன்னா கலந்துக்கனும் அதுதான் சந்தோஷம். ரஜினி படம் ரிலீஸ் அன்னைக்கு பாக்கறமாதிரி. படம் எப்படி வேண்ணாலும் இருக்க்கலாம் முதநாள் படம் பாக்கறது ஒரு செலிபிரேஷன். அது போலத்தான் இதுவும். கண்டிப்பா கலந்துக்கோங்க.நம்மள அப்கிரேட் பண்ணிக்க கண்டிப்பா இந்த போட்டி உதவியா இருக்கும்.

said...

உங்க வீட்டும் நிலாவும் அழகு அந்த வானத்து நிலா போலவே!

Newbee-க்கு நான் சொல்ல நினைத்ததையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். வீட்டுக்குள்ளேயே ட்ரை பண்ணுங்க newbee, 'ஜோடி'ப் போட்டிக்கு அசத்துன மாதிரி.

said...

நல்லா சொன்னீங்க ராமலக்ஷ்மி. newbee சொல்ற காரணம் ரிஜக்ட்டடு.சூரியன் 12 மணிக்கு மறைஞ்சா என்ன? அதுக்கெல்லாம் அசரலாமா? எந்த ரத்தம் அது?

சரிதானேங்க ராமலக்ஷ்மி

said...

படங்களெல்லாம் சூப்பர் நந்து சார்... :)

Anonymous said...

முதல் படம் சூப்பர். கறுப்பு வெள்ளையாய் இருப்பது கூடுதல் ப்ளஸ் பாய்ண்ட். வெற்றி உங்களுக்கே

said...

முதல் படமும் மூனாம் படமும் வெகு அருமை. போட்டிக்கு முதல் படம் நல்ல சாய்ஸ். வாழ்த்துகள்.

said...

மிக்க நன்றிங்க சின்ன அம்மினி,தமிழ்ப்ரியன் மற்றும் கைப்ஸ்

said...

எனக்கு பிடித்தது இரண்டாவது படம்தான்... ;)

said...

கண்ணக் கட்டுது கண்ணக் கட்டுதுங்கிறது இதுதானா?இந்த மாதம் போட்டியில் முதல் வரிசையில் இப்பவே நிக்கிற மாதிரி தெரியுது.வாழ்த்துக்கள்.ஆமா இந்தப் போட்டிக்கு நாட்டாமை யாரு?காதுல போட்டு வைக்கலாம்.

said...

நிலா நிலா - அம்மா கிட்டே சொல்லி சுத்திச் சுத்தி போடச் சொல்லும்மா - அப்பாக்கு வேற வேலை இல்லை - போட்டோவா எடுத்துத் தள்ளறாரு - அததனைப் படங்களும் அருமை - நிலா இரண்டும் ஜூப்பரு

said...

நல்ல ட்ராபிக் டைம் ல எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கலாம் ரெண்டாவது படம். நன்றி CVR

------------------------------------
நட்டு சார் என்ன இப்படி சொல்லிட்டீங்க.வருகைக்கு நன்றிங்க.

------------------------------------
சீனா சார் மொத்த 5 படத்துல மூணு நிலா இருக்கு. நல்லா பாருங்க. :)

said...

முதல் படம் நல்ல சாய்ஸ் போட்டிக்கு.


உங்கவீட்டு வாலு நிலாவைபத்தி சொல்லணுமா!? அது எப்பவுமே டாப்பு டக்கர்.

said...

ஸ்பெஷலா நன்றி சிவா. தமிழ்மண ஸ்டார் கமெண்டாச்சே

said...

great pics, best of luck.

said...

எல்லாமே சூப்பரா வந்துருக்கு

வால்பையன்

said...

annachi,
enna camera vechirukeeru?
kalakal photos ellame...

said...

எல்லாப் படமுமே அழகு, எப்படி இப்படி அழகாய் எடுக்கிறீங்கள்?
போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துகள்.

said...

எல்லா படங்களும் சூப்பர். வெற்றி பெற வாழ்த்துகள்!

said...

வருகைக்கு நன்றிங்க ஒப்பாரி.

------------------------------------
நன்றி truth. நம்மளுது நிக்கான் D80ங்க

-----------------------------------
நன்றி ஓவியா. எங்கே இந்த மாதம் போட்டிக்கு படம் எதுவும் தரக்காணோம்? அதும் உங்க ஏரியால நல்ல படம் எடுக்க சான்ஸ் கிடைக்குமே?

-----------------------------------

நன்றி நிலாக்காலம். ஒரே நிலா படமா இருப்பதால உங்களுக்கு புடிச்சுப்போச்சு போல. :)

-----------------------------------

நன்றி வால்பையன். எப்பவும் தனித்தனியா அடையாளப்படுத்தி சொல்வீங்க. இப்போ மொத்தமா முடிச்சுட்டீங்களே

said...

//எங்கே இந்த மாதம் போட்டிக்கு படம் எதுவும் தரக்காணோம்? அதும் உங்க ஏரியால நல்ல படம் எடுக்க சான்ஸ் கிடைக்குமே?//

இரவு நேரத்தில ஒரு படம் எடுக்கலாம் என்று பார்த்தா முடியல்ல.. இங்க இருட்டுறதுக்கே 10 மணி ஆயிடுது.. அதுக்கு பிறகு எங்க வெளியில போறது.. வீட்டில திட்டுத்தான் வாங்கவேணும் :(

Anonymous said...

// ராத்திரியில் நடக்கிற விஷய்ங்கள எடுப்பதில் ஒங்க திறமை 'பளிச்' னு தெரியுது //

லொள்ளப் பாத்திங்களா?

கொடி நிலா,வான்நிலா,நம்நிலா, அனைத்தும் அழகு.

said...

மறுபடியும் வந்து பார்த்தா ரெண்டாவது படம் போட்டிக்குத் தேறும் போல இருக்கே?லேட்டான ஆலோசனையோ?எந்த ஊரின் ஒளி?

said...

எல்லாமே நல்லா இருக்குங்க ..ஏங்க வானத்து நிலா இப்படி கிட்டக்க தெரியுது நாசா ல இருந்து எடுத்தத போட்டுட்டீங்களா? :-)))

முதல் படம் வித்யாசமா இருக்கு

அசத்த வாழ்த்துக்கள்

said...

முதல் 10ல வரும்னு எதிர்பார்த்தேன்.

said...

படங்கள் எல்லாமே அழகா இருக்கு, முக்கியமா உங்க வீட்டு நிலா. :)

said...

இரவு நேரப் படங்கள் அனைத்தும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/