நாங்கள்ளாம் பிஸி... இப்படிக்கு பட்டாம்பூச்சி

நம்ம PIT டீம் ஆளுங்க எல்லாம் ஸ்ட்ரீட் போட்டோகிராபில அநியாயத்துக்கு ஆர்வமாயிட்டாங்க. இந்த மாச போட்டித்தலைப்புக்கு கூட அதான் காரணமா இருக்கும்.

ஆனா எனக்கு என்னமோ இந்த மனுசப்பயல படம் எடுக்க புடிக்க மாட்டேங்குது. அதுவுமில்லாம ஸ்ட்ரீட் போட்டோகிராபின்னு போனாலே சந்தோஷமான முகங்களை விட துயரத்தை காட்டும் படங்கள் தான் எடுபடுது.

சிலது எடுத்துப்பாத்தேன் எனக்கு அது ஒத்துவரதா தெரியல.

நான் இதுல நம்ம மோகன்தாஸ் மாதிரி "நம்ம நாட்ட ரிச்சா காட்டமுடிஞ்சா காட்டுங்க,இல்லன்னா படமே எடுக்காதீங்க" ன்னு சொல்ற ஆளு இல்லைதான். இருந்தாலும் துயரம் சோகம் லாம் இல்லாத படம்தான் எனக்கு பிடிக்குது.


அதுக்கு நம்ம புழு பூச்சி செடி கொடிதான் ஒத்துவரும்.

நல்ல வேளை உயிரினங்கள்ன்னும் தலைப்புல கொடுத்துட்டாங்க. மனுசனுக்கு மட்டும்தான் வேலையா?

1.மறுபடியும் பட்டாம்பூச்சிதான் :)

On duty


வாழ்க்கை முழுசும் வேலைதான். எத்தனை பூ தேடனும்? வெயில்லாம் பாக்க முடியாது.தேன் தேடி தினமும் சுத்தலன்னா புவ்வாக்கு லாட்டரிதான். எந்த பறவை எந்த நேரத்துல வேணாலும் புடிச்சு திண்ணுடலாம்.இப்படில்லாம் பாத்தா சோகம்தான்

ஆனா பட்டாம்பூச்சி படத்த பாத்தா நமக்கு சோகமாவா தெரியுது. ஆனா ஒரு மனுசப்பய மூட்டை தூக்கற படத்த பாத்தா மட்டும் ஏன் உச்சு கொட்றோம்?

2. இது போட்டி அறிவிப்புக்கு முன்னாடியே எடுத்தது.

Busy bee

தேனீக்கும் விளக்கம் கொடுத்தா அடிக்க வந்துடுவீங்க. வேலைக்கார தேனீக்கள் மட்டுமே தேன் சேகரிக்கும்ன்னு உங்களுக்கு தெரிந்திருக்கும். தலைப்புக்கு செம மேட்ச் தானே? :P

3. எரும்பு...இந்த குட்டியூண்டு எரும்பு எதையாச்சும் தூக்கிட்டு போகும்போது எடுத்தா செம மேட்சிங்கா இருக்கும்னு நெனச்சேன். ஆனா படாத பாடு பட்டும் இவ்வளவுதான் கிடைச்சது. கொஞ்சம் பெரிய எறும்புகள புடிச்சிருந்தா தெளிவா வந்திருக்கலாம் ( யோவ் சித்தெரும்பையா எடுக்க ட்ரை பண்ணுன? இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலயா... இது ஜீவ்ஸ் சொன்னது :P )

முடிந்த அளவு புதிதாக எடுக்கும் படத்தையே போட்டிக்கு கொடுக்க நினைப்பதால் முதல் படத்தை கொடுக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க நீங்களாம்?

Flickr படம் தெரியாத ஊர்காரவுகளுக்கு இங்க

18 comments:

said...

/
சித்தெரும்பையா எடுக்க ட்ரை பண்ணுன? இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலயா... இது ஜீவ்ஸ் சொன்னது :P
/
;)))))))))

said...

மொத படம் நல்லா இருக்கு.

said...
This comment has been removed by the author.
said...

படதுக்காகவாவது ஒரு பதிவு போடுரின்களே !

//மோகன்தாஸ் மாதிரி "நம்ம நாட்ட ரிச்சா காட்டமுடிஞ்சா காட்டுங்க,இல்லன்னா படமே எடுக்காதீங்க" //

மோகன்தாஸ் சொன்னது சரிதான்.
சாப்புடுறது பழசா இருந்தாலும்
எலைலா வெண்ணைய தடவித்தான் போடுவோம்.

படங்கள் எல்லாம் நல்லாருக்கு.
எனக்கு எறும்பு படம் புடிச்சிருக்கு.
வெற்றி பெற வாழ்த்துக்கள்ணா.

said...

நன்றி சிவா

said...

இலைல வெண்ணையா? இரு மோகன்தாஸ்கிட்ட புடிச்சு கொடுக்குறேன் கார்த்திக் :P

Anonymous said...

பட்டாம்பூச்சி படம் சூப்பர். வெற்றிக்கனி உங்களுக்கே

said...

எனக்கென்னவோ தேனிக்கு தான் முதலிடம் கொடுக்கனும் போல் இருக்கு.

said...

நன்றிங்க சின்னம்மினி

said...

ஆமாங்க வடுவூர் குமார். எனக்கும் அப்படித்தான் பட்டது. இருந்தாலும் எதுக்கு பழைய படத்தை கொடுக்கனும் புதுசா கொடுப்போமேன்னுதான் பட்டாம் பூச்சியை கொடுத்தாச்சு.

மிக்க நன்றிங்க

said...

தேனி படம்.. அட்டகாசங்க..!! பட்டாம்பூச்சியும் அருமை.. ஆனா தேனிதான் அசத்தல்.

நம்ம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட பூச்சியும் பறவையும் - மா புடிச்சிருக்கொம்.. ஈரோட்டுக் காரங்கன்றதால ஒரே மாதிரி தோனிருச்சோ?

said...

நந்து, இப்பத்தான் பார்த்தேன். வண்ணத்துப்பூச்சி அருமை என்றாலும் தேனீ மற்றும் எறும்பு படங்கள் மிக மிக அட்டகாசமாக உள்ளன. அந்த தேனீ படத்தில், நல்ல படம் கிடைக்க உங்களுடைய பொறுமையும் புகைப்பட ஆர்வமும் தெளிவாக தெரிகிறது.வாழ்த்துகள்!!!

said...

என்க்கு ரெண்டாவது படம்தான் புட்ச்சது நைனா! (கோச்சுக்காத நிலாப்பாப்பா.. நிலாவோட நைனா....)

said...

பட்டாம் பூச்சியை எடுப்பது எளிதல்ல. அது அருமை என்றால் உங்கள் கமெண்ட் அதை விட..!

//எந்த பறவை எந்த நேரத்துல வேணாலும் புடிச்சு திண்ணுடலாம்.இப்படில்லாம் பாத்தா சோகம்தான்
ஆனா பட்டாம்பூச்சி படத்த பாத்தா நமக்கு சோகமாவா தெரியுது. ஆனா ஒரு மனுசப்பய மூட்டை தூக்கற படத்த பாத்தா மட்டும் ஏன் உச்சு கொட்றோம்?//

said...

ஆனாலும் என்னை மிகவும் கவர்ந்தது இரண்டாவதுதான். ஆகா அல்ல ஆகாகா! அருமையான க்ளோஸ் அப்.
பொறுமையோடு எறும்பையும் பிடித்திருக்கிறீர்கள். அமல் சொன்னதையே வழி மொழிகிறேன்.

// நல்ல படம் கிடைக்க உங்களுடைய பொறுமையும் புகைப்பட ஆர்வமும் தெளிவாக தெரிகிறது.வாழ்த்துகள்!!!//

said...

நன்றி சூர்யா.. அட நம்மூர்காரரா நீங்க.நோட்டடு :). தனியா கவனிச்சுக்கரேன்

------------------------------------

அமல் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளப்படுதிவிடுறீங்க :P

உண்மையில் இந்த மாதிரி பாராட்டு கிடைக்கும் போதுதான் மறுபடியும் எதாவது பூ பக்கத்திலேயோ பூச்சி பக்கத்திலேயோ தவம் கிடக்கும் போது கஷ்டமே தெரியாது. நன்றி. நன்றி

-----------------------------------

க்ருஷ்ணா எனக்கும் ரெண்டாவது படம்தான் புடிச்சது. இருந்தாலும் புதுசா எடுத்த படத்தை கொடுப்போமேன்னுதான்...
----------------------------------

ராமலக்ஷ்மி டபுள் நன்றி. என் கமெண்டையும் ரசிச்சதுக்கும் அமல் மாதிரி உசுப்பேத்திவிட்டதுக்கும்... :)

Anonymous said...

mail ID please?

said...

என்ன கேமரா வச்சிருக்கீங்க... நீங்க ஈரோடா?? நான் ஈரோடு தான்..!!!