மோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்

ஒரு மூத்த பதிவரோட இன்னொரு முகத்தை தெரிஞ்சுகோங்க.எவ்வளவு குறுகிய மனம் படைச்சவருன்னும் அவருக்கெல்லாம் எப்படி கம்பெனில வெட்டிச் சம்பளம் கொடுக்கறாங்கன்னும்.

விவரமா சொல்றேங்க. நான்லாம் ப்ளாக்ல வெறும் போட்டோ போட்டே காலத்தை ஓட்ரவனுங்க. பதிவுல ஃபுல்ஸ்க்ரீன்ல படத்தை காட்றத பத்தி நம்ம CVR ஒரு பதிவு போட்டிருந்தார். இந்த இடத்துல ஒரு விஷயம் சொல்லனும் CVR க்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. சூதுவாது தெரியாது. தங்கமான புள்ளைங்க.போட்டோல மட்டுமல்ல வாழ்க்கையிலும் எதையும் முறைப்படி செய்யும் ஆளு. நாங்கூட சொல்லுவேன் இவ்வளவு யோக்கியன்னா நாடு தாங்காதுய்யான்னு. அவரு படத்தை பெரியதா காட்ட சொன்னவை ரொம்ப முறைப்படி இருந்துச்சு.

நாம இருக்கோமே குறுக்கு புத்தி புடிச்சவய்ங்க. அதுக்கு முன்னமே அதுல ஒரு ஷார்ட்கட் கண்டுபுடிச்சு ப்ளாக்கரில் படம் அப்லோட் பண்ண பின்னாடி படத்தின் HTML கோடில் S400 என்பதை S800 ன்னு மாத்துனா போதும்ன்னு ஃப்ளிக்கர் தெரியாத ஊர்காரங்களுக்காக வெச்சிருக்க ப்ளாக்ல ஃபுல்ஸ்கிரீன்ல மாத்துனேன். அத CVR பதிவிலயும் கமெண்டினேன்.அப்புறம் நிலா ப்ளாக்லயும் அதே போல பண்ணேன் . டக்கராவும் இருந்துச்சு.

ஆனா பாருங்க மக்களே குறுக்குவழி என்றும் நிரந்தரமில்லைன்னு கூகிள்காரன் ஆப்பு வெச்சுட்டான். ஃபுல்ஸ்க்ரீன்லதானே வரபோகுதுன்னு பல படத்தை ஒண்ணாக்கி ஒரு போஸ்ட் போட்டா S400to S800 டெக்னிக் ஒர்க்காகவே இல்லை.உருண்டு பெரண்டும் படம் பெருசாவல. சின்னபடமா பதிவுல பாத்தா அட்ராக்சனே இல்லாம இருக்கு.

நான் கைநாட்டு கேசுங்க. என்ன பண்றதுன்னு தெரியல. அப்போதான் அந்த மூத்த பதிவர் ஆன்லைன்ல இருந்தார். அவர்கிட்ட ப்ரச்சனைய சொன்னேன். அந்த காலத்துல நாங்கள்ளாம் ப்ளாக் ஆரம்பிக்கும்போது ஒண்ணுமே இருக்காது. கமெண்ட் பாக்ஸுக்கெல்லாம் என்னென்னமோ கஷ்டபட்டோம் உங்களுக்கெல்லாம் ஈசியா எல்லாமே கிடைச்சுடுச்சுன்னு அரசி ராதிகா மாதிரி தியாக செம்மலாட்டம் பேசுனுவராச்சேன்னு அவர்கிட்ட ப்ரச்சனைய சொன்னேன். ரொம்ப பந்தாவா அந்த HTMLகோடை அனுப்புங்கன்னவர் வழக்கமான பெருசுங்க மாதிரி மீடியம் லார்ஜ்ன்னு இருக்கும் லார்ஜ செலக்ட் பண்ணுங்கண்ணு நிலாபாப்பாக்கு கூட தெரியும் மெத்தேட சொன்னாரு. லார்ஜ் பத்தி எங்களுக்கேவா.
அதெல்லாம் தெரியும்னதும் கொஞ்ச நேரம் மல்லாக்க படுத்து, குப்புற படுத்து,தலைகீழா நின்னுல்லாம் பாத்திருக்கார். கடைசியில் தெரியலன்னுட்டாருங்க. சரி கூகுள்காரனுக்கு ஒரு கடுதாசி போடறேன். நான் படிக்காதவன்யா அதனால ஒரு மெயில் தமிழ்ல உங்களுக்கு பண்றேன். அத அப்படியே இங்கிலீசுல ட்ரான்ஸ்லேட் பண்ணிகொடுய்யா. கூகிள் ஓனருக்கு அத அனுப்பிடரேன்னேன்.

எங்க கூகிள் ஓனரும் நானும் சேக்காளி ஆயிருவோம்ன்னு நெனச்சுட்டாரோ இல்ல அவரும் என்ன மாதிரி கைநாட்டு கேசோ, முடியாதுனுட்டாருங்க. எனக்குன்னா கடுப்பாயிடுச்சுங்க. என்னடா ஒரு இங்கிலீசு தெரியாம இப்படி ஒரு கஷ்டமான்னு.

அப்புரம் நோண்டு நோண்டுன்னு அந்த நாலு வரி HTMl கோடை நோண்டி அதுல width: 400px; height: 300px; இதை மட்டும் தூக்கிட்டு திரும்ப நம்ம S400 க்கு பதிலா S800 டெக்னிக்க யூஸ் பண்ணி ஃபுல்ஸ்கிரீன்ல வர மாதிரி பண்ணீட்டங்க.

அதுக்கப்புறம் அவர கூப்பிட்டு அதை சொன்னேங்க

நான்லாம் படிக்காத காட்டுபயங்க, வீசிடி ப்ளேயரும் டீவியும் ஒண்ணா இருக்காமேன்ன ரேஞ்சுலதான் கம்ப்யூட்டரே வாங்குனேன், எதுக்கு ரெட்ட செலவுன்னு.ஒரு மூணு வருசம் முந்தி பிளாக்குனா என்னடான்னும். அப்புறம் மூணு மாசம் கழிச்சு என்னமோ HTML ன்னு இந்த பசங்கள்ளாம் பேசிக்கராய்ங்களே. அப்படின்னா என்னன்னும் அப்பத்தான் கேள்வியே பட்டவன்.( கொடுமை என்னன்னு அதுக்கெல்லாம் விளக்கம் சொன்னது இன்னொரு நம்ம பய அரைகுறை சஞ்சய்.) அட பரவாயில்லையே,இதெல்லாம் பண்றியேன்னு ஒரு வார்த்தை அந்த மூத்த பதிவர் சொல்லலாம்ல?

நம்ம மூத்த பதிவர்களோட ட்ரேட்மார்க்கான :) இந்த ஸ்மைலிய மட்டும் போட்டா எப்படிங்க? என்னதான் நாம பெருந்தண்மை படைச்ச ஆளுன்னாலும்(ஹி ஹி ஒரு வெளம்பரந்தேன்) இந்த மனுசப்பய மனசு எங்குட்டாலும் ஓரத்துல ஒரு சின்ன அங்கீகாரத்துக்கு ஏங்குதுண்ணே. அத கருமத்த தவிற்க முடியலண்ணே.நமக்கு பூஞ்சை மனசா வேற போச்சுண்ணே.

தாங்க முடியாம அந்த மூ.பதிவர்கிட்ட யோவ் ஒரு காட்டுபய HTML ல் எல்லாம் போய் சரி பண்றானே ஒரு வார்த்தை பாராட்ட மாட்டியான்னு கேட்டா, மக்களே அவர் சொன்னத அப்படியே இங்க காப்பி பேஸ்ட் பண்றேன்.

"varavan poravanelam computer kathukkirathalathan market ippadi naasamaa poyirchu"

இது நியாயமா?நேர்மையா? எனக்கொரு நீதி வேணும். இங்க அவரு வந்து பகிரங்கமா என்னை பாராட்டி(ஆக்சுவலி எனக்கு இதெல்லாம் பிடிக்காதுதான் இருந்தாலும் ஹிஹி) கமெண்ட் போடனும்.

இல்லைன்னா அந்த சாட் ஹிஸ்டரி, அப்புறம் ஒண்ணும்தெரியாத ஒரு அப்பாவி சின்ன பொண்ணை ஏமாத்தி கல்யானம் பண்ணியது பத்தில்லாம் எழுத வேண்டி வரும்.

இது எச்சரிக்கை.

டிஸ்கி1. பதிவுல படம் பெருசா தெரிய அப்லோட் பண்ண படத்தோட HTML கோட்ல width: 400px; height: 300px; இத தூக்கிட்டுS400ன்னு இருப்பதை S800 ன்னு மாத்தனும்.இந்த ஷார்ட்கட்டுக்கு எப்ப வேட்டு வைப்பானுங்கன்னு தெரியல. அறவழியில் ப்ராப்பரா பண்ன நினைப்பவர்கள் CVR பதிவுபடி செய்யவும்.

டிஸ்கி2. எனக்கு HTML சம்பந்தமாக தெரிந்தது இது மட்டும்தான் அதுவும் ஒரு ஃப்ளூக்கில்.

டிஸ்கி3. மேற்கண்ட இரண்டு டிஸ்கிமட்டும் தான் பதிவுக்கான மேட்டர். இவ்ளோ சின்னதா இருக்கக்கூடாதுன்னு மூத்த பதிவருக்கும் எனக்குமான ப்ரச்சனைய பொதுவுல கொண்டுவந்துட்டேன்.

டிஸ்கி4. நந்து நீங்களும் ஒரு மொக்கைபதிவர்ன்னு நெனச்சிருந்தேன், ஆனா அருமையா எழுதறீங்கன்னு போன பதிவு பாத்துட்டு இன்னொரு மூத்த பதிவர் சொல்லிட்டாருங்க. அப்பவே மனசு உடஞ்சு போச்சுங்க. அவருக்கு இந்த மொக்கை பதிவு சமர்ப்பனம்.

88 comments:

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

said...

நெம்ப நன்றி அண்ணாச்சி !!!

//நாம இருக்கோமே குறுக்கு புத்தி புடிச்சவய்ங்க. //
இந்த மாதிரி குறுக்கு வழி தான் எங்களுக்கு ரெம்ப பிடிக்கும் :)

HTML புலி நந்து வாழ்க !!!

மறுக்கா ஒரு டாங்க்ஸ் :)

said...

நீங்க 2 பேரும் அடிசிக்கோங்க.. புடிச்சிக்கோங்க.. கடிச்சிக்கோங்க.. என்னை எதுக்கு சாமி வம்பிழுக்கறிங்க..

... என்னவோ நான் அரைகொறைனு இவரு சொல்லித் தான் எல்லார்க்கும் தெரியற மாதிரி... :))

காலைல ஒரு பிரச்சனையால ஒரு கஸ்டமர், ஒரு டீலர் கூட கான் கால்ல இருந்துக் கிட்டே இதை படிச்சிட்டு பின்னூட்டமும் போட்டுட்டு இருக்கேன்.. இதெல்லாம் எனக்குத் தேவையா? :((

said...

சமீபத்தில் எனக்கு வந்த SMS
" டேய் வெண்ண. அந்த பதிவரை உன் பாஷைல அசிங்க அசிங்கமா திட்டி எதுனா கமெண்ட் போடுடா.அப்டியே ”எங்க நந்து அண்ணா ஒரு படிக்காத மேதைனு” சொல்லி வைடா.எல்லாம் என் நேரம்டா.உன்கிட்ட எல்லாம் இப்டி கெஞ்ச வேண்டி இருக்கு.”

இது நந்து அண்ணா அனுப்பின மெசேஜ் இல்லீங்கோ.. :))

said...

//தாங்க முடியாம அந்த மூ.பதிவர்கிட்ட //

ஆனாலும் அவரை இம்புட்டு அசிங்கமா சொல்லக் கூடாதுங்க்ணா. :))

said...

//நாம இருக்கோமே குறுக்கு புத்தி புடிச்சவய்ங்க. அதுக்கு முன்னமே அதுல ஒரு ஷார்ட்கட் கண்டுபுடிச்சு ப்ளாக்கரில் படம் அப்லோட் பண்ண பின்னாடி படத்தின் HTML கோடில் S400 என்பதை S800 ன்னு மாத்துனா போதும்ன்னு ஃப்ளிக்கர் தெரியாத ஊர்காரங்களுக்காக வெச்சிருக்க ப்ளாக்ல ஃபுல்ஸ்கிரீன்ல மாத்துனேன். அத CVR பதிவிலயும் கமெண்டினேன்.அப்புறம் நிலா ப்ளாக்லயும் அதே போல பண்ணேன் . டக்கராவும் இருந்துச்சு.//

அண்ணா.. உங்க ரேஞ்ச்க்கு இதெல்லாம் சப்பை மேட்டர்ணா.. நீங்க யாரு.. எப்பேர்ப்பட்டவரு.. இதை போய் பெரிசா சொல்லிக்கிறிங்களே. :))

ஆனானப்பட்ட அக்கரக்காரங்களையே பிள்ளைபூச்சியா மாத்தினவர் நீங்க.. ப்ளாகர் எல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரா? :))

said...

//ஆனா பாருங்க மக்களே குறுக்குவழி என்றும் நிரந்தரமில்லைன்னு கூகிள்காரன் ஆப்பு வெச்சுட்டான். ஃபுல்ஸ்க்ரீன்லதானே வரபோகுதுன்னு பல படத்தை ஒண்ணாக்கி ஒரு போஸ்ட் போட்டா S400to S800 டெக்னிக் ஒர்க்காகவே இல்லை.உருண்டு பெரண்டும் படம் பெருசாவல. சின்னபடமா பதிவுல பாத்தா அட்ராக்சனே இல்லாம இருக்கு.//

சிங்கம்ணே நீங்க.. கூகுள் வச்ச ஆப்புக்கே நீங்க ரிவீட் அடிச்சிட்டிங்க இல்ல.. என்னவோ போங்க.. :))

said...

// கூகிள் ஓனருக்கு அத அனுப்பிடரேன்னேன்.//

இதெல்லாம் ஓவரா இல்லீங்களா? நாம எதுவா இருந்தாலும் டைரக்டா ஓனர்கிட்ட தான் பேசுவமோ? :((

எல்லாத்தையும் தமிழ்ல டைப் பண்ணிட்டு அதுக்கும் Language = Tamil அப்டினு ஒரு டிஸ்கி போட வேண்டியது தானே.. :)

said...

கொஞ்சம் ஊர் சுத்த வேண்டி இருக்கு.. வந்து கும்மில ஜாய்ண் பண்ணிக்கிறேன்...

said...

:-)

said...

// பொடியன்-|-SanJai said...
நீங்க 2 பேரும் அடிசிக்கோங்க.. புடிச்சிக்கோங்க.. கடிச்சிக்கோங்க.. என்னை எதுக்கு சாமி வம்பிழுக்கறிங்க..//

ஏன்னா நீங்கதான் வலையுலக விசயகாந்து:)) அதான் பெரும் பதிவரே!!

சொம்பு இல்லாம பஞ்சாயத்த!!!
சஞ்சய் இல்லாம பிரச்சினையா!!!

said...

சரி, நீங்க சொன்னா மாதிரி வெளிப்படையா உங்களைப் பாராட்டிடறேன். நீங்க கம்ப்யூட்டர்ல பெரிய ஆளு :)

(ஆனா, நான் அந்த மூ பதிவர் இல்லீங்கோ!)

உங்கள் பதிவுகள் வாசிக்க very interesting!

said...

vevagaram perusa irukkum polirukkE..

unmaigal seekkiram velivarattum nandhannE naanga ellam unga pakkam thaan

said...

அந்த மூத்த பதிவர் கேரளா மலை மீது குடி கொண்டிருக்கும் கடவுள் என்று சொல்கிறார்கள், ஆனால் அவரே அது நானில்லை என்கிறாராம்.

(பத்த வச்சிட்டியே பரட்ட)

said...

பெரும் இலக்கியவாதிகளின் முதல் தகுதியே மற்றவர்களை வம்புக்கு இழுப்பதே, நான் ஏற்கன்வே சொன்னது போல் ஈரோட்டு இலக்கிய சிங்கம் தன் பிடரியை சிலுப்ப ஆரம்பித்து விட்டது.

said...

www.flickr.com/photos/iyappan/3000926755/

ஈரோடு இலக்கியசிங்கத்தின் அசல் முகம்.
லைட்டா திரும்பியிருக்கு

said...

//HTML புலி நந்து வாழ்க !!!//
கூகில்ல தேடாம HTML மாத்துன மொத ஆளு நீங்கதான்.

Anonymous said...

what the hell is going on .what is the use this kinds of blogs,just vomiting unwanted issues.who is that persu?. normally persukaluku lollu jastheeethan!!!!!!!

said...

//varavan poravanelam computer kathukkirathalathan market ippadi naasamaa poyirchu"//

ரொம்ப டெரராட்டம் பேசியிருக்கும் அந்த மூத்த பதிவரை வன்முறையாக கண்டித்து கொள்வதாய் நான் இங்க கமெண்ட் போட்டுக்கிறேன்ண்ணா!

said...

ஏதோ கூரியர் சர்வீஸ்ல கூட இருக்கறதா கேள்விப்பட்டேன்! :))) (பத்தவைச்சுட்டா மட்டும் போதுமா அணையறதுக்குள்ள எண்ணெய் ஊத்தி எக்ஸ்டெண்ட் பண்ணுங்கப்பா!)

said...

முடியல...

said...

//இல்லைன்னா அந்த சாட் ஹிஸ்டரி, அப்புறம் ஒண்ணும்தெரியாத ஒரு அப்பாவி சின்ன பொண்ணை ஏமாத்தி கல்யானம் பண்ணியது பத்தில்லாம் எழுத வேண்டி வரும்//


பஞ்ச தந்திரம் கோதண்டம்:

எப்ப.... எங்க.... எங்க....


-------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

said...

பதிவுக்கு சரிசமமா கமெண்ட்ஸ் ரொம்ப நல்லாவே இருக்கு. காலங்காத்தால இதுல தான் முழிச்சேன். :) சிரிச்சிகிட்டே தான் ஆஃபீஸ்க்கு கெளம்பினே.
----------------
நந்து, HTML எல்லாம் வெச்சு கலக்றீங்க. உண்மையா சொல்லனும்ன, இது வரைக்கும் எனக்கு HTML தெரியாது :)
----------------
கூகில்-கு தமிழ்ல மெயில் அடிக்கனும்னு நெனச்சீங்களா இல்ல, அடிச்சிட்டீங்களா?
----------------
குடுகுடுப்பை said...

//HTML புலி நந்து வாழ்க !!!//
கூகில்ல தேடாம HTML மாத்துன மொத ஆளு நீங்கதான்.

எனக்கு தெரிஞ்சும் நீங்க தான் ஃப்ர்ஸ்டு. கூகில் மட்டும் ஃப்ரீய இல்லேன, பல பேருக்கு எப்பவோ வேல போயிருக்கும் :)
----------------
அப்பறோம், கண்டவனெல்லாம் கம்ப்யூடர் படிச்சதுனால தான் இப்பொ மார்க்கெட் இப்படி நாசமா பொச்சு அப்படினு சொல்றது, அறியாமைனு தான் சொல்லனும். இத பத்தி, நானும் கொஞம் internetல தேடி நேரம் இருக்கும் பதிவா போடறேன் :)
----------------
மத்த படி ப்ரச்சனைனு வந்தா சொல்லுங்க, ஆளுங்க ஏற்கனவே ஆடோல தான் இருக்காங்க. நீங்க ஒகேனு சொன்னா, உடனே ஆடோவ ஸ்டார்ட் பண்ணவேண்டியது தான்.

said...

//கொடுமை என்னன்னு அதுக்கெல்லாம் விளக்கம் சொன்னது இன்னொரு நம்ம பய அரைகுறை சஞ்சய்.)//

எச்சுச் மீ மிஸ்டர் HTML புலி.. நானு 2000லயே JDK 1.2 படிச்சவன்.. நானெல்லாம் சன் மைக்ரோ சிஸ்டம்ல இருக்க வேண்டியவன்.. :))

said...

//நானெல்லாம் சன் மைக்ரோ சிஸ்டம்ல இருக்க வேண்டியவன்.. :))//

அங்கெள்ளாம் ஆபிஸ் கூட்டறதுக்கு மிஷின் தானாமே

said...

// பரிசல்காரன் said...

முடியல.../

ரீப்பீட்டே... :))

said...

//வால்பையன் said...

//நானெல்லாம் சன் மைக்ரோ சிஸ்டம்ல இருக்க வேண்டியவன்.. :))//

அங்கெள்ளாம் ஆபிஸ் கூட்டறதுக்கு மிஷின் தானாமே/

LOL... :))

said...

//நீங்க ஒகேனு சொன்னா, உடனே ஆடோவ ஸ்டார்ட் பண்ணவேண்டியது தான்.//

ஈரோட்டுல ஆட்டோ சார்ஜ் நிறைய வாங்குறாங்க. ரெண்டு ஆட்டோ அனுப்ப முடியுமா?

said...

எனக்கும் கணினியில் பட்ம் பாக்கத் தான் தெரியும். இந்தக் கருவிப் பட்டி போடுறதுக்கே நண்பர் சொல்லித் தந்தார். அப்புறம் வராம நானே தேடிப் பிடிச்சு போட்டன். அவரு சொன்னது நீயே தேடிப் பழகு. சின்ன விசயம் தானே என்று. அது சரி இந்தச் சின்ன விசயத்தை வச்சு ஏன் இந்தளவு ஆர்ப்பாட்டம்? கணினி தெரிஞ்சாப் பெரியாளுங்களா?

said...

Nandhu M/o HTML

M/o -> Master of

said...

Nandhu: உங்க பேர போடாம மூத்த பதிவர்ன்ன்னு போட போறேன்
12:12 PM பொதுவுல வந்து என்னை பாராட்டியாகனும்
இல்லைன்னா அடுத்த போஸ்ட்ல பேரைய்ம் சொல்லிடுவேன்
me: erodela oru koloai vizum. ithu ellam black mail
12:13 PM Nandhu: நான் சொல்றதையெல்லாம் சொல்லனும்" மச்சான் ஒரு படிக்காத மேதை. ஜி.டி நாயுடு. அவ்ரெல்லாம் படிச்சிருந்தா பில் கேட்ஸ்லாம் பிச்சை வாங்கனும். அவர் இங்க இருக்க வேண்டிய ஆள் இல்லை. நல்லவர் வல்லவர்
12:14 PM காப்பி பண்ணி வெச்சுகுங்க நாளைக்கு என் போஸ்ட்ல கமெண்ட் போட வசதியா இருக்கும்

said...

//காப்பி பண்ணி வெச்சுகுங்க நாளைக்கு என் போஸ்ட்ல கமெண்ட் போட வசதியா இருக்கும்//

இதையும் அவரே சொல்லிருக்காருன்னா
அவரு எவ்ளோ நல்லவரா இருக்கனும்

said...

//22:09 யோவ் ஒரு காட்டான் என்ன வேலைல்லாம் பண்றான் ஒரு போஸ்ட் போட்டு பாராட்ட வேணாம் தலைல முக்காடு போட்டுகிட்டு தனியா சாட்டில் கூடவா பாராட்ட கூடாது?
பொறாமை புடிச்ச மனுசங்கய்யா//

தலைல முக்காட்ட போட்டுகிட்டு தனியாவே சொல்லி இருக்கலாம்ல மாமு. பாருங்க இப்போ எத்தன பேரு கொல வெறியோட இருக்காங்க

said...

இளா மாமு சொன்னது பத்தாது இன்னும் நிறய எதிபார்க்கிறேன் உங்ககிட்ட.

முடியும் உங்களால இன்னும் நல்லா ட்ரை பண்ணுங்க

said...

// பொடியன்-|-SanJai said...

ஆனானப்பட்ட அக்கரக்காரங்களையே பிள்ளைபூச்சியா மாத்தினவர் நீங்க.. ப்ளாகர் எல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரா? :))//

சஞ்சய் இதுவும் ஒரு அக்கரை பார்ட்டிதான். தெரியாதா? அதான் இந்த கொலைவெறி

said...

//இப்போ எத்தன பேரு கொல வெறியோட இருக்காங்க//

அப்படியெல்லாம் உட்ருவோமா

அகிலஉலக இலக்கியமாமேதை நந்து
தொண்டர்கள் படை
ஈரோடு கிளை

said...

நாதாஸ் நம்ம ரெண்டு பேருக்குத்தான் இது நல்லா உதவும்ன்னு எனக்கு தெரியும்

said...

நன்றி சரவனகுமரன்

said...

குசும்பா அப்போ

சஞ்சய்=சொம்பு
சொம்பு=சஞ்சய்

அப்படியா? அப்போ பொடியன் சஞ்சய்ங்கறதுக்கு பதிலா சொம்பு சஞ்சய்ன்னு மாத்திடலாமா?

said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
(ஆனா, நான் அந்த மூ பதிவர் இல்லீங்கோ)//

ஆனா சுந்தர்ஜி நீங்க மூத்த எழுத்தாளார் ஆச்சே. அது மூத்த பதிவர விட இன்னும் கஷ்டமாச்சே?

// உங்கள் பதிவுகள் வாசிக்க very interesting!//

இது உண்மைன்னா வசிஷ்டர் வாயால ப்ரம்மரிஷி பட்டம்தான்.

இப்போ இளவஞ்சிக்கு பண்ணது மாதிரி அடுத்த மொக்கைய உங்களுக்கு சமர்ப்பனம் பண்ண வேண்டியதான் :)

said...

ஜீவ்ஸ் பாவம் நீங்கதான். நீங்கதானே அந்த மூத்த ஒஅதிவர்ன்னு எத்தனை பேரு உங்கள கேள்விகேட்டுட்டாங்க.

பாருங்க மூத்த பதிவர்னா எவ்வளவு பேர் கொலைவெறியோட இருக்காங்கன்னு

said...

வாலு சிங்கம் கிங்கம்ன்னு என்ன யார்கூடவாச்சும் கோத்துவுடாதய்யா.

நான்லாம் பூனகுட்டிய்யா பூனகுட்டி..

said...

:)

said...

// குடுகுடுப்பை said...

//HTML புலி நந்து வாழ்க !!!//
கூகில்ல தேடாம HTML மாத்துன மொத ஆளு நீங்கதான்.//

தேடலாம்தாங்க. ஆனா ஆதுக்கும் விளக்கம் இங்ளீசுலதானே கொடுப்பாய்ங்க. :(

said...

அனானி அன்னாச்சி or தங்கச்சி முதல் ரெண்டு வரி கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

ஆனா நீங்க சொன்ன பெருசுங்க பண்றது உண்மைதான் :P

said...

ஆயிலு குரியருக்கும் ஒரு நாள் ஆப்பு வெச்சுட்டா போச்சு.

said...

//பரிசல்காரன் said...

முடியல...//

மாத்ரூபூதம்ன்னு ஒருத்தர் இருந்தாரு இப்போ செத்துட்டாரு.

இப்போதைக்கு சேலம் சித்தவைத்தியர் ஒருத்தர் டீவில வந்து திட்டுவாரு, அழுவாரு, அவர அணுகி பாருங்க நல்ல பலன் கிடைக்கலாம்.

said...

Mr தருதலை நீங்க ஆர்வப்பட்ட விஷயத்தை அம்பலப்படுத்த முடியாமயே போயிடுச்சு. சாரிங்க.

இன்னொரு நாள் அந்த ஆளு மாட்டும் போது ப்ளாக்மெயில் பண்ன உபயோகமா இருக்கும் :)

said...

//சேலம் சித்தவைத்தியர் ஒருத்தர் டீவில வந்து திட்டுவாரு, அழுவாரு,//

சில சமயம் அடிக்க கூட செய்வாராம்

said...

ராம் ரிப்பீட்டே போட்ட மேட்டருக்கு பரிசலுக்கு சொன்ன பதிலை படிச்சுட்டு சிங்கப்பூர்ல இருந்து வந்ததும் அணுகவும்.
(அவரு சிங்கப்பூர் விசிட்லாம் வராரா எந்த லாட்ஜ்ல தங்கறார்ன்னு பரிசல்கிட்ட கேட்டுக்க.ம்ஹூம்ம் இந்த சின்ன வயசிலயே இப்படியா.. ஆண்டவா)

said...

கிரண் எல்லாம் கில்மா வேலைப்பா. ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி ரவுசு பண்ணி.

அதுவுமில்லாம அந்த மரணதரிசனம் போஸ்ட் படிச்சதிலிருந்து எல்லாருமே என்ன பாத்தா இப்ப உடம்பு நல்லா இருக்கான்னு கேக்கறாங்க.

இல்லைனாலும் ஒரு கேன்சர் பேஷண்ட்டை பாக்கர மாதிரி இருக்கும் ஃபீலிங் எனக்கு.

லொல்லு திமிருல்லாம் அப்படியே தான் இருக்குங்கறதுக்குத்தான் இந்த போஸ்ட்.

நம்ம போதைக்கு இளா மச்சாந்தான் ஊறுகாய். உரிமையுள்ள இடத்துலதானே இதெல்லாம் பண்ணா நல்லா இருக்கும்

said...

நிஜமா நல்லவன் கொஞ்சம் லேட். நல்ல கும்மி மிஸ்ஸிங் ஆயிடுச்சில்ல?

said...

வாலி யூ கண்டினியூ யுவர் கும்மி ( தொர இங்கிலீசெல்லாம் பேசுது)

said...

ஆட்காட்டி சார் இது சும்மா ஜுஜுபி மேட்டர். சீரியஸா இந்த போஸ்ட்ட படிச்சிருந்தீங்கன்னா சாரிங்க.

said...

வெண்பூ நீங்க சொன்னத நான் வேர மாதிரி விளக்கம் நெனச்சுட்டேன்.

விளக்கத்த சொன்னா சேலம் சித்த வைத்தியர் "வேணாம்டா நான் உங்க அப்பன் மாதிரிடா, தாத்தா மாதிரிடா, ஒண்ணுவிட்ட மச்சினன் மாதிரிடான்னு அழுதுகிட்டே திட்டுவாரு, வால்பையன செஞ்சமாதிரி அடிப்பாரு.

சோ நான் அந்த விளக்கத்தை சொல்லல.

said...

ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பா... காலைலயிருந்து இந்த மூ.பதிவர் யாரு யாருனு நானும் கூகில்ல எல்லாம் தேடிப் பாத்தா... தொட்ரட்டும் உங்க லொல்ஸ்... :)

said...

கரெக்ட்டா எல்லோர் பேரையும் சொல்லிட்டேந்தானே, யார் பேரையாச்சும் விட்டிருந்து அவங்க இதே மாதிரி தனியா போஸ்ட் போட்டு மானத்த வாங்கிட போறாங்க

said...

நான் கும்மி குத்தியிறுக்கிறேன்.
ஆனால் எனக்கு ஒரே ஒருமுறைதான் பதில் அளித்து உள்ளீற்கள். எங்கள் கும்மி சங்க தலைவர் குசும்பன் ஊருக்கு வரும் போது இது பற்றி புகார் செய்யப்படும்

said...

//உங்கள் பதிவுகள் வாசிக்க very interesting!//
Repeate,,..


ஓவழ் மப்புழ
இழா

said...

//சஞ்சய்=சொம்பு
சொம்பு=சஞ்சய்

அப்படியா? அப்போ பொடியன் சஞ்சய்ங்கறதுக்கு பதிலா சொம்பு சஞ்சய்ன்னு மாத்திடலாமா?
//

ச்சாரி பிரதர்.. யூ ஆர் டூ லேட்டு..

2 வருஷமா ஒருத்தி இப்டி தான் கூப்ட்டுட்டு இருக்கா.. :)

நாங்க எல்லாம் பொறக்கும் போதே மானங்கெட்டவங்க.. இப்போ போய்..

போங்க.. போய் புழு பூச்சிய போட்டோ புடிக்கிற வழியப் பாருங்க.. :))

said...

இளா அக்கரை பார்ட்டியா? :))

சொல்லவே இல்ல... ஹய்யோ ஹய்யோ.. இதுவும் அதே அக்கரைப் பழம் தானா இல்லை கொஞ்சம் தப்பி வளர்ந்தவரா? :))

said...

// ila said...
Nandhu: உங்க பேர போடாம மூத்த பதிவர்ன்ன்னு போட போறேன்
12:12 PM பொதுவுல வந்து என்னை பாராட்டியாகனும்
இல்லைன்னா அடுத்த போஸ்ட்ல பேரைய்ம் சொல்லிடுவேன்
me: erodela oru koloai vizum. ithu ellam black mail
12:13 PM Nandhu: நான் சொல்றதையெல்லாம் சொல்லனும்" மச்சான் ஒரு படிக்காத மேதை. ஜி.டி நாயுடு. அவ்ரெல்லாம் படிச்சிருந்தா பில் கேட்ஸ்லாம் பிச்சை வாங்கனும். அவர் இங்க இருக்க வேண்டிய ஆள் இல்லை. நல்லவர் வல்லவர்
12:14 PM காப்பி பண்ணி வெச்சுகுங்க நாளைக்கு என் போஸ்ட்ல கமெண்ட் போட வசதியா இருக்கும்//

// பொடியன்-|-sanjai said...
சமீபத்தில் எனக்கு வந்த SMS
" டேய் வெண்ண. அந்த பதிவரை உன் பாஷைல அசிங்க அசிங்கமா திட்டி எதுனா கமெண்ட் போடுடா.அப்டியே ”எங்க நந்து அண்ணா ஒரு படிக்காத மேதைனு” சொல்லி வைடா.எல்லாம் என் நேரம்டா.உன்கிட்ட எல்லாம் இப்டி கெஞ்ச வேண்டி இருக்கு.”

இது நந்து அண்ணா அனுப்பின மெசேஜ் இல்லீங்கோ.. :)//

ஹிஹி.. பாருங்க மக்களே.. எவ்ளோ நல்லவரு இவரு...

said...

// ila said...
Nandhu: உங்க பேர போடாம மூத்த பதிவர்ன்ன்னு போட போறேன்
12:12 PM பொதுவுல வந்து என்னை பாராட்டியாகனும்
இல்லைன்னா அடுத்த போஸ்ட்ல பேரைய்ம் சொல்லிடுவேன்
me: erodela oru koloai vizum. ithu ellam black mail
12:13 PM Nandhu: நான் சொல்றதையெல்லாம் சொல்லனும்"

மச்சான் ஒரு படிக்காத மேதை.

ஜி.டி நாயுடு. அவ்ரெல்லாம் படிச்சிருந்தா பில் கேட்ஸ்லாம் பிச்சை வாங்கனும். அவர் இங்க இருக்க வேண்டிய ஆள் இல்லை. நல்லவர் வல்லவர்
12:14 PM காப்பி பண்ணி வெச்சுகுங்க நாளைக்கு என் போஸ்ட்ல கமெண்ட் போட வசதியா இருக்கும்//

// பொடியன்-|-sanjai said...
சமீபத்தில் எனக்கு வந்த SMS
" டேய் வெண்ண. அந்த பதிவரை உன் பாஷைல அசிங்க அசிங்கமா திட்டி எதுனா கமெண்ட் போடுடா.அப்டியே ”

எங்க நந்து அண்ணா ஒரு படிக்காத மேதைனு

சொல்லி வைடா.எல்லாம் என் நேரம்டா.உன்கிட்ட எல்லாம் இப்டி கெஞ்ச வேண்டி இருக்கு.”

said...

/போங்க.. போய் புழு பூச்சிய போட்டோ புடிக்கிற வழியப் பாருங்க.. :))
//
ஆமா மிருக வதை சட்டத்துல உள்ளே போட வேண்டிய ஆளு இவரு. ஒரு மிருகம் கூட இவுங்க தெருப் பக்கம் போறதே இல்லியாம்..

நந்துவின் லீலைகள் பதிவா வர வேண்டிய கட்டாயம் வந்தாச்சு..

said...

//ஆமா மிருக வதை சட்டத்துல உள்ளே போட வேண்டிய ஆளு இவரு. ஒரு மிருகம் கூட இவுங்க தெருப் பக்கம் போறதே இல்லியாம்..//

சும்மா சொல்லாதிங்க
எல்லா மிருகமும் ஏன் இன்னைகு போட்டோ எடுக்க வரலைன்னு வீட்டுக்கு வந்துடுதாம்.

said...

நந்துவின் மனம் திறந்த உரையாடல்

said...

இந்த இடத்துல ஒரு விஷயம் சொல்லனும் CVR க்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. சூதுவாது தெரியாது. தங்கமான புள்ளைங்க.

இதுக்கு அண்ணன் கிட்ட இருந்து எவ்ளோ வாங்கினிங்க ?????

said...

நாம இருக்கோமே குறுக்கு புத்தி புடிச்சவய்ங்க.

என் கிட்ட அனுமதி கேக்காம எப்படி என்ன பத்தி உண்மை எல்லாம் எழுதலாம், இத வன்மையா கண்டிக்கரேன்...

said...

கொடுமை என்னன்னு அதுக்கெல்லாம் விளக்கம் சொன்னது இன்னொரு நம்ம பய அரைகுறை சஞ்சய்.

இதெல்லாம் நீங்க சொல்லாமயே எல்லாருக்கும் தெரியுமே.

said...

:-)

said...

இப்படி எழுதும் போது கொஞம் பொடி வெச்சு எழுதனும் இப்படி மொட்டதாசன் குட்டைல விலுந்த மாதிரி இல்ல.

நாங்க யாரு யாரையெல்லா சந்தேகப்படுரது. :-(

said...

இதெல்லாம் எப்ப நடந்தது!!??

said...

//
பொடியன்-|-SanJai said...

சிங்கம்ணே நீங்க.. கூகுள் வச்ச ஆப்புக்கே நீங்க ரிவீட் அடிச்சிட்டிங்க இல்ல.. என்னவோ போங்க.. :))
//

ரிப்பீட்டு

said...

HTML புலி நந்து வாழ்க !!!

said...

75

said...

//
பொடியன்-|-SanJai said...

எச்சுச் மீ மிஸ்டர் HTML புலி.. நானு 2000லயே JDK 1.2 படிச்சவன்.. நானெல்லாம் சன் மைக்ரோ சிஸ்டம்ல இருக்க வேண்டியவன்.. :))
//

(ஏ நானும் ரவுடிதான்........ நானும் ரவுடிதான்...........)
:)))))))))))))))

said...

//
வால்பையன் said...

//நானெல்லாம் சன் மைக்ரோ சிஸ்டம்ல இருக்க வேண்டியவன்.. :))//

அங்கெள்ளாம் ஆபிஸ் கூட்டறதுக்கு மிஷின் தானாமே
//

ரிப்பீட்டே

said...

/
ILA said...

Nandhu: உங்க பேர போடாம மூத்த பதிவர்ன்ன்னு போட போறேன்
12:12 PM பொதுவுல வந்து என்னை பாராட்டியாகனும்
இல்லைன்னா அடுத்த போஸ்ட்ல பேரைய்ம் சொல்லிடுவேன்
me: erodela oru koloai vizum. ithu ellam black mail
12:13 PM Nandhu: நான் சொல்றதையெல்லாம் சொல்லனும்" மச்சான் ஒரு படிக்காத மேதை. ஜி.டி நாயுடு. அவ்ரெல்லாம் படிச்சிருந்தா பில் கேட்ஸ்லாம் பிச்சை வாங்கனும். அவர் இங்க இருக்க வேண்டிய ஆள் இல்லை. நல்லவர் வல்லவர்
12:14 PM காப்பி பண்ணி வெச்சுகுங்க நாளைக்கு என் போஸ்ட்ல கமெண்ட் போட வசதியா இருக்கும்
/


:)))))))))
ROTFL

said...

அவ்வ்வ்வ்வ்வ்:---))))))))) ரீப்பீட்டு

said...

யாராவது ஊட்டி மலைச் சிங்கம் என் மாமா ல.ஆ. தான் அந்த பெருசுன்னு சொல்லி கலாசுனீங்க... மக்கா... ரெண்டுல ஒன்னு இருக்காது
(கிட்னி)

ஹி ஹி....

said...

பதிவும் கலக்கல், பின்னூட்டங்களும் செம காமடி சார்.. சூப்பர் :-)

said...

Miga alazha irukirathu ungaloda eluthu mattrum ungaloda tamil alumai, valthukal :-) Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

said...

82 கமெண்டுல என்ரது தொலஞ்சு போயிராதா?
இருந்தாலுக் கேக்குறேன்
1)என்னையப் பாத்தா மூத்த பதிவனாத் தெரியலையா?
2)அல்லது நானென்ன மோசமானவன் இல்லியா?
எனக்கு ஏன் எச்சரிக்கை பண்றதேயில்ல? உங்கூட டூ
சென்ஸஸ்ல வெசிருக்கேன் ஆப்பு! பெண் கரடிங்ககிட்ட புடிச்சுக் குடுக்கறேன் பாத்துக்கோ!

said...

many more hpy returns...

said...

திரு நந்து அவர்களுக்கு,
வணக்கம்.தங்கள் பதிவுகளைப் படிகத்தேன்.நன்றாக உள்ளது.
நானும் ஈரோடுதான்.தங்களையும் மற்ற ஈரோடு பதிவர்களையும் சந்திக்க முடியுமா? எனது மின்னஞ்சல் முகவரி
gtmani@gmail.com

said...

gtmani80@gmail.com
திரு நந்து அவர்களுக்கு,
வணக்கம்.தங்கள் பதிவுகளைப் படிகத்தேன்.நன்றாக உள்ளது.
நானும் ஈரோடுதான்.தங்களையும் மற்ற ஈரோடு பதிவர்களையும் சந்திக்க முடியுமா? எனது மின்னஞ்சல் முகவரி
gtmani80@gmail.com

Anonymous said...

First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.

http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

said...

நந்து சார்..
உங்களுக்கு என்னால் ஆன சிறிய பரிசு..
http://beemorgan.blogspot.com/2009/07/blog-post.html

நீங்களும் தொடர்ந்தால் பெரிதும் மகிழ்வேன்.. :)