ஒரே பந்தில் இரண்டு விக்கெட் Part2

முதல் பகுதி ரொம்ப இழுத்துட்ட மாதிரி தெரியுது.அதனால இத முடிஞ்ச அளவு சுருக்கமா

மொதல்ல கிரவுண்டா ஒரு ஆடு மாடு மேயும் காடு,அதும் காட்டுகார அய்யன் வந்தா சொந்தபலத்துல ஓடி தப்பிச்சுக்கனுமாம்.

டாஸ்ல அவங்க டீம் வின்பண்ணி பேட்டிங் எடுத்தாங்க(லோக்கல் கிரிக்கெட்ல டாஸ் வின் பண்ணா யாராயிருந்தாலும் பேட்டிங்தான்,)ரொம்ப சுமாரா பேட்டிங் பண்ணி பத்தோ, பதினைத்தோ ரன் எடுந்தானுங்க.
அடுத்து எங்க பேட்டிங், நானும் பழனிகுமாரும்(என்கூட படிச்சதுல படிச்சு உருப்பட்ட ஒரே ஆத்மா) ஓப்பனிங்.முதல் பால்ல ஒரு ரன் எடுத்துட்டு என்கிட்ட பேட்ட கொடுத்துகிட்டு இருந்தப்பதான் டீம்கேப்டன்(செம குண்டன்)பவுலிங் சைடு ஸ்டெம்ப்கிட்ட வந்து "ஏண்டா பீஜிஸ் சொண்ணீங்களாடா" ன்னு ஸ்டெம்ப்ப ஆவேசமா தட்டிட்டு குமார பாத்து நீ அவுட்டுடான்னான். அதே வேகத்துல எங்கள தாண்டி குடுகுடுன்னு ஓடி என்சைடுல இருந்த ஸ்டெம்பயும் தட்டீட்டு என்ன பாத்து "நீயும் அவுட்டுடா"ன்னுட்டான்

நானும் குமாரும் கேனையாட்டம் நடு கிரவுண்டுல நிக்கறோம்.பெரிய ரகளையாயிடுச்சு.பேட்ட மாத்தரப்போ பீஜிஸ் சொல்லனுமாம், கருமம் அப்படீன்னா என்னன்னு அவனுங்களுக்கு சொல்லவும் தெரியல .

அந்த பக்கமா எலெக்ட்ரீசியன் வேலைக்கு போண சீனியர் கிரிக்கெட் அண்ணனை பஞ்சாயத்துக்கு கூப்டாச்சு.அவரும் அந்த ஊரு டீமுக்கான சொந்த ஊரு பலம், அந்த ஊரில் தன் எலக்ட்ரீசியன் வேலைக்கு உண்டாகும் பாதிப்பு போறவற்றின் அனைத்து சாத்தியக்கூறையும் ஆராய்ந்தார்.

சொந்த ஊரில் சொறி நாய்தான் சிங்கமாம்.ரெண்டு பேரும் அவுட்,இதில் மாற்றமில்லையென்றானது.

கடைசியில் பரிதாபமாக ஒரே பந்தில் ரெண்டு பேர் எப்படி அவுட்டாகமுடியும்னும் ஈனஸ்வரக்குரலில் கேட்டும்பாத்தாச்சு. ரன் அவுட்ல எந்த பக்கம் அடிச்சாலும் அவுட்தானே? நான் ரெண்டு பக்கமும் அடிச்சுட்டேன் என்று லாஜிக்கலாக(?)பேசிவிட்டான் குண்டன்.


அப்போ இருந்து இப்போ வரைக்கும் இந்த சந்தேகம் முழுசா க்ளியர் ஆகவே இல்லை.

யாராச்சும் சொல்லுங்க ரெண்டு விக்கெட் ஒரே நேரத்துல எடுக்க முடியுமா?


மேட்ச் முடிவா? எங்க டீம் டெயில் எண்டர் குட்டி பசங்களே விளாயாடி ஜெயிச்சுட்டாங்க.

பீஜீஸ்னா என்னவா? அது BC- bat change.(இதயும் குன்சா நாங்களே யூகிச்சது)

16 comments:

said...

அவிட்டா அவிட்டா.....சூப்பர்

Anonymous said...

I too have such experience. since then i'v stopped playing cricket.

Gud for crickt atleast...hihihi

said...

இது பற்றி நான் பதிவு இப்போதுதான் போட்டேன். பார்க்க: http://dondu.blogspot.com/2007/11/blog-post_4632.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

பவன்குட்டி மாமா அவுட்டானதுல இவ்வளவு சந்தோஷமா?

said...

மதன் அதுக்காகவெல்லாம் விளையாடாம இருக்க முடியுமா?

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜமப்பு

said...

வருகைக்கும், விளக்கமாக ஒரு போஸ்ட் போட்டதுக்கும் டோண்டு சாருக்கு நன்றி.

said...

அப்ப ரன் எடுக்காம, பேட் பிடிக்காமயே அவுட்டா?
நல்லாதான் இருக்கு அனுபவம். அடுத்தடுத்து வாங்க.

said...

கொடுமையே அதுதானே வித்யா

Anonymous said...

(லோக்கல் கிரிக்கெட்ல டாஸ் வின் பண்ணா யாராயிருந்தாலும் பேட்டிங்தான்,)

angkeeyum appatiththaanaa?

said...

//
வித்யா கலைவாணி said...
அப்ப ரன் எடுக்காம, பேட் பிடிக்காமயே அவுட்டா?
நல்லாதான் இருக்கு அனுபவம். அடுத்தடுத்து வாங்க.

//
நல்லாயிருக்கு!!

said...

yov annachi, ennaya neenga, anguttu photos-la kalakreenga, inguttu ezhudradula kalakreenga. unga blog ennoda favorite list-la add panna vendi irukum poliruke... apdi ethana blogs-a add panni iruke nu kekapadaadhu. iduvaraikum onnum illa :).
ungala meet pannanum nu nenekren. :)

~Truth

PS- ida apdiye tamil-a adichirunda nalla irundirukum, aana tamil font avala type panna theriyaadu, aana vegama padichiduven :)

said...

Truth இதெல்லாம் ஓவரு. நான் எழுதுவதெல்லாம் மொக்கை வகை.

ஈரோடு எப்ப வரீங்க ?

said...

Erode - varen, varaduku munnadi ennoda phone number-oda oru comment podren. reply pannunga. varen :)

~Truth

said...

மெயில் பண்ணி விடுங்க nandhuu@gmail.com

said...

kandippa

said...

என்னுடைய நண்பன் ’Truth' சொல்லித் தான் இந்தப் பக்கம் வந்தேன். பட்டையக் கெளப்பறீங்க நந்து. சிரிப்பை அடக்க முடியலை. நானும் இதையெல்லாம் கொஞ்சம் உங்க ஊர் பக்கத்திலேயே (சத்தியமங்கலம் தெரியுமா உங்களுக்கு)இருந்து நானும் பண்ணியிருக்கேன். அதனால ஈரோடு வட்டார மொழியில இருந்து நிறைய விஷயங்கள் எனக்கு ரொம்ப பழக்கமா, ஏதோ பக்கத்தில இருந்து பாக்கற மாதிரியே இருந்திச்சு. உங்களோட ஜனவரி மாத PIT ஃபோட்டோ சூப்பர். நிலாவுக்கு சுத்தி போடுங்க.