ஒரே பாலில் எத்தனை விக்கெட் எடுக்கலாம்?

மொக்கைல்லாம் இல்லைங்க. நிஜமாவே என்னோட ரொம்ப நாள் சந்தேகம் இது. என்னடா இது பைத்தியக்காரத்தனமான கேள்வின்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு ஒரு ப்ளாஷ்பேக்க சொல்லியே ஆகனும்.

அப்போ ஆறாவதுபடிச்சுகிட்டு இருந்தேன்.ஏண்டா கடைசிவரைக்கும் அதானேடா படிச்சன்னு விவேக் மாதிரி கேக்கப்படாது. ஒரு நாளுக்கு ஒரே ஒருதடவை வரும் பஸ்ஸை ஸ்கூல் பசங்கல்லாம் ஓடிவந்து வேடிக்கை பாப்போம். அந்த ரேஞ்ச் ஊரு குரும்பபட்டி. என் ஸ்கூல் இருந்த ஊரு.கிட்டதட்ட பனிஷ்மெண்ட் ஏரியா. ஆனா கிரிக்கெட் ஆர்வத்துல சிட்டியவிட பெரிய ஊரு. ஒரு டெஸ்ட்மேட்ச் நடந்தா ஊருல 15 பசங்களாச்சும் காதவிட்டு எடுக்காத ரேடியோ ப்ளஸ் கைல ஒரு பேப்பர் பென்சிலோட தான் எங்க பாத்தாலும் சுத்துவாங்க. பேப்பர் பென்சில் எதுக்குன்னா ஸ்கோர் குறிச்சுக்க.அதான் ரேடியோவிலேயே ஸ்கோர் சொல்வானேடாங்கறீங்களா?. பயபுள்ளைங்க கிரிக்கெட் விஷயத்துல எவனையும் நம்ப தயாரில்லைங்க. இதுல ஸ்கோர் குறிக்கும் ரெண்டு மூணு பேருக்கு நடுவில ஸ்கோர் சம்பந்தமா சண்டை வரது தனிக்கதை.

அந்த பணிஷ்மெண்ட் ஏரியாவில வந்து மாட்டிகிட்ட ரெண்டு மூணு வாத்தியாருங்க அப்புறம் அந்த ஊருல இருந்த ஒரு ஹோமியோபதி டாக்டர் இப்படி அப்படி நல்லா கிரிக்கெட் தெரிஞ்ச க்ரூப் நல்லா பார்ம் ஆயிடுச்சு. அதுல சின்னபசங்களைல்லாம் சேத்துக்க மாட்டாங்க. என்னய மட்டும் விக்கெட் கீப்பர் பின்ன்ன்னாடி நின்னு கீப்பர் மிஸ் பண்ற பால தூக்கி போட விடுவாங்க.அதும் வாத்தியார் பையன்ன தகுதில(அதே ஸ்கூல்ல எங்கப்பாவும் அம்மாவும் வேலை பாத்தாங்க). அந்த பந்து பொறுக்கும் வேலையவே விம்பிள்டன்ல பந்து பொறுக்கிப்போடும் பசங்களோட அர்ப்பணிப்பு உணர்வு போல செய்வேன்.

எப்போ தான் நாமளும் சீனியர் ஆவறது. அப்பத்தான் செல்லிவலசு பெரியசாமி சொன்னான் டேய் நாம மொண்டியூத்தாங்கரை( இது 6 km தூரத்தில் இருக்கும் ஊரு.) பசங்களோட டோர்ணமெண்ட் போலாம். அங்க ஜெயிச்சா நாமளும் சீனியர்டான்னு.ஒரே ஒரு மேட்சல்லாம் டோர்ணமெண்ட்டுன்னு சொல்லகூடதுன்னுலாம் தெரியாது. இத கேட்ட உடனே ஏழையின் வியர்வை, குழந்தையின் சிரிப்பு,அதிகாலை பனித்துளி,காதலியின் முத்தம் ரேஞ்சுக்கு மனசு பரவசமாயிடுச்சு. ஆனாலும் டோர்னமெண்ட் ஆடற அளவுக்கு நாம தகுதியான்னு ஒரு பயம். சரி தகுதிப்படுத்திக்குவோம்ன்னு அன்னைல இருந்து பயங்கர ப்ராக்டீஸ்.

சீனியர்ஸ்க்கும் ரொம்ப சந்தோஷம். பசங்கள தயார் படுத்துவோம்ன்னு அப்பப்போ வந்து பால் போடறது டிப்ஸ் கொடுக்கறதுன்னு பரபரப்பாயிடுச்சு ஊரு.கட்டாந்தரையிலேயே ஜாண்டி ரோட்ஸ் ரேஞ்சுக்கு டைவ்லாம் அடிச்சு ப்ராக்டீஸ்லயே அங்கங்க காயம் வேற.மேட்ச்க்கு போறன்னிக்கு நான் கொஞ்சம் நொண்டி நொண்டி போற அளவுக்கு கடுமையான ப்ராக்டீஸ் பண்ணீயாச்சு.

அடுத்து மேட்ச்சுக்கு பால் பேட்லாம் வேணுமே. என் சித்தி வாங்கி கொடுத்திருக்கும் கார்க் பால் ரெண்டு இருந்துச்சு((கல்லு மாதிரி பந்த பச்சபுள்ளைங்களுக்கு வாங்கி கொடுத்திருக்கா பாருன்னு ஊருல திட்டு). அப்புறம் பேட்.எங்களுக்கு கடைல வாங்கும் பேட்லாம் கனவுதான். நாங்க எப்பவும் சொந்ததயாரிப்பு பேட்லதான் விளையாடுவோம். அந்த பேட் தயாரிப்ப எழுத தனி பதிவு வேணும்.சுருக்கமா சொல்லனும்னா 10kmல இருக்க கரட்டுல(மலைல) போயி பாலமரத்த வெட்டி(அந்த மரம் கொஞ்சம் ப்ளெக்சிபிளா இருக்கும்) அதுல நாங்களே மரத்த அருவா, கொடுவா, இன்னபிற வஸ்துக்களால செதுக்கி(அப்பப்போ கையயும்) பேட் செய்வோம். ஆனா சீனியர்ஸ் நாங்களே எதிர்பாக்காதவகையில ஒரு வரலாற்று நிகழ்வுக்கான போட்டியா அதை கருதி அவங்க பேட்ட கொடுத்து விட்டுட்டாங்க.

எல்லாம் ரெடி. ஆனாலும் மேட்ச்சுக்கு நொண்டிகிட்டே போறப்பொ எனக்கு ஒழுங்கா படிக்காம எக்சாம் ஹாலுக்குள்ள போறப்போ ஒரு பதட்டமும் விரக்தியும் கலந்த உணர்வு வருமே அப்படித்தான் இருந்துச்சு. பழனிக்குமார்கிட்ட ப்ராக்டீஸ் பத்தாதுடா குமாரு.அவனுங்க பள்ளபட்டில படிக்கறானுங்க.செமயா விளையாடுவானுங்கடான்னு சொன்னேன். அவன் பாத்துக்கலாம்டான்னு ஆறுதல் சொன்னான்.ஆனாலும் ஒரு தாழ்வு மனப்பாண்மையோடதான் மொண்டியூத்தாங்கரை போய்சேர்ந்தேன்

கொஞ்சம் நீளமா போவுது, அதுனால செகண்ட் பார்ட்ல மிச்சம் ப்ளீஸ்

12 comments:

said...

அப்போ ஆறாவதுபடிச்சுகிட்டு இருந்தேன்.ஏண்டா கடைசிவரைக்கும் அதானேடா படிச்சன்னு விவேக் மாதிரி கேக்கப்படாது.

ஆகா எப்பப்பா ஆறாவது படிச்ச...

said...

உண்மை தமிழன் அண்ணன் ரேஞ்ல இருக்கு...சரி ஒரு 15 நிமிடம் டைம் குடுங்க எழுத்து கூட்டி படிச்சிட்டு வரென்...

said...

//உண்மை தமிழன் அண்ணன் ரேஞ்ல இருக்கு//

இப்படி சொல்லிடுவீங்கன்னு படாதபாடு பட்டும் இழுத்துடுச்சு
சுருக்கமா எழுதறது இவ்வளவு கஷ்டமா? :(

said...

நந்து சார், கலக்குறீங்களே?. அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க. ஆமா இதுக்கு நிலாகிட்ட தான ஐடியா வாங்கினீங்க.

said...

நன்றி வித்யா,

Anonymous said...

பந்து தன் உருவத்தை இழந்தால் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கை ஒவர்களுக்குப் [ இது ரொம்ப ஒவர்தானே ? ;-) ] பிறகுதானே வேறொரு பந்து மாற்றுவார்கள். அதுவரை ஒரே பாலில் உயர்ந்தபட்சம் ஒரு அணியின் 10 விக்கெட்களையும் எடுக்கலாம்தானே ?

said...

பாலில் தயிர் மோர் வெண்ணெய் தானே எடுக்க முடியும் அதெப்படி விக்கெட் எனப்பார்த்தா ......

தலைப்பை மாத்துங்கப்பு

said...

நான் சொல்ல வந்ததை

இவர் சொல்லிவிட்டார்
"M Poovannan said...
பாலில் தயிர் மோர் வெண்ணெய் தானே எடுக்க முடியும் அதெப்படி விக்கெட் எனப்பார்த்தா ......""

said...

நந்து f/o நிலா said...
//உண்மை தமிழன் அண்ணன் ரேஞ்ல இருக்கு//

இப்படி சொல்லிடுவீங்கன்னு படாதபாடு பட்டும் இழுத்துடுச்சு
சுருக்கமா எழுதறது இவ்வளவு கஷ்டமா? :(////

அப்படியா ராசா ரொம்ப ரெத்தின சுருக்கமா இருக்கு:)))))))

said...

நன்றி பூவன்னன்,நன்றி குசும்பன்

said...

குசும்பா ப்ளாக்ல நான் நிலாவை விட குழந்தை. அதுனால ஆரம்பம் இப்படிதான் இருக்கும். வேற வழியே இல்ல :(

said...

அனானிமஸ் அண்ணாத்த, முடியல