PIT போட்டிக்கு அனுப்பாத போட்டோ

பைவ்ஸ்டார் ஹோட்டல்ல நடக்கும் விருந்துல உள்ளயும் போவாம வெளியயும் வராம கூச்சப்பட்டுகிட்டு தயங்கி நிக்கும் கிராமத்தான் போல நான் இருக்கேன் இப்போ.

அவ்வளவு ஹைகிளாஸா எல்லாரும் போட்டோ கொடுத்திருக்காங்க

என்கிட்ட இருப்பது 1.2 மெ.பி கேமெரா, சரி பூக்களை போட்டோ எடுத்ததே இல்லயே முயற்சிதான் பண்ணுவோம்னு வீட்டுக்கு பின்னாடி போய் சரியா 5 நிமிஷத்துல 15 போட்டோ எடுத்துட்டு வந்துட்டேன்.

எதோ பிற்தயாரிப்பு அப்படீன்னு சொல்றாங்களே அதயும் நம்ம அறிவு லெவலுக்கு செஞ்சு பாக்கலாம்னு அதயும் செஞ்சுட்டேன்




அடுத்து எல்லோரும் செம துல்லியமா படம் கொடுத்திருக்காங்க. நம்ம கொஞ்சம் வித்தியாசம் கொடுப்போம்ன்னு இந்த படம் (என்னால துல்லியமா படம் எடுக்க முடியாது ஹி ஹி)





ஆனா இரண்டு படத்தையுமே போட்டிக்கு அனுப்பும் ஐடியா இதுவரைக்கும் இல்லை.இந்த வாரத்தில் புது கேமரா வாங்கும் ஐடியா இருக்கு அதுல எதாச்சும் உருப்படியா எடுக்க முடியுமான்னு பாக்கறேன்

10 comments:

said...

முதல் படம் நல்லா வந்திருக்கு, கேமரா எப்பவும் இரண்டாம் பட்சம்தான், நல்ல composition and good post production, நிச்சயமா கலந்துக்கனும். வாழ்த்துக்கள்.

said...

மாம்ஸ் இது தான் ஈரோட்டு குசும்புங்கறதா...படம் ஜூப்பரா தானே இருக்கு...

said...

வல்லமைக்கு 1.2 பிக்ஸலும் ஆயுதம்.படம் நல்லாவே இருக்குது.

said...

ஒப்பாரி சார் நான் உங்க போட்டோல்லாம் பாத்துட்டுத்தான் ரொம்ப சோர்ந்து போனேன். இந்த போட்டோ பக்கதுலல்லாம் நம்மளுது நிக்குமான்னு. சரி நல்லாத்தான் இருக்குன்னு சொல்றீங்க. போஸ்ட் ப்ரொடொக்சன் சும்மா ஏனோதானோன்னு பண்ணீனேன். திரும்ப கொஞ்சம் அக்கறையா செய்யறேன்

said...

பவன்குட்டி போட்டில இருக்க மத்த போட்டொல்லாம் கொஞம் பாரு. உன் மாம்ஸ்ங்கரதால ஜூப்பர் சொல்ல கூடாது

said...

நட்டு சார் 1.2 போதும்தான். ஆனா crop பண்ணுனா படம் ரொம்ப மங்கலாயிடுது முதல்படத்துல அது தெரியுது பாருங்க

said...

//
Baby Pavan said...
மாம்ஸ் இது தான் ஈரோட்டு குசும்புங்கறதா...படம் ஜூப்பரா தானே இருக்கு...

//
ரிப்பீட்டேய்

said...

//
நட்டு said...
வல்லமைக்கு 1.2 பிக்ஸலும் ஆயுதம்.படம் நல்லாவே இருக்குது.

//
ரிப்பீட்டேய்

said...

//
நந்து f/o நிலா said...
பவன்குட்டி போட்டில இருக்க மத்த போட்டொல்லாம் கொஞம் பாரு. உன் மாம்ஸ்ங்கரதால ஜூப்பர் சொல்ல கூடாது

//
மத்த போட்டோவா அது எங்கிருக்கு
:-)))))))))

said...

சிவா மத்த போட்டோன்னா மத்தவங்க போட்டோன்னு அர்த்தம்.

ஆனா மத்த போட்டோ மறுபடியும் போடறேன் :P