சொந்த மரண தரிசனம் கிடைத்திருக்கிறதா? எனக்கு கிடைத்தது


சாவை நெருங்கிவிட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? கண்ணை மூடியதும் மரணம்தான் என நினைத்திருக்கிறீர்களா?. அதைவிட அது ஆனந்தமாகக்கூட இருக்கும் என தெரியுமா?

ஒரு வாரத்துக்கு முன்னாடி சரியான காய்ச்சல்ங்க எனக்கு. மூணு போர்வை போர்த்தி படுக்கும் அளவு குளிர்.மனைவியும் ஊரில் இல்லை. எனக்கு கால்ல முள்ளுகுத்திட்டா கூட பக்கத்துல மனைவி வேணும்( முள்ளு குத்துலைன்னாலும்தான்). அவசரமா அவள கிளம்பி வரச்சொல்லிட்டு எங்க பேமிலி டாக்டரிடம் போய் அவர பேசவே விடாம எனக்கு ஃபுட் பாய்சன் ஆயிடுச்சுன்னு சொல்லி. ஃபுட்பாய்சனுக்குண்டானா இருந்த இல்லாத சிம்டம்சைல்லாம் சொல்லி மருந்துவாங்கிட்டு வந்தாச்சு.

மூணுநாள் கோர்ஸ் மாத்திரை கம்ப்ளீட் ஆகியும் காய்ச்சல் விடவே இல்லை. உடம்பு கிழிஞ்ச நாறாயிடுச்சு. திரும்ப டாக்டரிடம் போய் ப்ளட்டெஸ்ட் பண்ணதுல( ப்ளட் டெஸ்ட் எடுத்த நர்ஸ நிலா கொலைவெறியோட பாத்தது தனிகதை) ப்ளேட்லெட் கவுண்ட்ஸ் அதளபாதாளத்துக்கு போனது தெரிஞ்சது. ப்ளேட்லெட்ஸைக் குறைக்கும் வைரல்ஃபீவர்.

உடனே ஒரு இஞ்செக்சன் ட்ரிப்போட போட சொல்லி எழுதி மூணாவது ஃப்ளோர்க்கு அனுப்பிட்டார். பொதுவாவே உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருக்கப்பவோ, பிசினஸ்ல லாஸோ, அல்லது டிஸட்வாண்டேஜா எதாச்சும் நடக்கும் போதெல்லாமோ எனக்கு எங்கண்ணனுக்கெல்லாம் நக்கல் நையாண்டி லொள்ளு திமிரு டபுளாயிடும். பிறவியே அப்படித்தான். அதே போலதான் சசி நிலாவோட ஏகப்பட்ட நக்கலோட ட்ரிப்போட போய் கையில் ஊசில்லாம் குத்தி ட்ரிப்பும் போட்டாச்சு.

கிட்ட்டதட்ட ஒரு லார்ஜ் அளவு மருந்து ஒண்ணை சிரிஞ்சில் எடுத்து எடுத்து ட்யூப் வழியா செலுத்திட்டு போயிட்டாங்க. அத போட்ட உடனே கிர்ருன்னு தலைல்லாம் சுத்த ஆரம்பிச்சிருச்சு. அந்த வழியா போன சிஸ்டர்கிட்ட "என்னங்க இது குவார்ட்டர் அடிச்ச மாதிரி இருக்கு"ன்னு கேட்டேன் சிரிச்சுகிட்டே போயிட்டாங்க,

ஆனா அப்படியே கான்சியஸ் போக ஆரம்பிச்சுது. ரொம்ப கஷ்ட்டப்பட்டு வார்த்தையை உள்ள இருந்து இழுத்து வந்துதான் ரெண்டு வார்த்தையே பேச முடிஞ்சது. வாய் வேற குழறுது. ஒரு சிஸ்டரை கூப்பிட்டு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இந்த மருந்து இப்படித்தான் ரியாக்ட் பண்ணுமான்னு கேட்டேன். இத கேக்கறதுக்கே அவ்ளோ கஷ்டமாயிடுச்சு. அதுக்கு அந்த நர்ஸ்..

" எத்தனை பேர் ட்ரிப் ஏத்திகிட்டு கம்முன்னு படுத்திருக்காங்க. நீங்க மட்டும் ஏன் சார் இப்படி பண்றீங்க?"

உஸ்ஸ்ஸ் என்னால முடியல.

இன்னொருவிஷயம் அந்த இஞ்செக்சனால உடம்பும் மனசும் அவ்ளோ ஆனந்தமா இருக்கு. அப்படியே மிதப்பது போல இருக்கு.துளி கூட பயம் வரல. ஆனா மருந்து அலர்ஜி ஆயிடுசான்ன கவலையாலதான் இந்த கேள்வில்லாம்.

இதுக்கு மேல கான்சியஸ இழுத்து பிடிக்க முடியல. கண் மூட ஆரம்பிக்குது. நினைவுதப்புது. சரி மருந்து அலர்ஜியாயிடுச்சு. மேட்டர் முடியபோவுது. கடைசியா சசிகிட்ட சொல்லிடுவோம்னு இருக்கும் சக்தியெல்லாம் திரட்டி
"ச..சீ இ..ங்..க பா..ரு" ன்னு இதை மட்டும்தான் சொல்ல முடிஞ்சுது. அவ அதுக்கு

"என்ன மாமா? பாப்பா கழுத்தபுடிச்சு கிள்ளாத. எத்தன தடவ சொல்றது. அப்புறம் பாரு. ம்ம்ம் சொல்லுங்க மாமா"

உஸ்ஸ் அப்பா நீயுமா? கொஞ்ச நாளா இப்ப வாங்கி கொடுத்த ஸ்கூட்டி பெப்பில் அவளா எல்லா வேலையும் பறந்து பறந்து செய்யறதுல பூரிச்சுப்போயிருந்தேன். நாம இல்லன்னாலும் என் நம்ம பொண்ட்டாட்டி எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிடுவான்னு.

அடி என் செல்ல கேனபுள்ள உன் புருஷன் செத்துகிட்டு இருக்கான் உனக்கு அதுகூட தெரியாம இருக்கியே கண்ணு.ட்ரிப் இறங்கி முடிஞ்சு பின்னாடிதான் நான் செத்ததே உனக்கு தெரியுமாட்டம் இருக்கு. இப்படி இருக்க நீ இந்த உலகத்துல இந்த குட்டி பொண்ண வெச்சுகிட்டு எப்படிடி சமாளிப்ப. எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவும் எனக்கு சக்தி இல்ல. சரி நமக்கான எல்லா வழியும் அடைபட்டிருச்சுன்னு நினைக்கும் போதே கான்சியஸ் அப்படியே போயிடுச்சு.
ஆனாலும் கடைசியா மனைவி குழந்தையை பத்தி நினைத்ததும் கண்முன் அவர்கள் நின்ற உருவமும் மட்டும் ஓரத்தில் அப்படியே இருக்கு.

ஆனால் இது எதுவுமே துக்கமாகவோ கஷ்டமாகவோ பயமாகவோ துளிகூட தெரியவில்லை. ஆனந்தகடலுக்குள் அல்லவா இருக்கிறேன்.

அப்படியே நான் மிதப்பதையும் எங்கோ செல்வதையும் உணர்கிறேன். அப்படியே ஒரு வெளிச்சமான வெளிச்சம் ஆனால் கண்ணை கூசாத ரம்மியமான இடத்தை பார்க்கிறேன். மிகப்பரந்தவெளி. இரண்டு அல்லது மூண்று அடி உயரத்தில் கண்ணுக்கு குளுமையான தூய வெண்மையில் அசையாத ஒரே அளவில் ஏதோ ஒண்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை எண்ணிலடங்காமல் இருக்கிறது.

அதை பார்க்கிறேன். மனதில் அப்படி ஒரு சலனமே இல்லாத அமைதி. மெதுவாக அந்த ஒன்றொன்றும் இந்த உலகின் உயிர்கள் என்று புரிகிறது. மீண்டும் அமைதி. எல்லா உயிர்களும் ஒரே அளவு ஒரே உயரம். ஒவ்வொண்றுக்கும் பாகுபாடில்லாமல் எல்லாமே ஒரே அளவு தரப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் யாரோ உணர வைப்பதாக படுகிறது. ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை.

எல்லோருக்கும் ஒரே அளவு தரப்பட்டிருந்தால் யாருக்கு யார் கொடுப்பது? யாரை யார் காப்பாத்துவது. எல்லாரிடமும் எல்லாமே இருக்கிறது. இதில் கொடுக்க என்ன இருக்கிறது எடுக்க என்ன இருக்கிறது.

இது தோண்றிய அடுத்த கணம் ஓரத்தில் மறையாமல் இருந்த மனைவியும் நிலாவும் மனதில் இருந்து சுத்தமாக மறைந்துவிட்டனர். இப்போ மனதில் பேரமைதி பேரானந்தம்.இனி இந்த உலகத்தில் என்னுடைய கடமை ஒண்றுமே இல்லை.அடுத்தது என்ன மரணம்தானே ஆஹா அதை பார்க்கலாம் எப்படி வருகிறது என்று ஆர்வத்துடன் ஆனந்தத்துடன் உற்று கவனிக்கிறேன். எந்த புள்ளியிலிருந்து வருமென்று. ம்ஹூம் வரவே இல்லை :(. கண்ணை விழித்துபாக்க தோண்றுகிறது. சிரமப்பட்டு முயற்சி செய்ய விழிப்பு வந்தது. முன்புபோலவே மயக்கத்துடன்.

பின்பு சசியை கூப்பிட்டு 5 நிமிடத்துக்கு ஒருதடவை பார்த்து கான்சியஸ் போகாமல் பாத்துக்கோ எனும்போதுதான் பாவம் அவளுக்கு சீரியஸ்னெஸ் புரிந்தது.

ட்ரிப் முடியும்போது ஓரளவுக்கு தெளிவாகிவிட்டேன். ட்ரிப் எடுத்த பின்பு ஹெட்நர்ஸை கூப்பிட்டு(அப்போதும் பேச்சு சரியாக வரவில்லை) இந்த மருந்து இப்படி எஃபெக்ட் கொடுக்குமென்று முன்னாயே சொல்லலாமில்லையா? தண்ணி அடித்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் எனக்கே இப்படின்னா மற்றவர்கள் என்ன ஆவாங்க என்றதுக்கு. நான்கைந்து நர்ஸ்களுமாக "பயந்துட்டீங்களா" என்று கொல்லென்று சிரித்தார்கள்.

மருந்தின் உபயம் மனசுல அப்படி ஒரு அமைதி. இல்லைன்னா அருவாளை தேடி இருப்பேன்.

திரும்பி வீடு வரும்போது எல்லாமே புதுசாக தெரிகிறது. அந்த ஆட்டுகுட்டி எவ்வளவு அழகா துள்ளி குதிக்குது. அந்த மரத்தின் பச்சை என்ன அற்புதம்.


ஒரு பெத்தடின் ஊசியிலோ ஒரு இழுப்பு கஞ்சாவிலோ கூட இப்படி ஒரு அனுபவம் நேரலாமாயிருக்கலாம். இது கூட அட்டு மேட்டராக இருக்கலாம். ஆனால் சாவுவந்துவிட்டது என்று பயமில்லாமல் ஆனத்தத்தோடு அதை எதிர்கொண்டு எல்லோருக்கும் வரும் குடும்ப கவலைக்கும் விடை கண்டு கிட்டதட்ட ஞானம் கிடைக்கப்பெற்ற ரேஞ்சில் ஸ்ஸ்ஸ் அப்பா அற்புதமான அனுபவம்ங்க.

இப்படி வலியில்லாமல் ஆனந்தமாக சலனமில்லாத மனசுடன் அமைதியாக மரணம் வருமெனில் மரனத்தை நேசிக்கிறேன்,


என் மனைவிக்குத்தான் வீட்டுக்கு வந்து விஷயம் முழுசா தெரிஞ்சு... பாவம் புள்ள மூணு மணி நேரம் மூடவுட்

======================================================

அடுத்த நாளும் ட்ரிப் போடவேண்டி இருந்தது. டாக்டரிடம் அனுபவத்தை சொன்னேன். சொல்லிவிட்டு இதற்காகவெல்லாம் அந்த இஞ்செக்சனை மாத்திடாதீங்க. அதையே போடுங்க எண்றதும். உனக்கு இனி அது கிடையாது. ப்ரிஸ்கிரிப்ஷனையும் வாங்கிக்கொண்டு விட்டார். விட்டா அதை நீயே வாங்கி போட்டுக்குவ. உனக்கு நல்லாயிடுச்சு ஓடிப்போயிடுன்னுட்டார்,

ஆக்சுவலா அது அலர்ஜிதான் ஆயிருக்கு.யாருக்கும் அப்படி ஆனதில்லையாம். ஆனால் எனக்கு கம்மியான அலர்ஜி ஆகி இருக்கு.

120 comments:

said...

ரொம்ப திகிலாக இருக்கிறது, தப்பி வந்த்திருக்கிறீர்கள் ! நல்வாழ்த்துகள் !

said...

உஙக் அனுபவத்தை நன்றாக் எழுதியிருகீறீர்கள் வாழ்த்துககள்

said...

yoov, ennayya nadakuthu///

said...

என்னய்யா.. பக்கத்துலயே இருக்கோமே.. சொல்றதில்லையா?

:-(

said...

இதுக்கு தான் வாழ்க்கைல எப்போவாச்சும் சீரியஸா இருக்கனும்னு சொல்றது.. இனியாவது கொஞ்சம் திருந்துங்க..

said...

ஹலோ! என்ன ஆச்சு!

படிக்கும்போது திகிலாயிடுச்சு!

உப்ப எப்படி இருக்கு உடம்பு?

said...

குணமடைந்து திரும்பியதற்கு நல்வாழ்த்துக்கள் :)))

said...

'நோயின்' பேரென்ன?

////எல்லோருக்கும் ஒரே அளவு தரப்பட்டிருந்தால் யாருக்கு யார் கொடுப்பது? யாரை யார் காப்பாத்துவது. எல்லாரிடமும் எல்லாமே இருக்கிறது. இதில் கொடுக்க என்ன இருக்கிறது எடுக்க என்ன இருக்கிறது/////

ஹ்ம். :)

said...

கேட்கவே பயமா இருக்கு..
இந்த விசயத்தையும் அழகா எழுதி இருக்கீங்க..

said...

ரொம்ப நன்றி கோவி. கொஞ்சம் தப்பிச்சு வந்த ஃபீலிங் இருக்கத்தான் செய்யுது :)

said...

நன்றிங்க கேபிள்சங்கர். அந்த அனுபவம் அப்படி :)

said...

// ILA said...

yoov, ennayya nadakuthu///


மாமு உங்களுக்கு போன்ல புளி போட்டு விளக்கியாச்சு

said...

//என்னய்யா.. பக்கத்துலயே இருக்கோமே.. சொல்றதில்லையா?//

இதோ இப்பத்தான் சொல்லியாச்சே. உடம்ப விசாரிக்க ஜானிவாக்கரோட வரவேண்டியதானே க்ருஷ்ணா. :P

said...

சஞ்சய் திருந்தறதுன்னா என்ன?

said...

சிபி மாமு. இப்ப உடம்பு ஜூப்பரா இருக்கு. ஊட்ல சோத்த கண்ல காட்ட மாட்றாங்க. கஞ்சிதான் ஊத்தறாங்க. அதான் பெரிய சோகம்

said...

மனமார்ந்த நன்றி ஜி

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
கேட்கவே பயமா இருக்கு..
இந்த விசயத்தையும் அழகா எழுதி இருக்கீங்க..//

பயமாவா? நீங்கவேற. உங்களுக்கு படிக்கத்தான் அப்படி இருந்ததே தவிற அது அப்படி ஒரு ஆனந்தமான அனுபவங்க.

ஒரு இடத்தில் கூட பய உணர்வு வரவே இல்லை.

said...

//கஞ்சிதான் ஊத்தறாங்க//

something is better than nothing!

Enjoy!

said...

அவ்வ் இப்ப நல்லா ஆச்சுல்ல, உடம்ப பாத்துக்குங்க.

said...

அடங்கொக்கமக்கா இந்த வாரம் என்ன செத்துபிழைச்சவர்கள் வாரமா!!!

அண்ணி சமைச்ச சாப்பாட சாப்பிட்டுமா இந்த தரிசனம் கிடைக்க டிலே ஆகி இருக்கு!!!

(இந்த கமெண்டை அவுங்ககிட்ட காட்டிடாதீங்க அடுத்த முறை வீட்டுக்கு வரும் பொழுது சாப்பாடு போட்டு விட போறாங்க, அப்புறம் அந்த கார்டன் ரெஸ்டாரண்ட் போக முடியாது).

said...

சர்வேசன், அந்த நோயின் பெயர் தெரியல. வைரல் பீவர். அந்த வைரல் பீவர் வந்தா ப்ளேட்லெட்ஸ் குறைந்துகொண்டே போகும்.

டாக்டர் எங்க குடும்ப நன்பர். இந்த ப்ளேட்லெட்ஸ் குறைக்கும் பீவரை மட்டும்தான் ரொம்பவும் சீரியசாக எண்ணுவார்.

சாதாரண சளின்னு போனா சளிக்கு மருந்து இல்ல. வெந்நீர் குடி ரெஸ்ட் எடு சரியா போயிடும்ன்னு தொரத்திவிட்டுடுவார்.

பணத்தை பற்றிய உணர்வே இல்லாத மிகமிகமிக நல்ல மனிதர்.

said...

//எனக்கு கால்ல முள்ளுகுத்திட்டா கூட பக்கத்துல மனைவி வேணும்( முள்ளு குத்துலைன்னாலும்தான்).//

குத்துலைன்னாலும் அவுங்களே குத்திவிடுவாங்களா???

said...

குசும்பா வாடி. வந்து வசமா இங்க மாட்டும்போது இப்ப எனக்கு வெச்சு ஊத்தும் கஞ்சியவே உனக்கும் ஊத்த சொல்றேன்

said...

//ப்ளேட்லெட் கவுண்ட்ஸ் அதளபாதாளத்துக்கு போனது தெரிஞ்சது. //

இதுக்கும் கொல்லிமலை டிரிப் போனதுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா?

said...

//ச..சீ இ..ங்..க பா..ரு" ன்னு இதை மட்டும்தான் சொல்ல முடிஞ்சுது. அவ அதுக்கு

"என்ன மாமா? //

பேரை எழுதும் பொழுது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும் கூப்பிடும் பொழுதுமா ஸ்பெல்லிங் மிஸ்டே வரும் என்று கேட்டாங்களா?

said...

//ஒரு இடத்தில் கூட பய உணர்வு வரவே இல்லை.//

ஆனா வாசிச்சப்போ எங்களுக்கு (எனக்கு?) பயம் வந்ததென்னவோ உண்மை.

said...

//இன்னொருவிஷயம் அந்த இஞ்செக்சனால உடம்பும் மனசும் அவ்ளோ ஆனந்தமா இருக்கு. அப்படியே மிதப்பது போல இருக்கு.//

என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்று சொல்வது சரி ஆகிடும் போல இருக்கு.

said...

உஸ்ஸ் அப்பா நீயுமா? கொஞ்ச நாளா இப்ப வாங்கி கொடுத்த ஸ்கூட்டி பெப்பில் அவளா எல்லா வேலையும் பறந்து பறந்து செய்யறதுல பூரிச்சுப்போயிருந்தேன்//

அட மனுசன் பறப்பதே ஆச்சர்யம், அதுல ஸ்கூட்டி பெப்பை வேற தூக்கிட்டு பறந்து பறந்து வேலை செய்யுறாங்களா?

said...

//நந்து f/o நிலா said...
குசும்பா வாடி. வந்து வசமா இங்க மாட்டும்போது இப்ப எனக்கு வெச்சு ஊத்தும் கஞ்சியவே உனக்கும் ஊத்த சொல்றேன்//

தயவு செய்து அதை வாயில் ஊற்ற சொல்லவேண்டாம், காதில் ஊற்ற சொல்லவும் அப்பதான் உயிர் பொசுக்கென்று போய்விடும்.
(காதில் பாஸ்சனை ஊற்றினா பொழைக்க முடியாது அது தெரியும்ல்ல)

said...

// பரிசல்காரன் said...
என்னய்யா.. பக்கத்துலயே இருக்கோமே.. சொல்றதில்லையா?

:-(//

இப்ப எல்லாம் பக்கத்தில் இருந்தாலு பதிவு போட்டு சொல்வதுதான் டிரெண்ட் செட்!

Anonymous said...

//அடி என் செல்ல கேனபுள்ள உன் புருஷன் செத்துகிட்டு இருக்கான் உனக்கு அதுகூட தெரியாம இருக்கியே கண்ணு.//

மாமா தெரிஞ்சு தான் பேசாம இருந்தேன்.

said...

//இப்ப எனக்கு வெச்சு ஊத்தும் கஞ்சியவே உனக்கும் ஊத்த சொல்றேன்//

நெம்ப நாள் வெச்சிருந்தா கெட்டுப் போயிடாது?

Anonymous said...

அப்பாக்கு பொப்பே இல்லைன்னு நான் சொன்னது சரியா போச்சா!

எவ்ளோ சீரியசான விஷயத்தை விளையாட்டா எழுதுறார் பார்ருங்க!

Anonymous said...

//இதுக்கும் கொல்லிமலை டிரிப் போனதுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா?
//

இல்லை!

Anonymous said...

//இதுக்கும் கொல்லிமலை டிரிப் போனதுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா?
//

இல்லை!

said...

பின்பு சசியை கூப்பிட்டு 5 நிமிடத்துக்கு ஒருதடவை பார்த்து கான்சியஸ் போகாமல் பாத்துக்கோ எனும்போதுதான் பாவம் அவளுக்கு சீரியஸ்னெஸ் புரிந்தது.//

அதுக்கு என்ன செஞ்சாங்க, உங்க போட்டோவை உங்க கிட்டேயே காட்டி காட்டி பயமுறுத்தி கான்சியஸ் போகாம பாத்துக்கிட்டாங்களா?

said...

என்னா'ண்ணே ஆச்சு???

said...

படிக்கும்போதெ திக் திக் ன்னு திகிலாத்தான் இருக்கு. ஆனா அதையும் காமெடியா எழுதியிருக்கீங்க!! குணமானதுக்கு வாழ்த்துக்கள்!!

said...

இப்போ உடம்பு எப்படி இருக்கு?

said...

எப்படி இருக்கீங்க ? அனுபவம் புதுமை !!!

said...

// ஒரு சிஸ்டரை கூப்பிட்டு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இந்த மருந்து இப்படித்தான் ரியாக்ட் பண்ணுமான்னு கேட்டேன். இத கேக்கறதுக்கே அவ்ளோ கஷ்டமாயிடுச்சு. அதுக்கு அந்த நர்ஸ்..//

அதுக்கு அந்த நர்ஸ் ;- இந்த சூழ்நிலையிலும் கடலை போடுறதா மட்டும் நிறத்த மாடிங்கலான்னு கேட்டாங்களே அதயும் சொல்லுங்க.

////எல்லோருக்கும் ஒரே அளவு தரப்பட்டிருந்தால் யாருக்கு யார் கொடுப்பது? யாரை யார் காப்பாத்துவது. எல்லாரிடமும் எல்லாமே இருக்கிறது. இதில் கொடுக்க என்ன இருக்கிறது எடுக்க என்ன இருக்கிறது/////

யன்னா தத்துவம் யன்னா தத்துவம்.

அண்ணா இதை ஒருநாளு கொண்டடிரலாம்.அப்போதான் மறுபடியும் வராம இருக்கும்.

நல்ல அனுபவந்தான்.

said...

குணமடைந்து திரும்பியதற்கு நல்வாழ்த்துக்கள் :)))

said...

//இதோ இப்பத்தான் சொல்லியாச்சே. உடம்ப விசாரிக்க ஜானிவாக்கரோட வரவேண்டியதானே க்ருஷ்ணா. //

உங்களையெல்லாம் WALKERலயே அடிக்காம விட்டாங்களே, தங்கச்சியச் சொல்லணும்..

said...

// சசி said...

//அடி என் செல்ல கேனபுள்ள உன் புருஷன் செத்துகிட்டு இருக்கான் உனக்கு அதுகூட தெரியாம இருக்கியே கண்ணு.//

மாமா தெரிஞ்சு தான் பேசாம இருந்தேன்.//

சூப்பர் குசும்பா!

said...

நந்து,

சீரியஸா சொல்லுங்க.. (மறுபடி சீரியஸா..)

இந்தக் கமெண்டையெல்லாம் படிக்கறப்ப ஆஸ்பத்திரி ட்ரீட்மெண்டைவிட பெட்டரா உணர்றீங்கதானே?

தட்ஸ் ஃப்ரெண்ட்ஸ்!

Anonymous said...

'சொந்த' மரண தரிசனமா? இரவல் வேற இருக்கா இதுல.

மரணவிளிம்பிலிருந்து திரும்பினதுக்கப்புறம் தான் ஆடு துள்ளிக் குதிக்கறது, மரம் பச்சையா இருக்கிறது எல்லாந்தெரியுது.

// பொதுவாவே உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருக்கப்பவோ, பிசினஸ்ல லாஸோ, அல்லது டிஸட்வாண்டேஜா எதாச்சும் நடக்கும் போதெல்லாமோ எனக்கு எங்கண்ணனுக்கெல்லாம் நக்கல் நையாண்டி லொள்ளு திமிரு டபுளாயிடும். பிறவியே அப்படித்தான். //

பாத்திருக்கேன்.

சுகமானதும் எங்கே எப்போ அடுத்த பயணம்?

said...

// சசி said...

//அடி என் செல்ல கேனபுள்ள உன் புருஷன் செத்துகிட்டு இருக்கான் உனக்கு அதுகூட தெரியாம இருக்கியே கண்ணு.//

மாமா தெரிஞ்சு தான் பேசாம இருந்தேன்.//

சூப்பர் குசும்பா! //

அடப்பாவிகள எல்லாருமா சேந்து குடும்பத்துல கொழப்பத்த உண்டுபன்னிருவிங்கலட்ட தெரியுதே :-))

நந்துணா பாத்து சூதனமா இருந்துக்குங்கங்க இல்ல நீங்களும் வந்து எங்க வரமட்டையர் சங்கத்துல சேர வேண்டியிருக்கும்.அப்புறம் என்னை நீங்க கல்யாணம் பண்ண சொல்லமுடியாது.வ ம சங்கத்துல ஒரு சீட்டு கேட்டு துண்டு போட வேண்டியிருக்கும்.

said...

உடம்ப பாத்துக்குங்க.

said...

குணமடைந்து திரும்பியதற்கு நல்வாழ்த்துக்கள் :)))

said...

அண்ணி சமைச்ச சாப்பாட சாப்பிட்டுமா இந்த தரிசனம் கிடைக்க டிலே ஆகி இருக்கு!!!

(இது குசும்பந்தான் என்னிய கேக்க சொன்னாருங்க அண்ணி! :))

said...

தருமி சார். மரண பயம்ங்கறது என்ன?

1 உடல் வலி பற்றிய பயம்.

2. பாக்கி இருக்கும் கடமைகள். குடும்பம் குழந்தைக்கு செட்டில் செய்வது.

3. நிறைவேறாத ஆசைகள்.

4.தவறு செய்திருப்பின் அதைப்பற்றிய உறுத்தல்களின் மீதான பயம்.

இவைகள்தானே மரண பயத்திற்கு ப்ரதானம்?

1. மருந்தின் உபயத்தால் எந்த வலியும் இல்லை

2.இது மட்டுமே எனக்கு இருந்தது. அதுவும் அந்த அனுபவத்தினூடேயே தெளிவாக்கப்பட்டுவிட்டது.

3. அப்படி எதுவும் எனக்கு பெரியதாய் இல்லை. நிறைவான சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாய் எண்ணுகிறேன். கம்பேரிட்டிவ்லி அப்படி இல்லாமல் இருக்கலாம். எனக்கு நிறைவெண்று படுவதுதானே நிறைவு.

4.தவறுகள் சின்னதும் பெரியதுமாய் செய்ததுண்டு. ஆனால் ஒவ்வொன்றிற்கும் பதில் பனிஷ்மெண்ட் வந்து அவை செய்த தவறுக்கு பதிலாய் வந்தவைதான் என் புரிந்து கிட்டதட்ட ஸ்கோர்ஸ் லெவலில் இருப்பதாய்த்தான் உணர்கிறேன்.

இந்த சூழ்நிலையில் ஒரு புதிய அனுபவத்தை தரிசிக்கப்போகும் ஆர்வம் வருவது இயற்கைதானே.

said...

குசும்பா உன் கமெண்ட் மொத்ததுக்கும் சசி பதில் ரெடி பண்ணி வெச்சிருக்கா. வீட்டுக்கு வரும்போது அதுக்கெல்லாம் பதில் தரப்படுமாம்.

said...

//நாமக்கல் சிபி said...

//இப்ப எனக்கு வெச்சு ஊத்தும் கஞ்சியவே உனக்கும் ஊத்த சொல்றேன்//

நெம்ப நாள் வெச்சிருந்தா கெட்டுப் போயிடாது?//

இப்பவே அப்படித்தான் இருக்கு

said...

ராம் நத்திங் சீரியஸ், சிங்கப்பூர் எப்படி குஜாலா இருக்கா?

said...

நன்றிங்க சந்தனமுல்லை.

said...

நன்றி JK

said...

//ராஜ நடராஜன் said...

எப்படி இருக்கீங்க ? அனுபவம் புதுமை !!!//

கண்டிப்பா. ரொம்பவே புதுமைங்க. இப்ப ரொம்ப நல்லா இருக்கேன். ரொம்ப நன்றி நட்டு சார்

said...

வெயிலான் சிலர் சாகும்போது பக்கத்திலிருந்து பார்க்க நேரிடும். அப்படி இல்லைங்கறதுக்குத்தான் சொந்த மரண அனுபவம்ன்னு சொன்னேன்.

சொல்லுங்க எங்க போலாம். நீங்க மேனேஜர் ஆனா பார்ட்டி வேற பெண்டிங்ல இருக்கு :)

said...

மிக்க நன்றிங்க புதுகைத்தென்றல்

said...

க்ருஷ்னா இப்ப இல்லை எப்பவுமே ஃப்ரெண்ட்ஸ் என்னோட சொத்துத்தான் :)

செல்வத்தின் அளவை இப்படியெல்லாம் அளவிட முடிந்ததால்தான் மரணம் அருகில் என்று நினைத்த போதும் அமைதி நிம்மதியெல்லாம்...

said...

ஆயிலு சசி ஒரு பேப்பர எடுத்து குறிச்சுகிட்டு இருக்கா. உன் பேரும் அதுல சேர போவுது :P

ரொம்ப நன்றி ஆயில்யன் :)

said...

//உங்களுக்கு படிக்கத்தான் அப்படி இருந்ததே தவிற அது அப்படி ஒரு ஆனந்தமான அனுபவங்க.//

உமக்கு ஆனந்தம்தான்! அடுத்தவங்களுக்கு?

said...

கார்த்திக்,"வரமட்டையர் சங்கம்" பேரு செம கலக்கல். நேட்டிவிட்டியோட இருக்கு. பார்ட்டைம் மெம்மரா சேர்ந்துகறேனே நானும்.

அப்புறம் சீக்கிரமா கொண்டாடிடலாம்தான். ஒரு மாசத்துக்கு சரக்குக்கும் தடா போட்டுட்டார் டாக்டர் :(

said...

//அப்புறம் சீக்கிரமா கொண்டாடிடலாம்தான். ஒரு மாசத்துக்கு சரக்குக்கும் தடா போட்டுட்டார் டாக்டர் :(//

ஒரு மாசமாச்சும் அடங்குனா சரிதான்!

said...

குணமடைந்து திரும்பியதற்கு வாழ்த்துக்கள்..

இனிமேலாவது உடம்ப பாத்துக்குங்க

said...

யோவ்! உண்மையாவே ஆரம்பத்துல நான் பயந்துட்டேன். பாதி படிச்சா பிறகு காமெடி னு தெரிஞ்சுது. நிலா போட்டோ தேவையில்லாம எதுக்கு போட்டீங்க?

குனமானதுக்கு வாழுத்துக்கள்.

said...

இந்த தரிசனம் ஒரு விபத்து. நீங்கள் எதையும் நேசிக்க வேண்டாம் குடும்பத்தைத் தவிர.

said...

குணமடைந்து திரும்பியதற்கு இறைவனுக்கு நன்றி !!

தற்செயலா இன்னிக்குதான் (... - ) பத்தி ஒரு நண்பரோட பேசிட்டுருந்தேன். அதப் பத்தி ஒரு பதிவும் போடணும்னு நெனச்சேன். தமிழ்மணத்துல உங்க பதிவு !!!

Anonymous said...

ஹே நந்து மச்சான். ஒடம்ப பாத்துக்கோப்பா. நான் அமெரிககாவுல இருந்து இந்தியா வந்தது தெரிஞ்சதும் பயத்துல குளிர்காய்ச்சல் வந்துடிச்சா? :))

Anonymous said...

//தவறுகள் சின்னதும் பெரியதுமாய் செய்ததுண்டு//

ஹ்ம்ம்ம்ம்.. ஞாபகம் இருந்தா சரி தான்... :(

Anonymous said...

//உஸ்ஸ் அப்பா நீயுமா? கொஞ்ச நாளா இப்ப வாங்கி கொடுத்த ஸ்கூட்டி பெப்பில் அவளா எல்லா வேலையும் பறந்து பறந்து செய்யறதுல பூரிச்சுப்போயிருந்தேன்//

ஹ்ம்ம்ம் என்ன பூரிச்சி என்ன புண்ணியம். வீட்ல இப்போ வேலைக்காரியும் இல்லை..நீங்க 11 மணிவரைக்கும் தூங்கறதால பாப்பா எழுந்துட்டா அவள பாத்துக்க ஆளில்லையேன்னு பக்கத்துல இருக்கிற உழவர் சந்தைக்கு போய் ஃப்ரஷ்ஷா காய்கறி கூட வாங்க முடியலையே மாமா.. :(

said...

உருப்புடாதது_அணிமா ரொம்ப நன்றிங்க

said...

Truth காமெடில்லாம் இல்லை. எனக்கு கஷ்டம் ரொம்ப தெரியாததால லைட்டா எழுதிட்டேன்.அலர்ஜி இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா ஆகி இருந்தா அம்புட்டுத்தான் :)

பாப்பா சோகமா கன்னத்துல கை வெச்சிருக்கும் படம் பொருத்தமா பட்டுச்சு. அதுக்கு மட்டும் வெவரம் தெரிஞ்சிருந்தா எப்படி ரியாக்ட் பண்ணி இருக்கும் அதான் அந்த படம்.

said...

// Mahesh said...

குணமடைந்து திரும்பியதற்கு இறைவனுக்கு நன்றி !!//

மகேஷ் பொதுவா இந்த மாதிரி சம்பவத்துக்கு பிறகு பெரும்பாலோனாருக்கு கடவுள் நம்பிக்கை வந்துவிடும்.

எனக்கு ஆச்சர்யம்தான் இப்பவும் வரலை.என் மேல் உள்ள உறுதியான நம்பிக்கை ஒரு காரணமாக இருக்கலாம்.

//தற்செயலா இன்னிக்குதான் (... - ) பத்தி ஒரு நண்பரோட பேசிட்டுருந்தேன்.//

ப்ராக்கெட்டுகுள்ள என்னங்க அது? சொல்லிடுங்க மண்டை வெடிச்சிடும் போல இருக்கு

said...

கருப்புநிலா,பழையக்காதலி, நொந்த சசி கமெண்ட்லாம் நல்லாத்தான் இருக்கு சஞ்சய். அடங்க மாட்டியா?

said...

ராமலக்ஷ்மி மேடம் குடும்பத்தை நேசிப்பதைவிட எனக்கு வேறென்ன இருக்கு. என் உலகமே அதுதான்.

இது விபத்துதான் இருந்தாலும் கிடைக்காத அனுபவமில்லையா?

said...

இப்ப எப்பிடி இருக்கீங்க. ரொம்ப வருத்தமா இருக்கு :(

said...

உடம்பை கவனித்துக்கொள்ளவும்.

//என் மனைவிக்குத்தான் வீட்டுக்கு வந்து விஷயம் முழுசா தெரிஞ்சு... பாவம் புள்ள மூணு மணி நேரம் மூடவுட்//

பாவம் :(

said...

கலக்கல் பதிவு

பதிவுனா நண்பர்கள் கிட்ட சுகதுக்கங்களை பகிர்தல்..மொக்கை கமெடி அரசியல் இப்படி எல்லாம் தான் இருக்கனும்..:)


உடம்பை பாத்துக்கங்க
உருப்படிகளையும் நினைச்சிகங்க !!!

said...

படித்து அதிர்தேன் நந்து.. உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.. பின்னூட்டங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வது உண்மை. அந்த மருந்தின் பெயரை கேட்டு எழுதிக்கொள்ளுங்கள். அடுத்த முறை எந்த மருத்துவரிடம் சென்றாலும் அந்த மருந்து அலர்ஜி என்பதை மறக்காமல் சொல்லுங்கள்...

said...

என்ன தலைவரே இது.. இப்படி பயமுறுத்திட்டீங்க :((

உடம்ப பத்திரமா பார்த்துக்குங்க..

said...

என்ன தலைவரே இது.. இப்படி பயமுறுத்திட்டீங்க :((

உடம்ப பத்திரமா பார்த்துக்குங்க..

said...

யப்ப்பா...

என்னங்ணா இப்பிடி திகில் படம் பார்த்த மாதிரி டெரர்ர கெளப்புறீங்க? இனிமே ஆஸ்பத்திரில ட்ரிப்ஸ்னாலே தெறிச்சி ஓடிருவேன்..

said...

அன்பின் நந்து

என்ன ஆச்சு

எதையும் விளையாட்டாய் எடுத்துக்கொள்கிறீர்களே - நியாயமா ?

பதறுகிறது மனம்

ஜாலியான நிலைக்குத் திரும்பியது அறிந்து மனம் மகிழ்கிறது

நல்வாழ்த்துகள் நந்து

said...

சிவா எல்லாம் நல்லாயிடுச்சு நோ ஃபீலிங்க்ஸ்

said...

நிஜம்தான் கயல்விழி.பக்கத்தில் இருந்தும் அதை உணராமல் போனதில் ரொம்ப கில்டிகான்சியஸ் அவளுக்கு. சமாதானப்படுத்தவேண்டி இருந்தது.

said...

வாங்க வெண்பூ. மருந்து எதோ ஒரு ஆண்டிபயாட்டிக்தான். கேட்டு வைக்க சான்ஸ் கம்மி. அந்த ஆனத்த அனுபவத்தை நான் விவரிச்சதை கேட்டுட்டு டாக்டர் சொல்ல மாட்டேங்கிறார்.

அதுக்கு கடைசியா ஒரு காரணம் சொன்னார் பாருங்க.

"குடிக்கர பசங்கள நான் நம்பறதில்ல"ன்னு.

நொந்துட்டேன்.

said...

சென்ஷி உடம்பு இப்ப பத்திரமா இருக்கு. இன்னும் பத்திரமான்னா பீரோகுள்ளாதான் வெச்சு பூட்டி வைக்கனும் :P

said...

//பதிவுனா நண்பர்கள் கிட்ட சுகதுக்கங்களை பகிர்தல்..மொக்கை கமெடி அரசியல் இப்படி எல்லாம் தான் இருக்கனும்..:)//

மின்னிது மின்னல் நீங்க சொல்றது நிஜம்தான்.
போன்ல மெயில்ல பின்னூட்டத்துல எல்லோரும் காட்டிய அக்கறையில் நெகிழ்ந்துதான் போனேன். என் மேல் பாசம் கொண்டவர்கள் எத்தனை பேர்.

பெருமையாத்தான் இருக்கு :)

said...

நன்றிங்க சரவனக்குமார்

said...

//அது சரி said...

யப்ப்பா...

என்னங்ணா இப்பிடி திகில் படம் பார்த்த மாதிரி டெரர்ர கெளப்புறீங்க? இனிமே ஆஸ்பத்திரில ட்ரிப்ஸ்னாலே தெறிச்சி ஓடிருவேன்..//


வேதாளத்தையே ட்ரில் வாங்குறவ்ர் நீங்க. ட்ரிப்புக்கு டரியல் ஆகலாமா?

said...

நன்றி சீனா சார். சார் ஜாலி மூடில் இருந்து நான் எப்பவுமே மாறுவதில்லை. என் பலமும் பலவீனமும் அதுவே.

ரொம்ப நன்றிங்க சார் ஆச்சிய கேட்டதாக சொல்லுங்க.

said...

அடடா,
அது தான் கொஞ்ச நாளா உங்களை ஃப்ளிக்கர் பக்கம் பாக்க முடியலியா? சீரியஸான விஷயத்தையும் காமெடியா எழுதிருக்கீங்க. சீக்கிரம் பரிபூரண குணம் அடைய வாழ்த்துகள்.

Anonymous said...

// சொல்லுங்க எங்க போலாம். நீங்க மேனேஜர் ஆனா பார்ட்டி வேற பெண்டிங்ல இருக்கு :) //

ஆஹா...... சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டேனே......

நான் கேட்டது ந.த.தீ பயணம். என்னோட பார்ட்டி தனி.

said...

நன்றி கைப்ஸ், அதான் சீரியஸ்லாம் முடிஞ்சாச்சே. அப்புறம் அத காமெடியா எடுத்துக்க வேண்டிதானே...

said...

வெயிலான் ந.த.தீ அப்படீன்னா?

said...

நந்து,

ஒரே சமயத்தில் பயத்தையும் ஆனந்தத்தையும் வரவழைத்தது உங்கள் அனுபவம். நன்றாக தேறி வாருங்கள்.

said...

யாருக்குமே கிடைக்காத அனுபவம் மரணம்.
(வந்தச்சுன்ன எங்கிருந்து அனுபவம்)
ஆனாலும் அதிலும் ஒரு இலக்கிய நயத்தோடு கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து எழுதியிருக்கிறீர்கள்.

said...

ஐயா கேட்டுகோங்க நான் தலைவர் பெரிய இலக்கியவாதின்னு சொல்லும் பொது இந்த பதிவ படிக்கவே இல்லை, இப்போவாவது ஒத்துகோங்க, ஈரோட்டில் ஒரு இலக்கிய சிங்கம் அமைதியா தூங்கிகிட்டு இருக்கு. யாரும் சீண்டி பாக்காதிங்க

said...

100

said...

லேட்டா வந்தாலும் நூறு அடிச்சோம்ல
அதனால தலைவருக்கு நூறு வயசு கெட்டி

said...

நன்றி அமல்

said...

வாலு இலக்கியவாதின்னு சொல்றீங்களா? இல்ல இலக்கியவியாதின்னு சொல்றீங்களா?

நன்றி வால்

said...

என்னய்யாது! ஏன் பிட் போட்டிலே படத்த காணோம்ன்னு கேக்க வந்தா இப்படியா!
எந்த ஆன்டிபயாடிக்குமே- ஏன் எந்த மருந்துமே கெடுதல் பண்ணாதுன்னு உத்திரவாதம் இல்லை. சாகக்கிடந்துதான் பிழச்சிருக்கீங்க.
now you have 8 more lives!
அப்புறமா டாக்டர்கிட்டெ கேட்டு அது என்ன மருந்துன்னு தெரிஞ்சுக்கிறது முக்கியம். பின் நாட்கள்ள இது அலர்ஜின்னு சொல்ல தெரிய வேண்டாம்?

incidentally you learnt some philosophy. think about it.

said...

நன்றி திவா.

அப்புறம்
''now you have 8 more lives!"

அப்படீன்னா என்னங்க?

said...

நல்லாருக்கு...

பின்னூட்டம் போடணும், போடணும்னு இருந்தேன் ஆனா என்னத்தை எழுதறதுன்னு தெரியாம விட்டுட்டேன்
இதைக்கூட ஸீடியசா எடுத்துக்கலைங்கிறது உங்கடை திருப்தியை காட்டுது

நல்ல மனசுங்க உங்களுக்கு...அதுதான்...

take care...

said...

எல்லோருக்குமே நல்ல மனசு இருக்குங்க தனிழன் :) மிக்க நன்றிங்க

said...
This comment has been removed by the author.
said...

திகில் அனுபவம். குணமடைந்ததற்கு வாழ்த்துக்கள். ஆனால் எல்லாவற்றையும் இப்படி ஸீரியஸ்னஸ் இல்லாமல் இருக்காதீர்கள். கொஞ்சம் முன்னெச்சரிக்கை தேவை.

said...

சொந்த மரண தரிசனம் கிடைத்திருக்கிறதா? எனக்கு கிடைத்தது"

இது சொந்த மரண தரிசனம் இல்லீங்க, உங்க மனைவி நொந்த மரண் தரிசனம் , அவங்கள கேட்டு எழுதுங்க, அப்புறம் நீங்க எழுதவே மாட்டீங்க.

said...

சொந்த மரண தரிசனம் கிடைத்திருக்கிறதா? எனக்கு கிடைத்தது"

இது சொந்த மரண தரிசனம் இல்லீங்க, உங்க மனைவி நொந்த மரண் தரிசனம் , அவங்கள கேட்டு எழுதுங்க, அப்புறம் நீங்க எழுதவே மாட்டீங்க.

said...

maddy எதுக்கு அந்த கமெண்ட்ட டெலிட் பண்ணனும் ஜாலியாதானே இருந்துச்சு?

said...

அமிர்தவர்ஷினி அம்மா. உண்மையில் நடந்தது ரொம்பவே ஒரு நல்ல விஷயம்தான். அதனால் என் மனைவி இப்போ சந்தோஷமா இருக்கா :)

//மனைவி நொந்த மரண் தரிசனம் //

ஹாஹா அந்த சமயத்திர்க்கு என்னவோ இது உண்மைதான்.

said...

குழந்தையின் படம் ரொம்ப அழகு.

பிடிச்சிருக்கு. எல்லாமே....பிடிச்சிருக்கு.

Anonymous said...

நிலா அப்பா, அலர்ஜியான மருந்து என்னா நிலா அம்மாதான் தெரிஞ்சுக்கணும். அவங்கள விட்டு டாக்டர் கிட்ட கேக்க சொல்லுங்க. அடுத்த தடவை ஏதும் ஆகாம இருக்க.தப்பிச்சு வந்தது சந்தோஷமா இருக்கு.

said...

//சின்ன அம்மிணி said...
நிலா அப்பா, அலர்ஜியான மருந்து என்னா நிலா அம்மாதான் தெரிஞ்சுக்கணும். அவங்கள விட்டு டாக்டர் கிட்ட கேக்க சொல்லுங்க. அடுத்த தடவை ஏதும் ஆகாம இருக்க.தப்பிச்சு வந்தது சந்தோஷமா இருக்கு.
//
athey...

said...

ஆனால் சாவுவந்துவிட்டது என்று பயமில்லாமல் ஆனத்தத்தோடு அதை எதிர்கொண்டு எல்லோருக்கும் வரும் குடும்ப கவலைக்கும் விடை கண்டு கிட்டதட்ட ஞானம் கிடைக்கப்பெற்ற ரேஞ்சில் ஸ்ஸ்ஸ் அப்பா அற்புதமான அனுபவம்ங்க.


சூப்பர் பா

said...

அது சரி 2008 க்கு அப்புறம் படங்களையும் காணோம், எழுத்துக்களையும் காணோம். மறுபடி அந்த ஆஸ்பத்திரிக்கு போய் ஊசியை போட்டு மண்டையைப் போட்டாச்சா. இப்பல்லாம் இருபது லட்சம் கொடுத்து டாக்டர் ஆயிடுறாங்க. அதனால கேட்டேன்.

said...

எனக்கு பேய்க்குளம், உங்களுக்கு சாத்தான் குளம், அதுனாலே ஒரு பாசம். சும்மா தூதுவளை படம் தேடினேன். உங்க ப்ளாக் வந்தது. ஏன் அதுக்கு அப்புறம் போஸ்டிங்கே இல்லே.

said...

என்னமோ போங்க..பல வருசம் கழிச்சு இன்னைக்குத்தான் இந்த பதிவை வாசிக்க வேண்டியிருக்கு.
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் ஒரு இம்மி கூட வித்தியாசமில்லாம அனுபவத்தை அப்படியே சொல்லியிருக்கீங்க...அனுபவமா அது...உயிர் வெளையாட்டு போல இல்ல இருக்கு...