Jan PIT போட்டிக்கு

கஷ்டப்படாம எடுத்த போட்டோவுக்கு போன மாசம் முதல் பரிச கொடுத்துட்டாங்க. இந்த முறை குறைந்தது நடுவர்கள் மானத்தை காக்கும் அளவுக்காச்சும் எடுக்கனும்ன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டேன். இந்த முறை நான் பரிசெல்லாம் எதிர்பார்க்கவில்லை

ஆனால் போட்டோகிராபி இன்னும் கண்ணாமூச்சிதான் காட்டுகிறது

போஸ்ட் ப்ரொடொக்சன் எதுவுமே பண்ணாமல் ஒரு போட்டோ கொடுக்க வேண்டும் என்ற முயற்சி முதல் போட்டோ

1.SANYO



உயிரோட்டத்துடன் ஒரு படம் இருக்க வேண்டும் என்ன முயற்சி. ஆனால் படிக்கைவிரிப்பின் கலரால் கோஞ்சம் சொதப்பலாகிவிட்டதென்று நினைக்கிறேன்

2.பாப்பா பொம்மையும் பாக்கி இருக்கும் பாலும்



இதில் SANYO எழுத்துக்கள் அழகாக வந்திருப்பதாக பட்டது எனக்கு

3.SANYO2



இன்னும் கொஞ்சம் பட்சை ஒழுங்குபண்ணி இருந்தால் நன்றாக வந்திருக்கும்.

4.பட்ஸ்



இது சும்மா இன்னொரு முயற்சி

5.SANYO3



மெழுகுவர்த்தியை எப்படி எடுப்பது? சொல்லிக்கொடுங்க ப்ளீஸ்

6.மெழுகுவர்த்தி



எப்படியாவது ஒரு துடைப்பத்தை ராயல் எபெக்ட்டில் எடுக்கனும்ன்னு நினைத்தேன். ஆனா ராயல் எபெக்ட் எப்படி எடுத்தா வரும்ன்னுதான் தெரியாம போச்சு.ஆனா செமத்தியா போஸ் கொடுத்துச்சு துடைப்பம். நமக்குத்தான் எடுக்க தெரியாம போச்சு

7.வெளக்குமாறு



வழக்கம் போல முத்ல் இரண்டு படங்களையே போட்டிக்கு கொடுத்து விடலாமா? எனக்கு மூண்றாவது படமும்பிடித்திருக்கிறது.

எதை போட்டிக்கு கொடுக்கலாம் கொஞ்சம் சொல்லுங்க. நாளைக்கு வரைக்கும் டைம் :)

ஒவ்வொரு படமா க்ளிக் பண்ணீ கஷ்ட்டப்படாம இருக்க இங்க க்ளிக் பண்ணிப்பாருங்க

ஆனா கமெண்ட்ட இங்க போடுங்க :P