வவ்வால் போட்டோ

வவ்வால தேட வேண்டிய அவசியம்லாம் இல்லாம போச்சு. அவரே நேத்து வீட்டுக்கு வந்தாரு. போட்டோ எடுக்க அந்த மறுப்பும் சொல்லவே இல்ல. அதும் விதவிதமான போஸ் கொடுத்து அசத்திப்புட்டாரு. கொஞ்சம் கூட அசரவே இல்ல.

இதுல ஒரு போட்டோ நம்ம PIT போட்டி வட்டத்துக்கு அனுப்பலாம்ன்னு ஐடியா முதல் போட்டோவ தவிர மத்ததுல எதுல வவ்வாலும் அதோட கண்ணும் நல்லா இருக்குன்னு சொல்லுங்க.

அதுக்கப்புறம் அந்த படத்துக்கு சீவி சிங்காரிச்சு(போஸ்ட் ப்ரொடக்சன்) போட்டிக்கு அனுப்பலாம்.

முதல் படத்த தவிர எல்லாமே க்ராப் பண்ணீத்தான் இருக்கு

28 comments:

said...

wow

சூப்பர்.

said...

அவ்வ் என்ன இது வவ்வால் என்று சொல்லிட்டு கங்காரு சைஸ்க்கு போட்டோ புடிச்சு போட்டு இருக்கீங்க!!!

said...

கலக்கல்...
:))

said...

சத்தியமாக உங்க புண்ணியத்துல வௌவாலை இன்னிக்குத்தான் இவ்வளவு நெருக்கமாகப் பார்க்கிறேன்.
எப்படிங்க இவ்வளவு தைரியமா பக்கத்துல போய் போட்டோ எடுத்தீங்க?
அது இன்னும் உயிரோடதானே இருக்கு?

படங்கள் அழகு... :)
வாழ்த்துக்கள்..!

said...

நந்து ,
இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன், என்னைக்கேட்காமலே என் படத்த போட்டு இருக்கிங்களே, சரி இருக்கிறதுல நல்ல படமா பார்த்து எனக்கு ஒன்னு பார்சல்... வாக்காளர் அடையாள அட்டைக்கு ஒரு புகைப்படம் கேட்டாங்க அதுக்கு படம் எடுக்கலாம்னு இருந்தேன், இப்போ செலவு மிச்சம் :-))

said...

:-)).. மப்பு கொஞ்சம் ஓவரோ? :))
அது சரி.. சனிக்கிழமை அப்படிதான் இருக்கும். :P

said...

நல்லாருக்கு படங்கள், ஆனா போட்டிக்கு ஏற்கனவே கண்கள் அனுப்பியிருக்காங்க அதுவும் சிறப்பான புகைப்படம் முடிந்தால் வேறு எதாவது முயன்று பாருங்கள். இங்கு closeup கண்கள் எல்லாமே அழகாதான் இருக்கு.

said...

நன்றி சிவா

said...

குசும்பா பிக்சல் குறைச்சுப் போட்டிருக்கேன். இதுக்கேவா? முழுசா பாத்தா மிரண்டு போயிடுவ போல? நீயெல்லாம் கண்ணாலம் கட்டி என்னாத்த பண்ணப்போறியோ :P

said...

நன்றி ஜெகதீசன்

said...

வவ்வாலை முதன் முறையாக இவ்வளவு பக்கத்தில் பார்க்கிறேன்..super

said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...
சத்தியமாக உங்க புண்ணியத்துல வௌவாலை இன்னிக்குத்தான் இவ்வளவு நெருக்கமாகப் பார்க்கிறேன்.
எப்படிங்க இவ்வளவு தைரியமா பக்கத்துல போய் போட்டோ எடுத்தீங்க?
அது இன்னும் உயிரோடதானே இருக்கு?

படங்கள் அழகு... :)
வாழ்த்துக்கள்..!//

அட நீங்க வேற, கிட்டத்தட்ட வவ்வால் மேலேயே கேமராவ முட்டிக்கூட படம் எடுத்துட்டேன்( பாயிண்ட் அண்ட் ஷூட்டர்ல ஜூம் பண்ணா தெளிவா இல்லை)
அப்பவும் அது பயப்படவே இல்லை.

அது உயிரோடும் சகல சவுக்கியங்களோடும் நல்லா இருக்குங்க

said...

வவ்வால் உங்க ப்ரொபைல்ல இன்னும் படம் போடாமத்தானே இருக்கீங்க. வேணும்னா சொல்லுங்க நிஜமாவே எடுத்ததுல நல்ல போட்டோஸ அனுப்பி விடறேன்

said...

சஞ்ஜய் யாருக்கு மப்புன்னு சொல்ற? எனக்கா வவ்வாலுக்கா? :P

said...

நன்றிங்க பாசமலர்

said...

ஒப்பாரி சார் கண்டிப்பா இந்தமாச போட்டிக்கு வந்த படங்கள்ள முதல் 20 இடத்துல கூட வர முடியாது அதனால வெரைட்டி கொடுத்தோம்ன திருப்தியாச்சும் இருக்கட்டுமேன்னு நினைச்சேன்.

ஆனா நீங்க சொல்றதும் சரிதான்.

இன்னைக்கு கோவா போறேன். அங்க எதாச்சும் வட்டம் சிக்குதான்னு பாக்கறேன் :P

said...

//
நந்து f/o நிலா said...

இன்னைக்கு கோவா போறேன். அங்க எதாச்சும் வட்டம் சிக்குதான்னு பாக்கறேன் :P

//
ஓ அப்ப வீக் எண்ட் போஸ்ட் நீங்க போட போறீங்களா????
அவ்வ்வ்வ்

said...

//
நந்து f/o நிலா said...
சஞ்ஜய் யாருக்கு மப்புன்னு சொல்ற? எனக்கா வவ்வாலுக்கா? :P
//
அப்ப ரெண்டு பேருமே ஒண்ணாதான் தண்ணி போட்டீங்களா??????

said...

//நந்து f/o நிலா said...

சஞ்ஜய் யாருக்கு மப்புன்னு சொல்ற? எனக்கா வவ்வாலுக்கா? :P//

கோவா ல இருந்து வந்ததும் நான் போடற போட்டோ பாருங்க. அப்புறம் தெரியும் மப்பு யாருக்குனு.. :P

said...

//SanJai said...
கோவா ல இருந்து வந்ததும் நான் போடற போட்டோ பாருங்க. அப்புறம் தெரியும் மப்பு யாருக்குனு.. :P//

எக்குத்தப்பான போட்டோ போட்டீன்னா உன்னோட ஸ்டேஜ் குத்தாட்ட வீடியோவ குசும்பன்கிட்ட கொடுத்து
பப்ளிஷ் பண்ண சொல்லிடுவேன்

said...

//
நந்து f/o நிலா said...

எக்குத்தப்பான போட்டோ போட்டீன்னா உன்னோட ஸ்டேஜ் குத்தாட்ட வீடியோவ குசும்பன்கிட்ட கொடுத்து
பப்ளிஷ் பண்ண சொல்லிடுவேன்
//
அண்ணே அந்த வீடியோ ரொம்ப நாளா தேடிகிட்டிர்ருக்கேன் வீக் எண்ட் வீடியோ போட !!

said...

//எக்குத்தப்பான போட்டோ போட்டீன்னா உன்னோட ஸ்டேஜ் குத்தாட்ட வீடியோவ குசும்பன்கிட்ட கொடுத்து
பப்ளிஷ் பண்ண சொல்லிடுவேன//
சமாதானம்.. சமாதானம்.. :((

...குசும்பன் தான் இதுகெல்லாம் வினியோகஸ்தரா?.... நாங்களாம் விருது வாங்கின வினியோகஸ்தர்.. எங்களாண்டயேவா? :P


-------

//அண்ணே அந்த வீடியோ ரொம்ப நாளா தேடிகிட்டிர்ருக்கேன் வீக் எண்ட் வீடியோ போட !!//

யோவ் மாமா.. ஏன் இப்படி கொல வெறியோட திறியறிங்க? போய் ஒழுங்கா புள்ளைங்கள படிக்க வைங்க. வந்துட்டாங்க வீடியோ குடு.. வீடியோ குடுனு.. :(

said...

//
SanJai said...

யோவ் மாமா.. ஏன் இப்படி கொல வெறியோட திறியறிங்க? போய் ஒழுங்கா புள்ளைங்கள படிக்க வைங்க. வந்துட்டாங்க வீடியோ குடு.. வீடியோ குடுனு.. :(

//
பக்கத்தூ வீட்டு புள்ளைங்களத்தான் பக்கத்து வீட்டுக்காரன் படிக்க வைக்கிறானே!!

நமக்கென்ன புள்ளையா குட்டியா??

ஆனாலும் அந்த 'வீக் எண்ட் வீடியோவ' அப்லோட் பண்ணாம விட மாட்டேன்!!

said...

வவ்வால்னா எனக்குரொம்ப பயம்

said...

நான் மூண்றாவது படிக்கும் போது ஒரு வௌவாலை செல்லப்பிரானியாக வளர்த்தேன். அப்போதெல்லாம் கேமரா என்பது என்னால் கற்பனை கூட பண்ணிப்பார்கமுடியாத ஒன்று...

said...

delphine மேடம் வவ்வால் மனுசன விட மோசமான ப்ராணி இல்லைங்க. பாவம் அதுக்கு போய் எதுக்கு பயப்படரீங்க :)

said...

செல்லப்பிராணியா வவ்வாலையா? வாவ் கருப்பன் கேக்கவே ஆசையா இருக்கு

said...

இரண்டாவது...மற்றும் முதலாவது. வவ்வாலை பக்கத்தில் பார்த்தால், பாவமாக இருக்கும்...