Jan PIT போட்டிக்கு

கஷ்டப்படாம எடுத்த போட்டோவுக்கு போன மாசம் முதல் பரிச கொடுத்துட்டாங்க. இந்த முறை குறைந்தது நடுவர்கள் மானத்தை காக்கும் அளவுக்காச்சும் எடுக்கனும்ன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டேன். இந்த முறை நான் பரிசெல்லாம் எதிர்பார்க்கவில்லை

ஆனால் போட்டோகிராபி இன்னும் கண்ணாமூச்சிதான் காட்டுகிறது

போஸ்ட் ப்ரொடொக்சன் எதுவுமே பண்ணாமல் ஒரு போட்டோ கொடுக்க வேண்டும் என்ற முயற்சி முதல் போட்டோ

1.SANYO



உயிரோட்டத்துடன் ஒரு படம் இருக்க வேண்டும் என்ன முயற்சி. ஆனால் படிக்கைவிரிப்பின் கலரால் கோஞ்சம் சொதப்பலாகிவிட்டதென்று நினைக்கிறேன்

2.பாப்பா பொம்மையும் பாக்கி இருக்கும் பாலும்



இதில் SANYO எழுத்துக்கள் அழகாக வந்திருப்பதாக பட்டது எனக்கு

3.SANYO2



இன்னும் கொஞ்சம் பட்சை ஒழுங்குபண்ணி இருந்தால் நன்றாக வந்திருக்கும்.

4.பட்ஸ்



இது சும்மா இன்னொரு முயற்சி

5.SANYO3



மெழுகுவர்த்தியை எப்படி எடுப்பது? சொல்லிக்கொடுங்க ப்ளீஸ்

6.மெழுகுவர்த்தி



எப்படியாவது ஒரு துடைப்பத்தை ராயல் எபெக்ட்டில் எடுக்கனும்ன்னு நினைத்தேன். ஆனா ராயல் எபெக்ட் எப்படி எடுத்தா வரும்ன்னுதான் தெரியாம போச்சு.ஆனா செமத்தியா போஸ் கொடுத்துச்சு துடைப்பம். நமக்குத்தான் எடுக்க தெரியாம போச்சு

7.வெளக்குமாறு



வழக்கம் போல முத்ல் இரண்டு படங்களையே போட்டிக்கு கொடுத்து விடலாமா? எனக்கு மூண்றாவது படமும்பிடித்திருக்கிறது.

எதை போட்டிக்கு கொடுக்கலாம் கொஞ்சம் சொல்லுங்க. நாளைக்கு வரைக்கும் டைம் :)

ஒவ்வொரு படமா க்ளிக் பண்ணீ கஷ்ட்டப்படாம இருக்க இங்க க்ளிக் பண்ணிப்பாருங்க

ஆனா கமெண்ட்ட இங்க போடுங்க :P

21 comments:

said...

பார்டர் கட்டனும் வேலி கட்டனும் என்று டவுட் பெருசா கேட்டீங்க ஒன்னியும் கானும்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

முதல் படம் அருமை!!!

said...

//பாப்பா பொம்மையும் பாக்கி இருக்கும் பாலும்//

பாப்பா குடிக்கும் பாலை போட்டோ போடுறீங்களே, நீங்க குடிச்சிட்டு மீதி வைக்கும் பாட்டிலையும் கிளாசையும் போட்டோ புடிச்சு போட தில் இருக்கா?
என் ரூமில் பசங்க இந்த நேரம் பார்த்து பாட்டில் ஏதும் வாங்கி வைக்கவில்லை இல்லையென்றால் அதையும் போட்டோ புடிச்சு இருப்பேன்!!!

said...

பட்ஸ் நானும் டிரை செஞ்சேன் ஆனால் போஸ்ட்டில் போடவில்லை:)

said...

பாட்டரியும் பட்ஸும் நல்லாருக்கு..

said...

ம்ம்ம் எல்லாரும் சேர்ந்து எனக்கு ஆப்பு வெச்சிட்டீங்களே மாசா மாசம் மொத ஆளா போட்டா போட்டிட்டிருந்தேன் இந்த மாசம் ஒன்னு கூட தேரமாட்டேங்குதே

said...

//
குசும்பன் said...
பாப்பா குடிக்கும் பாலை போட்டோ போடுறீங்களே, நீங்க குடிச்சிட்டு மீதி வைக்கும் பாட்டிலையும் கிளாசையும் போட்டோ புடிச்சு போட தில் இருக்கா?
என் ரூமில் பசங்க இந்த நேரம் பார்த்து பாட்டில் ஏதும் வாங்கி வைக்கவில்லை இல்லையென்றால் அதையும் போட்டோ புடிச்சு இருப்பேன்!!!
//

ரிப்பீட்டேய்...

said...

மொத ரெண்டு படமுமே நல்லா இருக்கு!!!

said...

குசும்பா பார்டர் கட்டலைன்னாத்தான் நல்லா இருக்க மாதிரி ஒரு ஃபீலிங்

மீதிவெச்ச டம்ளர் போட்டோ ரொம்ப சுமாரா இருந்ததால உனக்கு மெயில் பண்ணீட்டேன்

said...

நன்றி பாசமலர். பேட்டரின்னு மொத்தமா சொல்லிட்டீங்க. முதல் பேட்டரி படத்தைத்தானே சொல்றீங்க?

said...

இம்சை உண்மைல பூக்களை எடுக்கும் போது நாம சுமாரா எடுத்தாலும் பூவோட அழகே படத்த அழகாக்கிடுது.

அன்றாட உபயோக பொருள்கள்னா போட்டோ எடுத்துப்பாத்தா உருப்படாமத்தான் வருது. கொஞ்சம் விஷயம் இருந்தாத்தான் இதெல்லாம் அழகா எடுக்க முடியும் போல :(. நாம அதுக்கு எங்க போறது :((

ஏதோ கெடச்சத எடுத்து என்னைய மாதிரி போட்டு விடுங்க.

எல்லாத்துக்கும் மேல அந்த சர்வேசன் இருக்கார். :P

said...

சிவா நீயுமா? உனக்கும் சரக்கடிச்ச டம்ளர் போட்டோ வேணுமா?

said...

பட்டுக் குஞ்சலம் கட்டியிருந்தா துடைப்பத்துக்கு ராயல் எபக்ட் வந்திருக்கும்.;)

said...

படங்கள் அசத்தல் !

said...

டீச்சர் பட்டுகுஞ்சலம்ன்னா என்ன?
பட்டுபுடவையா?
அதை இதுல கட்டுனா அப்புறம் விளக்குமாத்தாலயே எனக்கு அடி விழும் :(

said...

நன்றி கோவி. கண்ணன் சார், அப்படியே எந்தெந்த படம் நல்லா இருக்குன்னு கொஞ்சம் சொல்லிடுங்க.ஒரே கன்ப்யூசா இருக்கு

said...

sanyo எல்லாமே அமக்களமா இருக்கு.

said...

முதல் படமும். 4வது படமும் ஜூப்பரு.. :) அந்த பட்ஸ் படம் ரொம்ப சூப்பர். வெள்ளை கைப்பிடி போட்ட இரும்புக் கம்பிகளை நெருப்பில் வைத்திருப்பது போல். கருப்பு வண்ண பின்புலத்தில் வெள்ளையும் ஆரஞ்சும் ..அட அட... இத போட்டிக்கு அனுப்புங்க.:)

said...

நன்றி சர்வேசன், அப்போ ரெண்டுமே sanyo போட்டோவா கொடுத்துடலாமா?

said...

சஞ்சய் நீ சொல்றது சரிதான். அந்த பட்ஸ் போட்டோ இன்னும் சிலது தீ எபெக்ட்ல நல்லா இருக்கு. ஆனா சோம்பேறித்தனத்துல ஒழுங்கா அடுக்காம விட்டுட்டேன். அதுனால அந்த படம் போட்டிக்கு இல்லை

said...

முதல் பாட்டரி படம்தான்..

said...

First pic is gud.