மெகா போட்டிக்கு, சின்னதா ஒண்ணே ஒண்ணு

சுத்தமா எனக்கு ஒத்து வராத சப்ஜக்ட். பேசாம சைலண்ட்டா இருந்துடலாம்ன்னு பாத்தா இதுக்கு முன்னாடியே பல பேருக்கு போட்டில கலந்துக்கறது பத்தி ஓவர் அட்வைஸ் பண்ணிட்டேன். அவங்கள்ளாம் திருப்பி அட்வைசினா தாங்க மாட்டேன்.ஜீவ்ஸ் வேற மானம், மரியாதைன்னு ஒரு லெக்சர் கொடுத்தார்.

ஓகே கடைசில ஒரே ஒரு படம் மட்டும். இதுவும் பொன்னு வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல. ஒப்பேத்தல்தான்



எனக்கென்னமோ இந்த மாதிரி ஆள் இல்லாத சின்னகோவில்கள்தான் கடவுள்ன கான்செப்ட்டுக்கு பக்கத்துல வர மாதிரி தெரியும். நாமளா போய் கும்பிட்டுட்டு நெத்தில நாமளே திருநீர் அள்ளி அப்பிகிட்டு அக்கடான்னு அரை மணி நேரம் உக்காந்துட்டு வந்தா ஒரு திருப்தி கிடைக்கும்.

கூட்டமான கூட்டம் நெரியும் இடத்துல எப்படி கடவுள்தண்மையை உணர்ராங்கன்னுதான் தெரியல.

சரி அதெல்லாம் அவங்கவங்க நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாத எனக்கெதுக்கு இந்த கவலை.

படத்த பாத்து நாலு திட்டு திட்டனும்னா திட்டிட்டு போங்க. படத்துல பல தப்பு இருக்கு :(

24 comments:

said...

// கூட்டமான கூட்டம் நெரியும் இடத்துல எப்படி கடவுள்தண்மையை உணர்ராங்கன்னுதான் தெரியல.//

ஆஹா தத்துவம் தத்துவம்

படம் நல்ல வந்திருக்கு இன்னும் சில படங்கள் போட்டிருக்கலாம்.

வெற்றி பெறவாழ்த்துக்கள்.

said...

ஒண்ணே ஒண்ணானாலும்
கண்ணே கண்ணெனக் கொடுத்திருக்கீங்க.
அமைதியான கிராமத்து கோயிலும் அழகான வானமும் நல்லா வந்திருக்கு.

said...

நந்து சார், படம் உண்மையிலேயே அழகா இருக்கு... நீங்க சொன்ன அமைதி படத்தைப் பார்க்கும் போதே கிடைக்குது... அதுதான் உங்களூக்கான பரிசு!

said...

படம் அருமை, அதைவிட விளக்கம் அருமையோ அருமை?

எந்தூருங்க மாமு இது?

said...

ஏனுங்க இந்த கோவில் ஆந்திராலேயா இருக்கு?
:-))
[இல்ல, பின்னால வன்டில தமிழ் எழுத்துதான் இருக்கு.}

எனக்கும் ஏகாந்தமா இருக்கிற இடங்கள் பிடிக்கும்.
ஆமா,
கலர ரொம்ப தூக்கிட்டா மாதிரி இருக்கே! சுவரெல்லாம் இப்படியா பயங்கர நீல கலர் ல இருக்கு?

// கூட்டமான கூட்டம் நெரியும் இடத்துல எப்படி கடவுள்தண்மையை உணர்ராங்கன்னுதான் தெரியல.//

அது நம்ம மனசிலதான் இருக்கு! கூட்டத்தால distractஆகிரது நாமதானே! அது இல்லைனா எங்கே வேணா உணரலாம்.

said...

//ஆஹா தத்துவம் தத்துவம்//
//இன்னும் சில படங்கள் போட்டிருக்கலாம்.//
அனத்த விடமாட்டீங்களே.
இந்த படமே எனக்கு திருப்தியா இல்ல கார்த்திக் அதான் ஒண்ணே ஒண்ணு மட்டும்.

அட்லீஸ்ட் போடும் படம் நம்மளையாச்சும் திருப்திபடுத்தனும் :(

said...

நன்றிங்க ராமலக்ஷ்மி. HDR படம் அதனால வானம் அப்படி தெரியுது

said...

நன்றி தமிழ்பிரியன். நீங்க சொன்னதே எனக்கு பரிசுதான் :)

said...

// ILA said..
எந்தூருங்க மாமு இது?//

மாம்ஸ் இது சென்னிமலைக்கு முன்னாடி வெள்ளோடு பறவைகள் சரணாலயம் போறதுக்கு கட் பண்ற இடத்தில் இருக்கு

said...

//திவா said...
கலர ரொம்ப தூக்கிட்டா மாதிரி இருக்கே! சுவரெல்லாம் இப்படியா பயங்கர நீல கலர்ல இருக்கு//

வாங்க திவா. கலர் கொஞ்சமே கொஞ்சம் தூக்கிடுச்சுதான். ஆனா இந்த கோவிலில் புதுசா சுண்ணாம்பு அடிச்சிருந்தாங்க. புதுசா அடிக்கும் போது நீலம் கொஞ்சம் தூக்கலா சுண்ணாம்பில் சேர்த்து விடுவாங்க.

அதுவுமில்லாம இந்த மாதிரி கோவில்களில் எல்லா கலருமே அடிக்கற மாதிரி தான் இருக்கும். அதுக்காகவே இத படம் எடுத்தேன்.

ஆனா எனக்கு முதல் HDR படம். லிட்டில் சொதப்பல்ஸ் :)

said...

யோவ் அண்ணாத்த, என்ன யா கமெண்ட் அடிச்சிருக்கீறு? உங்களோட படத்த பாதப்றோம் நான் விளகலாமானு கூட நெனைச்சிட்டேன். HDR கலக்கலா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

said...

Nalla irukku :)
HDR panna color konjam thookala thaan irukkuthu. :)
Naanum HDR muyarchi pannen. Konjam color jaathi agiduchu :(

said...

ஹெச்டிஆர் செய்யறப்ப முன்னிருப்பை தட்டிகிட்டே போனா அப்படிதான் வருது. நானும் இதே தப்புதான் முதல்ல செஞ்சேன்.
அப்புறமா பாத்தா டோன் மாப் செய்யறப்ப அத சரி பண்ணிடலாம்ன்னு தெரிஞ்சது. சரி செஞ்ச படம் இன்னும் என் ப்ளாக்லே போடலே.:-(

said...

இப்ப பாருங்க http://chitirampesuthati.blogspot.com/

said...

truth இப்படியே நல்லா உசுப்பேத்திவிடுங்க. :)

வாழ்த்துக்களுக்கு நன்றி

said...

உண்மைதான் நாதாஸ். நல்ல வெய்யில்ல எடுத்த படம் அது இல்லைன்னா HDR பண்ணி இருக்க வேண்டியது கூட இல்ல.

அப்புறம் கலர்ஸ் கொஞ்சம் தூக்கலாவேதான் அந்த கோயில்ல இருந்துச்சு. படத்துல அதைவிட கொஞ்சம் தூக்கலா வந்துடுச்சு :)

said...

திவா HDR படங்களில் செயற்கைதண்மை தவிர்க்க முடியாதது.அதனாலேயே பல பேருக்கு HDR படங்கள் பிடிப்பதில்லை.

டோன் மேப்பிங்கில் ஒரு நாலு அஞ்சு ஆப்சன் மட்டும் வெச்சிருந்தா எதோ சமாளிக்கலாம். எக்கசக்க ஆப்சன் கொடுத்தா எல்லாத்திலயும் கைய வெச்சு கடைசில சோர்ந்து போ விட்டா போதும்டா சாமின்னு ஆயிடுது. :)

உங்க படத்துல கடைசியா வந்தது நீங்க பாத்தது மாதிரியே இருந்தாலும் அதுக்கு முன்னாடி வந்ததுதான் எனக்கு புடிச்சுது.

ஏன்னா வேற வேற எக்ஸ்போஷர்ல எடுப்பதை ஒரே படமா கொடுப்பதுதான் HDR ன் சிறப்பு. ஆனா கடைசியா நீங்க போட்டிருக்கும் படத்தை HDR இல்லாமயே நீங்க ட்ரை பண்ணீ எடுக்க முடியும்.

சரிதானேங்க? அப்புறம் போட்டோகிராபி மேல ரொம்ப லவ்வாயிட்டீங்க போல? :P

said...

அருமை!

சூப்பர்!

படத்தைப் பற்றி சொல்லல...

நீங்க எழுதியிருக்கற மேட்டர்.

படத்தைப் பற்றி கமெண்டற அளவுக்கு நான் இன்னும் வளரலீங்க..

said...

நிறைய details இருக்கர படம் HDR பண்ணா நல்லா வரும்.

கோயில் அழகா இருக்கு, ஆனா, சம்திங் மிஸ்ஸிங்?

said...

//திவா HDR படங்களில் செயற்கைதண்மை தவிர்க்க முடியாதது.அதனாலேயே பல பேருக்கு HDR படங்கள் பிடிப்பதில்லை.//

எனக்கும்தான்! :-D

// டோன் மேப்பிங்கில் ஒரு நாலு அஞ்சு ஆப்சன் மட்டும் வெச்சிருந்தா எதோ சமாளிக்கலாம். எக்கசக்க ஆப்சன் கொடுத்தா எல்லாத்திலயும் கைய வெச்சு கடைசில சோர்ந்து போ விட்டா போதும்டா சாமின்னு ஆயிடுது. :)//
:-))
நல்ல அனுபவம்தான்!

// உங்க படத்துல கடைசியா வந்தது நீங்க பாத்தது மாதிரியே இருந்தாலும் அதுக்கு முன்னாடி வந்ததுதான் எனக்கு புடிச்சுது.//

சரிதான். நான் கண்டதெல்லாம் நீங்க காணவில்லையே!
:-))
பயாஸ் இல்லாம பாக்கிரப்ப அது நல்லதா தோணும்தான்.

// ஏன்னா வேற வேற எக்ஸ்போஷர்ல எடுப்பதை ஒரே படமா கொடுப்பதுதான் HDR ன் சிறப்பு. ஆனா கடைசியா நீங்க போட்டிருக்கும் படத்தை HDR இல்லாமயே நீங்க ட்ரை பண்ணீ எடுக்க முடியும்.//

போச்சுடா! இப்ப இன்னொரு சாலன்ஞ் வந்துருச்சே!

// சரிதானேங்க? அப்புறம் போட்டோகிராபி மேல ரொம்ப லவ்வாயிட்டீங்க போல? :P //
ரொம்ப சரிதான்!
இப்படி ப்ளாக் பதிவு போடறது கொஞ்சம் சுலபமா இருக்கு! இல்லாட்டா மணிக்கணக்குல எழுதி....

said...

//படத்தைப் பற்றி கமெண்டற அளவுக்கு நான் இன்னும் வளரலீங்க.//

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க க்ருஷ்ணா

said...

//நிறைய details இருக்கர படம் HDR பண்ணா நல்லா வரும்.//

கரெக்ட்டுத்தாங்க சர்வேசன். ஆனா HDR படமாத்தான் போடனும்ன்னு நெனைக்கல. கொளுத்தும் வெய்யில்ல ரெண்டு படம் எடுத்துப்பாத்த உடனேயே இது ஒத்துவராதுன்னு தெரிஞ்சுபோய்தான் HDR க்கு ட்ரை பண்ணேன்.

இன்னொரு கொடுமை ட்ரைபேட் இல்லாமலே கூட HDR க்கு ட்ரைபண்ணலாம்ன்னு இந்த படம் எடுத்துதான் தெரிஞ்சுகிட்டேன். இது தெரியாம எத்தனை சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன் :(

//
கோயில் அழகா இருக்கு, ஆனா, சம்திங் மிஸ்ஸிங்?//

சம்திங் இல்ல ஏகப்பட்டதிங்க்ஸ் மிஸ்ஸிங் :).
ரெண்டு பேர் சாமிகும்பிட்டாங்க அதையும் எடுத்தேன். ஆனா சேர்த்தா சரியா வரல. சரியா வந்திருந்தா கொஞ்சம் உயிரோட்டத்தை கொடுத்திருக்கலாம். அப்புறம் ரைட் சைட் ஓப்பனா இருந்திரிந்தா நல்லா இருந்திருக்கும்.

வாசலுக்கு எதிரில் சூலாயுதம் இருந்ததால ஒரு சாட்ல இருந்து எடுத்த படம் கோவில் லேசா சாஞ்சு தெரியுது.

இப்படி ஏகப்பட்ட. சரி பிக்காசா 3 யால கம்பி அழிச்சிருக்கேன் எப்படி இருக்கு? அத சொல்லுங்க

said...

//இப்படி ப்ளாக் பதிவு போடறது கொஞ்சம் சுலபமா இருக்கு! இல்லாட்டா மணிக்கணக்குல எழுதி....//

ஹிஹி திவா சேம் ப்ளட்...

said...
This comment has been removed by the author.