ஜோடி போட்டிக்கு.... கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு.. இந்த படம் பாத்தா

இந்த தடவைதாங்க போட்டித்தலைப்புக்கு நிறயபடம் ஏற்கெனவே எடுத்து வெச்சதுலயே தேறுச்சு.இருந்தாலும் புதுசா எடுத்து போடுவோமேன்னு முயற்சி பண்ணதுல தேறுனது இரண்டுபடம்.

1.கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு.அடுத்தவங்க அந்தரங்கத்த எட்டிப்பாத்ததுல.ஆனா இவங்கள நான் டிஸ்டர்ப் பண்ணவே இல்ல இல்ல இல்ல.

The Stolen Privacy

2.எனக்கு புடிச்சதுன்னா இந்த நாய்குட்டி படம்தான் ஆனா இத விட பட்டாம் பூச்சி க்ளாரிட்டி நல்லா இருந்ததால அது தான் போட்டிக்கு.
"puppy love"???

இதுக்கு அடுத்து வருவதெல்லாம் ஒரு மாசம் முன்னாடியே எடுத்தது.உங்களின் பார்வைக்கு

3.மறைந்து முகம்காட்டுவது பெண்ணா?


4.தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சுக்கனும்.

தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சுக்கனும்.

5.நிலாவும் புது கொலுசும்
ஜல் ஜல்

43 comments:

said...

பட்டாம் பூச்சி ஜோடி நல்லா இருக்கு....

said...

பட்டாம்பூச்சிக்கு பரிசு நிச்சயம். என் desktop படமா போட்டிருக்கேன்.

said...

பட்டாம்பூச்சியும் ஜோடிக் கொலுசும்
நல்லாருக்கு!!

said...

எல்லாமே நல்லாருக்கு.. அதுவும் அந்த நாய்க்குட்டி ரெண்டும் ரொம்ப க்யூட்.. கொலுசுப்பாதம் அழகு.. பட்டாம்பூச்சி க்ளியரா இருப்பதால்போட்டிக்குன்னு சொல்றதும் சரிதான்..

said...

எல்லா படமும் “கொல்லுது”.

said...

பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துகள்.போட்டிக்குச் சரியான ஜோடிதான் :) :)

கடைசிப் படம் கொள்ளை அழகுன்னு நிலாகிட்ட சொல்லிடுங்க :)

Anonymous said...

first of all clarity - good

then antha white malar...wow enna oru white. beautiful

said...

all pictures are amazing.. specially 1,2 and the last one

said...

எல்லா படமும் அழகா இருக்கு , முதல் படத்தில் background out focus ஆகி அழகான க்ளியாரிட்டி கொடுத்திருக்கு வாழ்த்துக்கள்.

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
எல்லாமே நல்லாருக்கு.. அதுவும் அந்த நாய்க்குட்டி ரெண்டும் ரொம்ப க்யூட்.. கொலுசுப்பாதம் அழகு.. பட்டாம்பூச்சி க்ளியரா இருப்பதால்போட்டிக்குன்னு சொல்றதும் சரிதான்..
//

//ரவிசங்கர் said...
பட்டாம்பூச்சிக்கு பரிசு நிச்சயம். என் desktop படமா போட்டிருக்கேன்.
//

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஜுப்பர் ஜூப்பரா இருக்கு :))

ஹலோ புரைபைல் போட்டோ! எவ்ளோ நிலா பாப்பா போட்டோ இருக்க இது எதுக்கு ? முதல்ல தூக்குங்கப்பா! :)

said...

பட்டாம் பூச்சி ஜோடி நல்லா இருக்கு.
கொலுசும் நல்லாருக்கு.

said...

///ஹலோ புரைபைல் போட்டோ! எவ்ளோ நிலா பாப்பா போட்டோ இருக்க இது எதுக்கு ? முதல்ல தூக்குங்கப்பா! :)////


ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...
This comment has been removed by the author.
said...

அத்தனை படங்களும் அட்டகாசம். இப்படி அசத்தரீங்களே.. நாங்களெல்லாம் போட்டியில கலந்துக்கறதா வேண்டாமா?

said...

நந்து,

மேக்ரோபோட்டோகிராபில உங்களை அடிச்சுக்க முடியாது போல! :)

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!

said...

//நாங்களெல்லாம் போட்டியில கலந்துக்கறதா வேண்டாமா?//

எனக்கும் நாய் குட்டி படம் தான் பிடிச்சுது

said...

My favorites- the first and last one. Very creative.

Good Luck.

said...

நிலாப்பா! படமெல்லாம் சூப்பரா இருக்கு... நாய் படம், நிலா பாப்பா கால், பட்டாம் பூச்சி சூப்பரோ சூப்பர்..... வாழ்த்துக்கள்... :)

said...

படங்கள் எல்லாம் சும்மா அதிருது! முதல் படம் அருமை. இரண்டாவது படம் நெஞ்சை தொடுகிறது.

said...

என் வோட்டு கொலுசுகளுக்குத்தான் ஏன்னா எனக்கு கொலுசுகள் ரொம்பப்பிடிக்கும்...ஆனா இன்னும் கொஞ்சம மினக்கெட்டிருக்கலாம் கொலுசுகளை படம் எடுப்பதற்கு...

said...

பட்டாம் பூச்சியும் நல்லாயிருக்கு
படம் எல்லாமே தரத்தில்முன்னேறியிருக்கு..

said...

நந்து,

படங்கள் அனைத்தும் top quality.
முதல் படம் தலைப்பிற்கு அத்தனை பொருத்தம். இரண்டாவது படத்தின் உணர்வு நம்மை எங்கோ அழைத்துச்செல்லுகிறது:-) வெற்றி பெற வாழ்த்துகள்.

said...

ரெண்டாவது படமும் ,அஞ்சாவது படமும் கலக்கல் :)

said...

I love the second pic... All the Best !!!

said...

//இராம்/Raam said...
பட்டாம் பூச்சி ஜோடி நல்லா இருக்கு....//

நன்றி ராம்

-------------------------------------
//ரவிசங்கர் said...

பட்டாம்பூச்சிக்கு பரிசு நிச்சயம். என் desktop படமா போட்டிருக்கேன்.//

நீங்க டெஸ்க்டாப்ல படமா போட்டதே எனக்கு பரிசுதான் ரவிஷங்கர். மிக்க நன்றி

-----------------------------------
//நானானி said...

பட்டாம்பூச்சியும் ஜோடிக் கொலுசும்
நல்லாருக்கு!!//

வருகைக்கு மிக்க நன்றிங்க நானானி.

-----------------------------------
// கயல்விழி முத்துலெட்சுமி said...

எல்லாமே நல்லாருக்கு.. அதுவும் அந்த நாய்க்குட்டி ரெண்டும் ரொம்ப க்யூட்.. கொலுசுப்பாதம் அழகு.. பட்டாம்பூச்சி க்ளியரா இருப்பதால்போட்டிக்குன்னு சொல்றதும் சரிதான்..//

மிக்க நன்றிங்க கயல்விழி

---------------------------------

//வடுவூர் குமார் said...

எல்லா படமும் “கொல்லுது”.//

ஹாஹா நன்றிங்க வடுவூர் குமார்

-----------------------------------

//NewBee said...

பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துகள்.போட்டிக்குச் சரியான ஜோடிதான் :) :)

கடைசிப் படம் கொள்ளை அழகுன்னு நிலாகிட்ட சொல்லிடுங்க :)//

நிலாகிட்ட சொல்லியுஆச்சுங்க NewBee :). வருகைக்கு நன்றி.

-----------------------------------

said...

// Anonymous said...

first of all clarity - good

then antha white malar...wow enna oru white. beautiful//

நன்றிங்க

----------------------------------

//கையேடு said...

all pictures are amazing.. specially 1,2 and the last one//

நன்றிங்க கையேடு

----------------------------------

//ஆயில்யன் said...

ஹலோ புரைபைல் போட்டோ! எவ்ளோ நிலா பாப்பா போட்டோ இருக்க இது எதுக்கு ? முதல்ல தூக்குங்கப்பா! :)//

ஆயில்யன் என்ன அநியாயம் இது. ஒரே ஒரு இடத்துல என் படத்த போட்டுட்டேன் அதையும் விட மாட்டீங்க போல? ஆல்ரெடி என்ன போட்டோ எடுக்க ஆள் இல்லன்னு ஃபீலிங்ல இருக்கேன் :(

------------------------------------
//நிஜமா நல்லவன் said...

பட்டாம் பூச்சி ஜோடி நல்லா இருக்கு.
கொலுசும் நல்லாருக்கு.//

நன்றி பாரதி, ப்ரொபைல் போட்டோக்கு நீங்களும் ரிப்பீட்டா? எத்தன பேரு கிளம்பி இருக்கிங்க?

அப்புறம் நீங்க எடுத்த போட்டோல்லாம் எங்க காணோம்? சீக்கிரம் போடுங்க

---------------------------------

//madyy said...

ஹா !!!! ஹயயூ ..... !!! எண்டே குருவாயுஉரா ... , யான் கண்டிட்ட்டில்லா.....


சாரே... கால் ஓகே, நாய் குட்டி ஓகே, பட்டாம்பூச்சி கொஞ்சம் டூமச்சா இல்ல உங்களுக்கு......


பக்சே புகைப்படம் super .//

madyy சேட்டா உங்க கமெண்ட் எனக்கு ரெம்ப இஷ்டமாயிட்டு :)

----------------------------------

//சூர்யா said...

அத்தனை படங்களும் அட்டகாசம். இப்படி அசத்தரீங்களே.. நாங்களெல்லாம் போட்டியில கலந்துக்கறதா வேண்டாமா?//

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க சூர்யா. வருகைக்கு நன்றிங்க

said...

நன்றி இளவஞ்சி, பழைய டிஜி கேமரால மேக்ரோமோட்லயே நிறய முயற்சி பண்ணதால இன்னும் அத விட்டு வெளிய வ்ரமுடில :)

அதுவுமில்லாம ஆரம்பகட்ட போட்டோகிராபிக்கு மேக்ரோமோட் ரொம்ப வசதின்னு நினைக்கிறேன்.

கரெக்ட்டா என்ன புடிச்சுட்டீங்க :)

said...

// கார்த்திக் said...
எனக்கும் நாய் குட்டி படம் தான் பிடிச்சுது//

ஆமா கார்த்திக் எனக்கும் ரொம்பவே புடிச்ச படம் அது,ஆக்சனில் இருக்கும் படங்கள் அழகு மட்டுமல்ல. க்ளாரிட்டியவிட ஒரு படிமேல்தான்

-------------------------------------
// priya said...

My favorites- the first and last one. Very creative.

Good Luck.//

நன்றி ப்ரியா

-----------------------------------

// தமிழ் பிரியன் said...

நிலாப்பா! படமெல்லாம் சூப்பரா இருக்கு... நாய் படம், நிலா பாப்பா கால், பட்டாம் பூச்சி சூப்பரோ சூப்பர்..... வாழ்த்துக்கள்... :)//

நன்றி தமிழ்ப்ரியன்.

----------------------------------

//Sathiya said...

படங்கள் எல்லாம் சும்மா அதிருது! முதல் படம் அருமை. இரண்டாவது படம் நெஞ்சை தொடுகிறது.//

நன்றிங்க சத்யா,

----------------------------------

said...

// ஒப்பாரி said...

எல்லா படமும் அழகா இருக்கு , முதல் படத்தில் background out focus ஆகி அழகான க்ளியாரிட்டி கொடுத்திருக்கு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க ஒப்பாரி, உங்க பாராட்டு எனக்கு எப்பவுமே ஒரு டானிக் :)

------------------------------------
// தமிழன்... said...

என் வோட்டு கொலுசுகளுக்குத்தான் ஏன்னா எனக்கு கொலுசுகள் ரொம்பப்பிடிக்கும்...ஆனா இன்னும் கொஞ்சம மினக்கெட்டிருக்கலாம் கொலுசுகளை படம் எடுப்பதற்கு...//

ஆமாம் தமிழன். என்ன ஆச்சுன்னா எனக்கு கேமரா புதுசு. டக்டக்குன்னு செட்டிங்க்ஸ் மாத்த தெரியல. சோ ஆக்சனில் நல்ல போஸில் எடுத்த கொலுசுக்கால் எல்லாமே ஷேக் ஆயிடுச்சு. இது ஒண்ணுதான் தேறுச்சு. சரி மறுபடியும் முயற்சிபண்ணலாம்னா பாப்பா கால்ல கொசுகடிச்சு வீங்கிடுச்சு. :(
படம் எடுத்தா வீக்கம்லாம் தெரியுது, சரி நம்ம பாப்பா நம்ம கொலுசு, நம்ம கேமரா எப்பவேணா எடுத்துக்கலாம்ன்னு விட்டாச்சு :).

சொல்லிட்டீங்கள்ள நல்லதா ஒண்ணு எடுத்திடுவோம்.

மிக்க நன்றி தமிழன்

said...

// Amal said...

நந்து,

படங்கள் அனைத்தும் top quality.
முதல் படம் தலைப்பிற்கு அத்தனை பொருத்தம். இரண்டாவது படத்தின் உணர்வு நம்மை எங்கோ அழைத்துச்செல்லுகிறது:-) வெற்றி பெற வாழ்த்துகள்.//

வாழ்த்துக்கு மிக்க நன்றி அமல். போன போட்டியில் உங்க படம் அருமையோ அருமை.

நீங்கள் சொல்லும் படத்தின் உணர்வு நம்மை எங்கேயோ அழைத்துப்போவது அந்த படத்தில் அருமையாக வந்திருந்தது.

----------------------------------

// ரசிகன் said...

ரெண்டாவது படமும் ,அஞ்சாவது படமும் கலக்கல் :)//

நன்றி ஸ்ரீ ,

நிலா படம் ஒண்ண பாத்துட்டா மத்த படத்தையெல்லாம் ஒதுக்கிடுவியே.. :)

-----------------------------------
//nathas said...

I love the second pic... All the Best !!!//

நீங்க ரெண்டாவது படத்தைத்தான் சொல்வீங்கன்னு நினைத்தேன் நாதாஸ். :)

போட்டிக்கு நீங்க எடுத்த படமெல்லாம் பட்டாசு கிளப்புது.

said...

அல்டிமேட் படம்ங்க 1உம் 2உம். கலக்கறீங்க. வாழ்த்துகள்.

said...

நிலாவும் கொலுசும் மனசுக்குள்ளே மணை போட்டு உக்காந்துச்சு.

முதல் படம்................

மூச்சு முட்டுது....சூப்பர்.

வெற்றிப் படியில் மேலே உச்சாணியில் நிக்கிறீங்க.

வாழ்த்து(க்)கள்.

said...

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்கநன்றிங்க கைப்புள்ள

said...

//நிலாவும் கொலுசும் மனசுக்குள்ளே மணை போட்டு உக்காந்துச்சு.//

மணைக்கு சதுர அடிக்கு இவ்வளவுன்னு ரேட் போட்டுடாதீங்க :P

துளசி மேடம் உங்க வாழ்த்துக்கு மிக நன்றி.

said...

பட்டாம்பூச்சி,நாய்க்குட்டி,கொலுசுன்னு வரும் மாதங்களில் தலைகளுக்கு தலைப்புகளுக்கான இன்ஸ்பிரேசன்.

said...

66 தான் சரியான பூத்தா.நான் 67ல போய் ஓட்டு அதுவும் 3 படத்து மேல கிளிக்கிட்டு வந்துட்டேன்.

said...

2 வது நாய்குட்டி படம் கலக்கல்!

said...

All pics are gud. Especially Nila's legs with kolusu... Excellent.

said...

நட்டு சார் எப்படியும் நமக்குன்னு தோணாத தலைப்புதான் கொடுக்க போறாங்க பாருங்க,

66வது பூத்தா? அட என்னன்னு தெரியல. எனக்கு ரெண்டு லிங் கொடுத்து வெச்சிருக்காங்க :)

சரி ஒரு வெளம்பரமா இருக்கட்டுமேன்னு நானும் ஒண்ணும் சொல்லல :P

said...

நன்றி சிவா, நான் நாய்குட்டியானேன்னு ஒரு கவிதைய போட்டுடுவியா? உ8ன் கவுஜ தொல்ல தாங்கலப்பா :P

said...

நன்றிங்க ஆதி

said...

கொலுசு மிக மிக நல்ல புகைப்படம்.

said...

அருமை
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com