PIT போட்டிக்கு அனுப்பும் பூ... எருக்கம்பூ

இன்னைக்குத்தான் கடைசி தேதின்னு இப்பத்தான் தெரிஞ்சுச்சு. போன பதிவுல பரவாயில்லாமத்தான் இருக்குன்னு சொன்னதால இப்ப போட்டிக்கு நானும் வந்தாச்சு.








1.2 மெகாபிக்சல் கேமராங்கரதால க்ராப் பண்ணுன பின்னாடி படம் கொஞ்சம் மங்கலாயிடுது.

அதே போல எல்லாரும் செம கலர்புல்லான பூக்களை அனுப்பி இருக்காங்க. எனக்கு எருக்கம்பூ ரொம்ப பிடிக்கும். அதனால எல்லா படமுமே எருக்கம்பூதான்.

முதல் படத்தையும் மூன்றாவது படத்தயும் போட்டிக்கு அனுப்பலாம்ன்னு நெனைக்கறேன்.

21 comments:

said...

கடைசி நேரத்தில் புத்தி மாறிப்போச்சு. முதலிரண்டு படங்கள்தான் போட்டிக்கு

said...

1.2 மெகா பிக்ஸலா? SLR காமிராவில் எடுத்த மாதிரி அருமையா இருக்கு...

auto focus ஆகத்தான் இருக்கனும்...ஆனாலும் depth நன்றாக உள்ளது.

said...

நல்ல படங்கள்!
வெள்ளேருக்கம் பூ படம் கிடைத்தால் போடவும்.

said...

வித்தியாசமான பூக்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நந்து !

said...

பிரபு ராஜதுரை சார் போட்டோ சாதாரணம்தான். போஸ்ட் ப்ரொடொகசன்ல படம் கொஞ்சம் தெளிவா தெரியுது

said...

யோகன் பாரீஸ் சார் முதலில் வெள்ளெருக்கைத்தான் தேடி படம் எடுக்க நினைத்தேன். இப்பவெல்லாம் அது ரொம்ப அரிதாகத்தான் கிடைக்கிறது. ஆனால் படத்துக்கு இந்த எருக்குதான் நல்லா இருக்கும் என்று நினைத்தேன். கண்டிப்பாக வெள்ளெருக்கு படம் எடுத்து போடுகிறேன்.
( உங்கள் சின்ன வயது கிராமத்திலாகத்தான் இருக்க முடியும். இல்லையெனில் வெள்ளெருக்கு தெரிய வாய்ப்பு குறைவு, சரிதானே?)

said...

நன்றி சதங்கா சார்

said...

Dec 2007 போட்டியில் முதல் பரிசு உங்களுக்கு தான்... வழ்த்துக்கள்

said...

நந்து!
என் இளமைக்காலக் கிராம வாழ்வு இறைவன் எனக்குத் தந்த மிகச் சிறந்த பரிசாகக் கருதுகிறேன். கலைக் களஞ்சியத்தை ஒத்த இயல்பு வாழ்க்கை அது.
ஈழத்தில் பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரர் கோவிலைச் சுற்றி நிறைய அக்கறையுடன் வெள்ளெருக்கு வளர்க்கப்படுகிறது.
2004 ல் சென்ற போது வீடியோவில் படமாக்கினேன். அவை டியிஸ்ரலில் படமாக இல்லை.
இது சிவனாருக்கு உகந்தபூ....கம்பர் கூட "வெள்ளெருக்கம் சடைமுடியான்" எனப் பெருமைப்படுத்துகிறார்.
கிடைத்தால் படம் போடவும்.

said...

முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள் நந்து அங்கிள்..

(சசி அக்கா கிட்ட நல்ல பேரு கிடைச்சிருக்குமே?..ஹிஹி..)

அன்புடன் ரசிகன்.

said...

மாமா நிலா குட்டிக்கு எங்களோட வாழ்த்துக்கள். எங்க நிலா சொல்லிதராம இருந்துஇருந்தா முதல் பரிசு கிடைச்சிருக்குமா...

said...

வாழ்த்துக்கள் , படங்களை அனுப்ப ரொம்ப தயக்கம் காட்டினீர்கள் இப்போ முதல் பரிசு வாங்கியாச்சு, இன்னும் கெமிரா வாங்கறேன்னு சொல்றீங்க வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.

said...

நன்றி நன்றி தீபா. உங்கள் கமெண்டை பார்த்ததும் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்து உங்க ப்ரொபைல்லாம் போய் செக் பண்ணிவிட்டு வந்தேன். அவ்வளவு நம்பிக்கை என் மேல்

said...

யோகன் பாரீஸ் சார் உங்களுக்காகவே வெள்ளெருக்கு படம் எடுத்து போடுகிறேன்

said...

ரசிகன் சசி என்ன முதல் பரிசுன்னு சொன்ன உடனே என்ன கொடுமை இதுன்னு சொன்னா :P

said...

பவன்குட்டி உன் ஃபிரெண்ட் சொல்லி எடுத்ததுதான் எல்லாமே. எல்லாப்புகழும் நிலாவுக்கே :)

said...

Congrats to you Nandhu!!!

said...

ஒப்பாரி சார் உண்மையில் உங்களுக்கும் நட்டு சாருக்கும்தான் நன்றி சொல்லனும். நீங்கள்ளாம் சொன்னதால்தான் நம்பி மருபடியும் கொஞ்சம் அக்கறையா போஸ்ட் ப்ரொடோக்சன்லாம் செஞ்சு அனுப்பினேன்.
கடைசில உங்களுக்கு செகண்ட் எனக்கு பர்ஸ்ட் என்ன கொடுமை சார் இது?

said...

நன்றி ப்ரியா. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

said...

ada romba paakathu oorkararaa! vaalthukkalunga!

said...

நன்றி செல்லா. நான் உங்க பக்கத்து ஊரேதான் :)